Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஜூன் 11 ஆம் தேதி ஒரு அபூர்வமாக கிரக பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. அதுவும் இந்த கிரக மாற்ற நிகழ்வானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அது என்னவெனில், கிரகங்களின் இளவரசனான புதனும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் ஒரே நாளில் ஒரே நட்சத்திரத்தில் நுழையவுள்ளனர்.
இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது ஜூன் 11 ஆம் தேதி நிகழும் அபூர்வ கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றங்களால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.
சிம்மம்
புதன் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நட்சத்திரத்திற்கு செல்வதால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு புதிய மாற்றத்துடன் முன்னேற்றமும் ஏற்படும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு அல்லது வெளியூரில் பணிபுரியும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். இதுவரை வேலைகளில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பதோடு, பல வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


