உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிச்சி...எந்த நோயும் வராமல் தடுக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

கருப்பு பிளம் என்று அழைக்கப்படும் நாவல் பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. துவர்ப்பு சுவை கொண்ட இந்த பழம், கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்கும்.

வானிலை மாற்றம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக பாதிக்கலாம். இதனால் அடிக்கடி காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். நமது நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருந்தால், எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாப்பாக நாம் இருக்கலாம். நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க தொடர்ந்து தொற்றுநோய்களுடன் போராடுகிறது. நம் அன்றாடச் செயல்பாடுகளைத் தொடர நம் உடலுக்கு ஆற்றலை வழங்குவது மிகவும் அவசியம். ஆனால் சில சமயங்களில் நமக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக பருவகால மாற்றங்களின் போது, நம்மை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நல்ல உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில சூப்பர்ஃபுட்கள் உள்ளன.

Superfoods To Keep Your Immunity In Check In The New Season In Tamil

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் கூடுதல் திரவங்கள், எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் சூப்பர் ஃபுட்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

கோடைகாலத்தில் மிக அதிகமாக கிடைக்கக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த பழம் தர்பூசணி. லைகோபீன், வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ள இந்த பழத்தில், 90 சதவீத நீர் உள்ளடக்கம் மற்றும் 6 சதவீதம் சர்க்கரை உள்ளது. தர்பூசணியை அப்படியேவும் அல்லது சாறு வடிவிலும் நீங்கள் உட்கொள்ளலாம். நீரேற்றமாக இருப்பதற்கும் ஆற்றல் அளவைப் பராமரிப்பதற்கும் இந்த பழம் உதவுகிறது. மேலும், இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

சுரைக்காய்

சுரைக்காய்

அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட சுரைக்காயில், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ, இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன.

நாவல் பழம்

நாவல் பழம்

கருப்பு பிளம் என்று அழைக்கப்படும் நாவல் பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. துவர்ப்பு சுவை கொண்ட இந்த பழம், கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்கும். இந்த பழத்தில் 80 சதவிகிதம் நீர் மற்றும் 16 சதவிகித கார்போஹைட்ரேட்டுகள், மிதமான அளவு வைட்டமின் சி மற்றும் கணிசமான அளவு பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், இது இரத்த அழுத்த எதிர்ப்பு, இரத்தச் சர்க்கரை அளவு குறைவு, கார்டியோப்ரோடெக்டிவ் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

மாம்பழம்

மாம்பழம்

பழங்களின் அரசன் மாம்பழம். கோடைகாலத்தில் விளையும் மாம்பழத்தில் பீட்டா கரோட்டின், ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். மேலும், இதில் அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கிஃபெரின் ஆகியவை அதிகமாக உள்ளது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மாம்பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கோகம்

கோகம்

கோடை காலத்தில் கிடைக்கும் மிகவும் குளிர்ச்சியான பழங்களில் ஒன்று கோகம். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன. இது அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க இந்த பழம் உதவுகிறது.

துளசி விதைகள்

துளசி விதைகள்

விதைகள் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில் துளசி விதை என்றழைக்கப்படும் சப்ஜா விதை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இரும்பு, கால்சியம், மெக்னீசியம், ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து ஆகியவை சப்ஜா விதைகளில் அதிகமாக உள்ளன. இந்த விதைகள் நீங்கள் நீரேற்றமாக இருக்கவும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

தயிர்

தயிர்

தயிர் ஒரு அற்புதமான புரோபயாடிக் உணவு மட்டுமல்ல, இது கால்சியம் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகவும் இருக்கிறது. இது பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட தயிர் உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர்

தேங்காய் நீரில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மிகக்குறைவாக உள்ளது. பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் கொண்ட எலக்ட்ரோலைட்டுகள் உங்கள் உடலுக்கு தாதுக்களை வழங்குகின்றன. தேங்காய் தண்ணீர் உங்களை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. மேலும், இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

சத்துமாவு

சத்துமாவு

புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பருப்பு மாவில் இருந்து தயாரிக்கப்படும் இந்திய சூப்பர்ஃபுட் உணவாக சத்துமாவு உள்ளது. அதிக நன்மைகளைப் பெற, பானங்கள் (மோர் சேர்த்து), லட்டு மற்றும் பராத்தா போன்ற பல்வேறு இனிப்பு பண்டங்களில் இதைப் பயன்படுத்தி சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, March 13, 2023, 16:22 [IST]
Desktop Bottom Promotion