Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
தேன் சாப்பிடுறதால எந்த ஆபத்தும் இல்லனு யார் சொன்னா? தேனை இப்படி சாப்பிட்டா உயிரே போக வாய்ப்பிருக்கு
பல ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட தேன் எண்ணற்ற பலன்களை மனிதர்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் தேனாலும் சில பக்கவிளைவுகள் ஏறபட வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.
இயற்கை நமக்கு பல ஆரோக்கியமான பொருட்களை கொடையளித்துள்ளது. அப்படி இயற்கை அளித்துள்ள முக்கியமான கொடையில் ஒன்றுதான் தேன் ஆகும். உலகம் தோன்றிய காலம் முதலே தேன் நமது உணவுப்பொருள்களில் ஒன்றாக உள்ளது. உணவாக மட்டுமின்றி தேன் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகவும் இருக்கிறது.

பழங்காலம் முதலே தேன் எண்ணற்ற சிகிச்சைகளில் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட தேன் எண்ணற்ற பலன்களை மனிதர்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் தேனாலும் சில பக்கவிளைவுகள் ஏறபட வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதிவில் தேனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

புட் பாய்சன்
தேனை அப்படியே சாப்பிடும்போது அது புட் பாய்சனாக மாற வாய்ப்புள்ளது. பதப்படுத்தப்படாத தேனை சாப்பிடும்போது அது புட் பாய்சனை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேனை சூடுபடுத்தாத போதோ அல்லது பதப்படுத்தாத போதோ தேனீக்களின் சிறிய துண்டுகள், தேன்கூட்டின் பகுதிகள், புரோபோலிஸ் போன்றவை இருக்கலாம். இதனால் சில செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு ஏற்றதல்ல
ஒரு வயது பூர்த்தி அடையாத குழந்தைகளுக்கு தேன் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. பதப்படுத்தாத தேனில் க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் என்னும் பொருள் உள்ளது. இதனை ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு கொடுக்கும்போது அது குழந்தைகளுக்கு போட்யூலிசம் என்னும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு காரணம் தேனீயின் விஷம் அதில் கலந்திருப்பதுதான். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

அடிவயிற்று பிரச்சினைகள்
தேனை அதிகமாக உட்கொள்வது கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.பிரக்டோஸ் நிறைந்திருப்பதால், இது உங்கள் சிறுகுடலின் ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனில் குறுக்கிடும். இது உங்களின் இரைப்பை குடல் அமைப்பில் நீண்டகாலபாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் வீக்கம், வாயு, பிடிப்புகள் போன்ற பல இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் சிலசமயம் இதனால் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அலர்ஜிகளை ஏற்படுத்தும்
பதப்படுத்தாத தேனை சாப்பிடுவது உங்களுக்கு மிதமான அலர்ஜிகளை ஏற்படுத்தும். பதப்படுத்தாத தேனில் தேனீக்களின் கொடுக்குகள், பூச்சிக்கொல்லிகள், சிறு பூச்சிகள் மற்றும் இரசாயனங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இதன் நேரடி நுகர்வு வீக்கம், அரிப்பு, தடிப்புகள், படை நோய், இருமல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், இரிடிஸ், சுவாசக் கோளாறுகள், விழுங்குவதில் சிரமம் போன்ற ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.

அனாபிலாக்டிக்
பதப்படுத்தாத தேனை அதிகளவில் சாப்பிடுவது அனாபிலாக்ஸிஸ் போன்ற கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். இதனால் ஆபத்தான அனாபிலாக்டிக் ஷாக் என்னும் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த நிலை ஏற்பட்டால் தலைச்சுற்றல், மயக்கம், மூச்சுத் திணறல், இதய செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் சில சமயம் மரணம் கூட ஏற்படலாம்.

இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பினால் நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் தேனின் அளவில் கவனம் செலுத்த வேண்டும். தேனில் அதிகளவு ப்ரெக்டொஸ் மட்டுமின்றி அதிகளவு குளுகோஸும் உள்ளது, இது உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதன் இனிப்பு மற்றும் அடர்த்தியான குணம் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்
தேன் உங்களின் இரத்த ஓட்டத்தை கணிசமாக குறைக்கும். இதனால் சில சமயம் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதிலிருக்கும் ஒலிகோசாக்கரைடுகளைக் கொண்டுள்ளது, இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட வகையான கார்போஹைட்ரேட்டாக இருப்பதால், உயர்ந்த இரத்த அழுத்த அளவை பெரிய அளவில் குறைக்க முடியும். இரத்த அழுத்தம் குறிப்பிட்ட அளவிற்கு கீழ் குறைவது பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

நரம்பு பாதிப்புகள்
இந்த இயற்கை இனிப்பு பொருள் உங்கள் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். பதப்படுத்தாத தேனில் நமது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் கிரயனோடாக்சின்ஸ் என்னும் இரசாயனங்கள் உள்ளது. இந்த இரசாயனங்கள் பதப்படுத்தும் போது நீக்கப்படுகிறது. ஆனால் பதப்படுத்தாத தேனை சாப்பிடும்போது அது உங்கள் நரம்பு செல்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக, இது நமது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடுகளுக்கு இடையூறு செய்கிறது.

எடை அதிகரிப்பு
உடல் பருமன் என்பது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இதற்கு தேனும் ஒரு காரணமாக இருக்கலாம். தேனில் அதிக கலோரிகள் உள்ளது, இதனால் எடை அதிகரிப்பில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. இது மட்டுமின்றி இதில் எளிதில் உடையக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது, இதனால் இது சாப்பிட்டவுடன் உடனடியாக உறிஞ்சப்படுகிறது.



Click it and Unblock the Notifications