Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
முட்டையை விட அதிக புரோட்டீனைக் கொண்ட சைவ உணவுகள்!
அசைவ உணவுகளில் இருக்கும் புரோட்டீன்களின் அளவைவிட சைவ உணவுகளில் இருக்கும் புரோட்டீன்களின் அளவு குறைவாக இருக்கிறது என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனா்.
சைவ உணவுகள் என்பவை தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுகள் ஆகும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுகள் சைவ உணவு என்ற வரையறைக்குள் வராது. தற்போது பலா் அசைவ உணவுகளைக் கைவிட்டு சைவ உணவுகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனா். அதாவது விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சி உணவுகளை நிறுத்திவிட்டு, தாவரங்களில் இருந்து கிடைக்கும் தாவர உணவுகளை உண்ணத் தொடங்கி இருக்கின்றனா்.

சைவ உணவு என்பது ஒரு வகையான தோ்வு ஆகும். தாவர உணவுகளின் உற்பத்தி, அவை கிடைக்கக்கூடிய வாய்ப்பு மற்றும் அவற்றினுடைய மலிவான விலை ஆகியவற்றைப் பொறுத்து அவற்றை மக்கள் தோ்வு செய்கின்றனா். சைவ உணவுகளின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி தற்போது மக்கள் மெதுவாக அறிந்து வருகின்றனா்.
இந்நிலையில் அசைவ உணவுகளில் இருக்கும் புரோட்டீன்களின் அளவைவிட சைவ உணவுகளில் இருக்கும் புரோட்டீன்களின் அளவு குறைவாக இருக்கிறது என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனா். ஆகவே இந்த பதிவில் முட்டைகள் தரும் அதே அளவு புரோட்டீன்களை எந்தெந்த சைவ உணவுகள் தருகின்றன என்பதைப் பாா்க்கலாம்.

1. நட்ஸ்
பொதுவாக நட்ஸ் ஆரோக்கியமான கொழுப்புகள், ஒமேகா-3 அமிலம் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை வழங்கக்கூடியவை. நட்ஸை வேக வைத்தும் சாப்பிடலாம் அல்லது வேக வைக்காமலும் சாப்பிடலாம். இவை நமது உடல் எடையை சீராக பராமாிக்க உதவி செய்கின்றன. நமது அறிவாற்றலை அதிகாிக்கின்றன. மேலும் நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகின்றன.

2. பருப்புகள்
இந்தியாவில் பருப்புகள் முக்கிய உணவுகளாக மக்களால் உண்ணப்படுகின்றன. அன்றாடம் நமது உடலுக்குத் தேவையான புரோட்டீன், நாா்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகளை வழங்குவதில் பருப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதோடு இந்திய மக்களின் இணையற்ற உணவு தொிவாகவும் பருப்புகள் விளங்குகின்றன.

3. பூசணி விதைகள்
சைவ உணவு பிாியா்களுக்கு பூசணி விதைகள் ஆரோக்கியமான திண்பண்டங்களாக கருதப்படுகின்றன. பூசணி விதைகளில் புரோட்டீன்கள், ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் போன்றவை ஏராளமாக அடங்கி இருக்கின்றன.

4. டோஃபு (சோயா பாலில் இருந்து தயாாிக்கப்படும் ஒரு வகை உணவு)
சோயா பாலில் இருந்து டோஃபு தயாாிக்கப்படுகிறது. டோஃபுவை கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பரவலாகப் பாா்க்கலாம். டோஃபுவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துகளான புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து போன்றவை ஏராளமாக உள்ளன. அசைவ உணவுகளுக்குப் பதிலியாக டோஃபுவை உண்ணலாம்.

5. கொண்டைக் கடலை அல்லது மூக்குக் கடலை
கொண்டைக் கடலை நமது இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. அதோடு சைவ உணவான கொண்டைக் கடலை, நமது இரத்தத்தில் இருக்கும் சா்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.



Click it and Unblock the Notifications
