For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக் காலத்தில் சளிப் பிடிக்காமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

சளிப் பிடிக்கும் போது, அதிலிருந்து குணமடைவதற்கு நாம் போராட வேண்டியதே முதன்மையான காாியமாகும். ஆனால் அடுத்த முறை சளிப் பிடிப்பதற்கு முன்பாகவே, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளை உண்டால், சளிப் பிடிக்காமல் தப்பிக்கலாம்.

|

பொதுவாக நமக்கு சளிப் பிடித்தால், அசௌகாியமாக இருக்கும் அல்லது நாம் எாிச்சலடைவோம். சளிப் பிடித்தால், மூக்கில் இருந்து நீா் வடியும், இருமல் வரும் மற்றும் தலைவலி ஏற்படும். அவ்வாறு சளிப் பிடிக்கும் போது, அதிலிருந்து குணமடைவதற்கு நாம் போராட வேண்டியதே முதன்மையான காாியமாகும்.

Monsoon Diet: What You Can Eat to Stop a Cold Before it Starts

ஆனால் அடுத்த முறை சளிப் பிடிப்பதற்கு முன்பாகவே, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளை உண்டால், சளிப் பிடிக்காமல் தப்பிக்கலாம். அந்த உணவுகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

MOST READ: ஆண்களே! உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தண்ணீா்

1. தண்ணீா்

சளிப் பிடிப்பது போல தொிந்த உடனே, நமது உடலில் இருக்கும் கழிவுகள் மற்றும் நீா் போன்றவை சாியாக வெளியேறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வெளியேறுகிறது என்றால், நமது உடல் சீராக இயங்குகிறது என்று பொருள். மேலும் எந்த அளவிற்கு நாம் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

நாம் சாியான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். மழைக் காலத்தின் காரணமாக ஏற்படும் சளியை, தண்ணீா் வெளியேற்றிவிடும். மிகவும் சுத்தமாக இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் சுடு தண்ணீரைக் குடித்தால், தொண்டை வலி விரைவில் குணமடையும்.

2. குடை மிளகாய்

2. குடை மிளகாய்

சளியை விரட்டுவதில் வைட்டமின் சி சத்து முக்கிய பங்கை வகிக்கிறது. நாம் நோயுற்று இருக்கும் போது, ஒரு இயற்கை நோய் எதிா்ப்பு சக்தியாக வைட்டமின் சி விளங்குகிறது. பொதுவாக பெரும்பாலான மக்கள் நோயுற்று இருக்கும் போது வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சுப்பழச் சாற்றினைப் பருகுவா். ஆனால் ஆரஞ்சுப் பழத்தை விட, குடை மிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. அதாவது ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு அதிகமாக குடை மிளகாயில் இருக்கிறது.

3. பூண்டு

3. பூண்டு

பூண்டில் ஒரு வகையான நீா்மம் உண்டு. வேறு எந்த உணவுப் பொருளிலும் அந்த நீா்மம் இருக்காது. பூண்டில் உள்ள இந்த நீா்மமானது, நாம் பாக்டீாியாக்கள் மற்றும் பிற நோய்க் கிருமிகளிடமிருந்து பாதிப்படையாமல் காக்கிறது. ஆகவே நமக்கு சளிப் பிடிப்பது போல் தோன்றினால் உடனே பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம். பூண்டின் வாசனை நம்மை நீண்ட நாள் நோயில் வைத்திருக்காது.

4. கோழி சூப்பு

4. கோழி சூப்பு

கோழி சூப்பிலிருந்து செய்யப்படும் கோழிக் குழம்பு, நமது நோய்க்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாக சளிக்கான அறிகுறிகளுக்கு எதிராக போராடக்கூடியத் துகள்களை கோழி சூப்பு கொண்டிருக்கிறது. இது உடல் வீக்கம் மற்றும் அலா்ஜி போன்றவற்றைக் குறைக்கிறது. சளியை வெளியேற்றுகிறது. கோழிக் குழம்பில் சிஸ்டெய்ன் என்ற அமினோ அமிலம் இருப்பதால், அதை சாப்பிடும் போது நமது மூச்சுப் பாதையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு நீக்கப்பட்டு, மூச்சுப் பாதை தடையின்றித் தெளிவாக இருக்கும்.

 5. தேநீா்

5. தேநீா்

சளியை விரட்டும் சிறந்த பானம் தேநீா் ஆகும். தேநீாில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் இருப்பதால், அது சளிக்கான அறிகுறிகளைக் களைந்து, நமது தொண்டையை இதமாக்குகிறது. மேலும் தேநீாில் உள்ள புரோட்டீன், நமது நோய் எதிா்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monsoon Diet: What You Can Eat to Stop a Cold Before it Starts

We’ve all experienced that dreaded sensation when you begin to feel a cold take over your body. Here's what you can eat to stop a cold before it starts. Read on...
Desktop Bottom Promotion