For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவுதான் இது...!

பிரியாணி மற்றும் அனைத்து வகையான அசைவ உணவுகளிலும் சுவைக்காகவும், வாசனைக்காகவும் அன்னாசி பூ சேர்க்கப்படுகிறது.

|

இந்தியாவில் பழங்காலம் முதலே அதன் மசாலாப்பொருட்களுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் உபயோகிக்கும் அனைத்து மசாலாப்பொருட்களும் இந்தியாவை சேர்ந்தது இல்லை. அதில் முக்கியமானது அன்னாசி பூ என்று அழைக்கப்படும் நட்சத்திர சோம்பு ஆகும்.

Is It Safe To Use Star Anise In Cooking?

பிரியாணி மற்றும் அனைத்து வகையான அசைவ உணவுகளிலும் சுவைக்காகவும், வாசனைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. ஆனால் இதனை உணவில் சேர்ப்பது பாதுகாப்பானதா என்ற விவாதம் பல காலமாக நடந்து வருகிறது. இந்த பதிவில் அன்னாசி பூவை உணவில் சேர்க்கலாமா? சேர்த்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோற்றம்

தோற்றம்

இந்த அன்னாசி பூ முதன் முதலில் சீனாவில் பயன்படுத்தபட்டது. சீனர்கள் இதனை மருந்து பொருளாக பயன்படுத்தினர். இந்த காய்ந்த மருத்துவ மூலிகை ஆசிய சமையலறைகளில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. நட்சத்திர சோம்பின் ஏராளமான அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் இது ஒரு நல்ல செரிமானப் பொருளாக இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு செரிமானத்திற்கும், பெரியவர்களுக்கு காயங்களை குணப்படுத்தவும், அழற்சியை குணப்படுத்தவும் உதவுகிறது.

நட்சத்திர சோம்பு என்றால் என்ன?

நட்சத்திர சோம்பு என்றால் என்ன?

இது சீனா மற்றும் வியட்நாமை பூர்வீகமாக கொண்ட ஒரு சிறிய மரமாகும். . இந்த மரம் லாவோஸ், கம்போடியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜமைக்கா முழுவதும் பயிரிடப்படுகிறது. அதன் சிறப்பியல்பு வடிவத்தின் காரணமாக, இது சீன மொழியில் பாத் கோக் அல்லது பா ஜியாவோ என குறிப்பிடப்படுகிறது, இது ‘எட்டு மூலை நட்சத்திரம் ' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தன்மை

தன்மை

அழகிய தோற்றம் கொண்ட இந்த மசாலா பொருள் உணவில் சேர்க்கப்படும்போது உணவிற்கு தனித்துவமான இனிப்பு மற்றும் கார சுவையை கொடுக்கிறது. சீனர்கள் தங்கள் பெரும்பாலான உணவுகளில் இதனை இஞ்சி மற்றும் பட்டையுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். இந்தியர்கள் இதனை கரம் மசாலாவில் சேர்த்து பயன்படுத்துகின்றனர். இதிலிருக்கும் குறைந்த நச்சுத்தன்மை காரணமாக இதனை மருந்து பொருளாக பயன்படுத்துகின்றனர். இது உங்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா? எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க

வாயுக்கோளாறு மற்றும் அஜீரணத்தை குணப்படுத்தும்

வாயுக்கோளாறு மற்றும் அஜீரணத்தை குணப்படுத்தும்

வாயுக்கோளாறு, வீங்கிய வயிறு, அஜீரணம் போன்றவை செரிமானக் கோளாறின் அடையாளம் ஆகும். சராசரியாக 23 சதவீத இந்தியர்கள் இந்த பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். துருக்கி, சீனா, பெர்சியா போன்ற நாடுகளில் மக்கள் செரிமானத்திற்கு இதனை பயன்படுத்துகின்றனர். இந்த மசாலா வாயுவால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பை நீக்குகிறது. இது பெருங்குடல் நோய் உள்ள குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு நட்சத்திர சோம்பு காய்ச்சிய தேநீர் வழங்குவது வாந்தி, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் பிற நரம்பியல் விளைவுகளைத் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆண்டிமைக்ரோபியல் பண்புகள்

ஆண்டிமைக்ரோபியல் பண்புகள்

அன்னாசி பூவில் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்கள் கொல்லும் பயோஆக்டிவ் பொருட்கள் உள்ளன. இதற்கு காரணம் இதிலிருக்கும் அனெத்தோல் என்னும் பொருள் ஆகும். நட்சத்திர சோம்பு மற்றும் பெருஞ்சீரகம் உள்ளிட்ட நறுமண தாவரங்களிலிருந்து வரும் அத்தியாவசிய எண்ணெய்களின் முக்கிய பொருளாக அனெத்தோல் உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த மசாலாவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மற்றொரு பயோஆக்டிவ் மூலப்பொருள் ஷிகிமிக் அமிலம். இது வைரஸ் தடுப்பு மருந்து பார்முலாக்களில் பயன்படுத்தப்படுகிறது.

அழற்சி எதிர்ப்பு விளைவுகள்

அழற்சி எதிர்ப்பு விளைவுகள்

இந்த மருத்துவ மசாலா ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருளாகும். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பல அழற்சி-சார்பு சேர்மங்களை செயல்படுத்துவதைத் தடுக்கிறது. நட்சத்திர சோம்பின் அத்தியாவசிய எண்ணெயும் இங்கு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மூலிகை மற்றும் எண்ணெய் இரண்டும் உங்கள் இதயத்தின் மென்மையான தசைகளில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

MOST READ: கால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...!

பைட்டோகெமிக்கல்ஸ்

பைட்டோகெமிக்கல்ஸ்

நட்சத்திர சோம்பில் ஏராளமான செஸ்குவெர்ட்பீன்கள், ஃபைனில்ப்ரோபனாய்டுகள் மற்றும் மோனோ-, டி- மற்றும் ட்ரைடர்பென்கள் உள்ளன. இதன் எண்ணெயில் முக்கியமாக அனெத்தோல், எஸ்ட்ராகோல், ஃபோனிகுலின், லிமோனீன், மெத்தில் சாவிகோல், லினோலிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் உள்ளன. அல்கான்கள் - ஹெனிகோசேன், டோகோசேன், ட்ரைகோசேன், டெட்ராகோசேன், பெண்டகோசேன் மற்றும் நொனகோசேன் உள்ளிட்டவை போன்றவையும் இதில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Safe To Use Star Anise In Cooking?

Find out is it safe to use star anise in cooking.
Story first published: Wednesday, August 21, 2019, 14:59 [IST]
Desktop Bottom Promotion