For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40 வயசு ஆயிடுச்சா? மாரடைப்பு வரக்கூடாதுன்னா இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

40 வயதை எட்டிய ஆண்கள் தங்களின் உணவில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அத்துடன் போதுமான தூக்கத்தையும், உடற்பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொண்டு வர வேண்டும்.

|

வயது அதிகரிக்கும் போது நாம் நமது உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் வயது அதிகரிக்கும் போது நமது உடலில் உள்ள சத்துக்கள் குறைய ஆரம்பிக்கிறது. இந்நிலையில் உடலுக்கு தேவையான சத்துக்களை உணவுகளின் மூலமே பெற முடியும். இது தவிர தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு மாரடைப்பானது ஒருவருக்கு சீக்கிரம் ஏற்படுகிறது. இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுளே.

Healthy Eating Tips for Men Over 40 In Tamil

ஆம், தற்போது ஜங்க் உணவுகள் நம்மை சூழ்ந்திருப்பதால், அதை எளிதில் வாங்கி சாப்பிடுகிறோம். இந்த மாதிரியான உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதோடு, கலோரிகளும் அதிகம் இருப்பதால், இது உடலில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பல பிரச்சனைகளை வரவழைக்கும். எனவே தான் வயது அதிகரிக்கும் போது நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து சாப்பிட வேண்டும்.

குறிப்பாக 40 வயதை எட்டிய ஆண்கள் தங்களின் உணவில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அத்துடன் போதுமான தூக்கத்தையும், உடற்பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொண்டு வர வேண்டும். இப்படி ஆரோக்கியமான பழக்கத்தைக் கொண்டிருந்தால், உடலை எவ்வித நோயும் அண்டாது. இப்போது 40 வயதை எட்டிய ஆண்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எந்த உணவுகளை அதிகம் தங்களின் உணவில் சேர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறு தானியங்கள்

சிறு தானியங்கள்

சிறு தானிங்களை தினசரி உணவில் சேர்க்கும் போது உடலுக்கு வேண்டிய நார்ச்சத்து, தாவர வகை புரோட்டீன்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பலவகையான பைட்டோகெமிக்கல்கள் கிடைத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். எனவே தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸ் மிகவும் அதிக சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான நட்ஸ் ஆகும். இதில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, மெலடோனின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகளவில் உள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. குயினோன் ஜுக்லோன் மற்றும் டானின் டெல்லிமாக்ராண்டின் அல்லது ஃபிளாவனால் மோரின் போன்ற அரிய பைட்டோநியூட்ரியன்ட்டுகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. எனவே 40 வயதை எட்டிய ஆண்கள் ஸ்நாக்ஸ் நேரத்தில் 4 வால்நட்ஸை சாப்பிடுவது நல்லது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் பிரபலமான பானம் தான் க்ரீன் டீ. இந்த க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. குறிப்பாக இந்த டீயில் கேட்டசின்கள் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. தினமும் க்ரீன் டீயை குடித்து வந்தால், அது பிபி, இதய நோய், பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக க்ரீன் டீயைக் குடித்து வருவது வயிறு மற்றும் உணவுக்குழாய் புற்றநோய்க்கு எதிரான பாதுகாப்போடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், க்ரீன் டீயை தினமும் குடித்து வரும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கத்திரிக்காய்

கத்திரிக்காய்

விலை குறைவில் கிடைக்கும் கத்திரிக்காயை ஆண்கள் தினசரி உணவில் சேர்த்து வருவது நல்லது. ஏனெனில் கத்திரிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், பீனோலிக் பொருட்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளன மற்றும் இதில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. கத்திரிக்காயின் ஊதா நிறமானது, அந்த காயில் உள்ள அந்தோசையனின்கள் இருப்பதைக் குறிக்கிறது. இது ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராடக்கூடியது. ஆய்வு ஒன்றில் கத்திரிக்காயில் உள்ள உட்பொருட்கள் இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

ஆப்பிளை விட அதிக சத்துக்களைக் கொண்ட ஒரு அற்புதமான பழம் தான் கொய்யாப்பழம். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆண்கள் கொய்யாப்பழத்தை அதன் சீசனின் போது தவறாமல் உட்கொண்டால், அதில் உள்ள வைட்டமின் சி-யினால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் மற்றும் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். முக்கியமாக கொய்யாப்பழத்தில் லைகோபைன், க்யூயர்சிடின் மற்றும் பிற பாலிபீனாலிக் பொருட்கள் உள்ளதால், இது சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் களஞ்சியமாக விளங்குகிறது. கொய்யாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இதய தசைகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது மற்றும் பிபி நோயாளிகளுக்கு நல்ல பழமும் கூட. கொய்யாப்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான பழமும் கூட.

மூலிகைகள் மற்றும் கீரைகள்

மூலிகைகள் மற்றும் கீரைகள்

மூலிகைகள் மற்றும் கீரைகளில் அடாப்டோஜென்கள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க உதவுகின்றன. வயது அதிகரிக்கும் போது உடலினுள் ஒருவித அழுத்தம் அதிகரிக்கும். இந்த அழுத்தத்தை சமாளிக்க முருங்கைக்கீரை, அஸ்வகந்தா, துளசி, அதிமதுரம் போன்றவற்றை அவ்வப்போது உட்கொள்ள வேண்டும். மேலும் கீரைகள் மற்றும் மூலிகைகள் நமது பாரம்பரிய உணவின் ஒரு பகுதியாகும். எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பால்

பால்

பால் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. சொல்லப்போனால் வயது அதிகரிக்கும் போது ஒவ்வொருவரும் தங்களின் தினசரி உணவில் தவறாமல் பாலை சேர்க்க வேண்டும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய கால்சியம் கிடைத்து, எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம். ஆகவே 40 வயதை எட்டிய ஆண்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க பாலை கட்டாயம் குடிக்க வேண்டும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

கொக்கோ பவுடரால் தயாரிக்கப்படும் டார்க் சாக்லேட்டில் ப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளன. இந்த ப்ளேவோனாய்டுகள் உடலினுள் நைட்ரைட்டுகளாக மாறி, இரத்த நாளங்களை ரிலாக்ஸடைய செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இருப்பினும், டார்க் சாக்லேட்டை அளவாகவே உட்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எதிர்மறையாக செயல்படும். ஆய்வுகளும் டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் கெட்ட கொழுப்பின் ப்ரீ-ராடிக்கல் சேதத்தைக் குறைத்து, இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதாக தெரிவிக்கின்றன. எனவே இதய ஆரோக்கியத்திற்காகவும், பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், 40 வயதை எட்டிய ஆண்கள் சிறிது டார்க் சாக்லேட்டை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Eating Tips for Men Over 40 In Tamil

Eating healthy is important for men over 40. Here we curated list of nutrition-rich foods that will help you stay healthy, energetic and strong.
Desktop Bottom Promotion