Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கோதுமையை விட அதிக நார்ச்சத்தை கொண்ட குதிரைவாலி அரிசியின் நன்மைகள் பற்றி தெரியுமா?
குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, ஸ்டார்ச், கால்சியம், கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
Barnyard Millet Benefits: பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அரிசி, கோதுமையை விட, சிறுதானியங்களை தான் அதிகம் சாப்பிட்டார்கள். சிறுதானியங்களை சாப்பிட்டதாலோ என்னவோ அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதைப் புரிந்து கொண்டு தற்போது சிறுதானியங்களை நிறைய பேர் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் குதிரைவாலி அரிசி.

இந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, ஸ்டார்ச், கால்சியம், கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த வகை சிறுதானியத்தை உட்கொண்டு வந்தால், பலவிதமான நன்மைகளைப் பெறலாம். சொல்லப்போனால், உடலைத் தாக்கும் பல நோய்களின் அபாயத்தைத் தடுக்கலாம். முக்கியமாக குதிரைவாலி அரிசியைக் கொண்டு பல சுவையான உணவுகளை சமைத்து சாப்பிடலாம். இப்போது குதிரைவாலியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைக் காண்போம்.

எடை இழப்பிற்கு உதவும்
குதிரைவாலியில் மற்ற தானியங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் எளிதில் செரிமானமாகக்கூடிய புரோட்டீன்கள் அதிகளவில் உள்ளன. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஒரு அற்புதமான உணவுப் பொருள் மற்றும் இது உடலுக்கு நல்ல ஆற்றலையும் வழங்கும்.

செரிமான பிரச்சனைகள் நீங்கும்
குதிரைவாலியில் கரையக்கூடிய மற்றும் கரையாத டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. சொல்லப்போனால் மற்ற தானியங்கள் மற்றும் சிறுதானியங்களை விட குதிரைவாலியில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. எனவே இதை தினசரி உணவில் சேர்க்கும் போது, அது மலச்சிக்கல், வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று பிடிப்பு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
கார்போஹைட்ரேட் உணவுகளால் தான் சர்க்கரை நோய் ஒருவருக்கு வருகிறது. ஆனால் குதிரைவாலியில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு மற்றும் இது மெதுவாக ஜீரணமாவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுப் பொருளாகும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி உணவில் கோதுமைக்கு பதிலாக குதிரைவாலியை சேர்த்து வருவது இன்னமும் நல்லது.

எலும்புகளுக்கு நல்லது
குதிரைவாலி அரிசியில் பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இந்த குதிரைவாலியை சமைக்கும் போது, அவை கால்சியம் பாஸ்பேட்டாக மாறி, எலும்புகளை வலுவாக்குகின்றன. எனவே எலும்பு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் குதிரைவாலியை சாப்பிடுவது நல்லது.

கண்களுக்கு நல்லது
குதிரைவாலியில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த பீட்டா கரோட்டீன் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். ஆகவே கண் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் மற்றும் கண் பிரச்சனைகளைக் கொண்டவர்கள் குதிரைவாலியை தினமும் உட்கொள்வது நல்லது.

இரத்தசோகையை தடுக்கும்
இன்று பலரும் இரத்தசோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த இரத்தசோகை பிரச்சனையைக் கொண்டவர்கள் குதிரைவாலி அரிசியை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து, புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளன. இவை இரத்த சோகையைத் தடுப்பதோடு, உடலை வலுவாகவும் வைத்துக் கொள்ளும்.

இதயத்திற்கு நல்லது
இதய நோய் இருப்பவர்கள் குதிரைவாலியை தினமும் சமைத்து உட்கொள்வது நல்லது. ஏனெனில் அஇ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மற்றும் இதயத்துடிப்பும் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications