Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
உடம்பு சூடு பிடிச்சு அவஸ்தைப்படுறீங்களா? இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்க..
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரே சிறந்த வழி பழங்களை உண்பது தான். அதுவும் கோடைக்கால பழங்களை சாப்பிட்டு வந்தாலே, உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
பலருக்கும் பிடிக்காத ஒரு பருவகாலம் என்றால் அது கோடைக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இக்காலத்தில் வெயில் வாட்டி எடுப்பதோடு, பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் உண்டாக்கும். அதுவும் வெயிலில் சிறிது நேரம் சென்றாலே உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, அதிக தாகத்தை உண்டாக்கும். பெரும்பாலான மக்கள் கோடைக்காலத்தில் உடல் வறட்சி, உடல் சூடு பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. இத்தகைய சூழ்நிலையில், உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியுடனும் வைத்திருப்பது அவசியம்.

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரே சிறந்த வழி பழங்களை உண்பது தான். அதுவும் கோடைக்கால பழங்களை சாப்பிட்டு வந்தாலே, உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும். இப்போது உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் சில பழங்களைக் காண்போம்.

தர்பூசணி
கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. இந்த தர்பூசணி பழத்தை முடிந்த வரை அதிகம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் 90 சதவீத நீர்ச்சத்து உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, செரிமான பிரச்சனைகளின்றியும் இருக்கும். இது தவிர, தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து, உடல் சூட்டைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

வில்வ ஜூஸ்
கோடைக்காலம் வந்துவிட்டால், வில்வ ஜூஸ் அதிகம் விற்கப்படுவதை நீங்கள் காணலாம். கோடையில் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், வெப்ப பக்கவாதம் ஏற்படாது மற்றும் வயிறும் குளிர்ச்சியாக இருக்கும். ஆகவே கோடைக்கால ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்க, இந்த வில்வ ஜூஸை தினமும் குடிக்க முயலுங்கள்.

மல்பெர்ரி
கோடையில் ஏன் மல்பெர்ரி பழத்தை சாப்பிட வேண்டும் தெரியுமா? ஏனெனில் இப்பழத்தை சாப்பிடுவதால் பல வகையான நோய்கள் உடலைத் தாக்காமல் உடல் பாதுகாப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, இப்பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இப்பழம் மிகவும் நல்லது.

ஸ்ட்ராபெர்ரி
கோடைக்காலத்தில் ஸ்ட்ராபெர்ரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. ஆகவே கோடையில் இப்பழத்தை சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். அதோடு, இது உடல் சூட்டைக் குறைக்க உதவும்.

வெள்ளரிக்காய்/வெள்ளரிப்பழம்
வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப்பழம் கோடையில் அதிகம் விற்கப்படுவதால், உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள், அதை குறைக்க வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடலாம். ஏனென்றால் இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளும்.

முலாம் பழம்
முலாம் பழம் கோடையில் அதிகம் விற்கப்படும் பழங்களுள் ஒன்று. முலாம் பழத்தை கோடையில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், உடல் சூட்டைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
