For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மூளை சுறுசுறுப்பா செயல்படணுமா? இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...

உங்கள் மூளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டுமானால், அதற்கு உதவும் உணவுகள் எவையென்பதை அறிந்து அவற்றை அன்றாடம் உட்கொள்ள முயற்சிப்பதே சிறந்தது.

|

உடலிலேயே இதயத்திற்கு அடுத்தப்படியாக மிகவும் முக்கியமான ஓர் ஊறுப்பு என்றால் அது மூளை தான். இந்த மூளை தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இது உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒரு சிக்கலான உறவைக் கொண்டுள்ளது. குடல் ஆரோக்கியம் அல்லது இதய ஆரோக்கியம், கல்லீரல் அல்லது சிறுநீரக செயல்பாடு என அனைத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி மூளைக்கு உள்ளது. எனவே இப்படிப்பட்ட மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டால் தான், உடல் ஆரோக்கியமாக இயங்கும்.

Foods To Eat For Better Brain Function In Tamil

எப்படி குடல் ஆரோக்கியமாக இருப்பதில் உணவுகள் முக்கிய பங்காற்றுகிறதோ, அதேப் போல் மூளையின் சிறப்பான செயல்பாட்டிலும் உணவுகள் முக்யி பங்காற்றுகிறது. எனவே உங்கள் மூளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டுமானால், அதற்கு உதவும் உணவுகள் எவையென்பதை அறிந்து அவற்றை அன்றாடம் உட்கொள்ள முயற்சிப்பதே சிறந்தது. இக்கட்டுரையில் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் சில உணவுகள் குறித்து காண்போம். முக்கியமாக இந்த உணவுகள் மனநிலையை மேம்படுத்தவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சற்று கசப்புச் சுவையுடன் இருந்தாலும், இதில் இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் இருப்பதால், இது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மசாலாப் பொருட்கள்

மசாலாப் பொருட்கள்

மஞ்சள், இஞ்சி முதல் குங்குமப்பூ வரை பல மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மேம்படுத்த மட்டுமின்றி, உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை வழங்குகிறது. ஏனெனில் இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் வளமான அளவில் உள்ளதால், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சிக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. குறிப்பாக மஞ்சளில் உள்ள குர்குமின் அமைதியின்மை அல்லது பதட்டத்தின் அபாயத்தைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

நட்ஸ்

நட்ஸ்

பாதாம், வால்நட்ஸ், முந்திரி போன்ற நட்ஸ்களில் ஆரோகிக்கியமான கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. இவை மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கின்றன, மூட்டுக்களை உயவூட்டுகின்றன மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றன. வால்நட்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகின்றன. எனவே தினமும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிட்டு வந்தால், மூளை நன்கு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழம் விலை அதிகமான ஓர் பழம். இதனால் பலரும் இந்த பழத்தை வாங்கி சாப்பிடமுடிவதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் மூளை திறம்பட செயல்பட வேண்டுமானால், அவகேடோ பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றில் மக்னீசியம் வளமான அளவில் உள்ளது. இச்சத்து மூளையின் முறையான செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான சத்தாகும். மக்னீசியம் குறைபாடு மன இறுக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளான யோகர்ட், கிமிச்சி, கம்புச்சா போன்றவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் உள்ளன. இந்த உணவுகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, மனக் கவலையைக் குறைக்கின்றன.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. ஆனால் பலரும் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த காய்கறிகளில் தான் ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின் பி9, நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இவற்றை ஒருவர் அதிகமாக தங்கள் உணவில் சேர்த்து வந்தால், மூளையை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதாடு, சிறந்த அறிவாற்றலுடனும் இருக்கலாம். ஆகவே பச்சை இலைக் காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Eat For Better Brain Function In Tamil

Here are some foods to eat for better brain function. Read on...
Story first published: Monday, March 21, 2022, 12:44 [IST]
Desktop Bottom Promotion