Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
இந்த உணவுகள் ஆண்களுக்கு அசிங்கமான மார்பகங்களை உண்டாக்கும் தெரியுமா?
சில ஆண்களைப் பார்த்தால், பெண்களைப் போன்று மார்பகங்கள் கொண்டு காட்சியளிப்பார்கள். இப்படி பெரிய மார்பகங்களைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனையின் பெயர் கைனகோமாஸ்டியா ஆகும்.
ஆண்கள் நன்கு பரந்து விரிந்த மார்பகங்கள் மற்றும் பைசெப்ஸ் உடன் கட்டுமஸ்தான உடலமைப்பில் இருப்பது தான் அழகு. ஆனால் சில ஆண்களைப் பார்த்தால், பெண்களைப் போன்று மார்பகங்கள் கொண்டு காட்சியளிப்பார்கள். இப்படி பெண்களைப் போன்று மார்பகங்களைக் கொண்ட ஆண்கள் பல நேரங்களில் பெரும் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். இப்படி பெரிய மார்பகங்களைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனையின் பெயர் கைனகோமாஸ்டியா ஆகும்.

இந்த பிரச்சனை ஒரு ஆணுக்கு வருவதற்கு முக்கிய காரணம், அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிக அளவிலும், டெஸ்டோஸ்டிரோன் குறைவான அளவிலும் இருப்பது தான். இப்பிரச்சனை வராமல் இருக்க ஆண்கள் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இப்படி தவிர்ப்பதன் மூலம் மார்பக வளர்ச்சியைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போமா!

சிக்கன் சூப்
பெரும்பாலான பாக்கெட் உணவுகளான சிக்கன் சூப் போன்றவற்றில் பித்தலேட்டுகள் நிறைந்துள்ளது. பித்தலேட்டுகள் என்பவை பிளாஸ்டிக் மென்மையாக்கிகள் ஆகும். இவை கிட்டத்தட்ட ஈஸ்ட்ரோஜென் போன்று செயல்பட ஆரம்பித்து, ஆண்களின் மார்பக வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பணிக்குழுவில் பதிவு செய்யப்பட்ட உணவுகள் குறித்த சமீபத்திய ஆய்வில் கேனில் அடைத்து விற்கப்படும் சிக்கன் சூப், ரவியோலி, பீன்ஸ் மற்றும் டூனா போன்றவை அதிகளவு பித்தலேட்டுகளைக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி நிறைந்த கடல் உணவுகள்
உணவுகளில் அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பது ஆண் மார்பு வளர்ச்சியுடன் தொடர்புடையது. சராசரியாக ஒருவர் 10 முதல் 13 வெவ்வேறு பூச்சிகொல்லிகளை அன்றாட உணவுகளின் மூலம் எடுக்கிறோம். இதில் உணவுகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பூச்சிக் கொல்லிகள் எண்டோகிரைன்களை சீர்குலைத்து ஆண் அல்லது பெண் ஹார்மோன்களைப் பாதிக்கும். கடல் உணவுகளில் இறால் மற்றும் மீன்களில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இவைகளை ஆண்கள் அதிகம் சாப்பிடும் போது, அவர்களுக்கு பெண்களைப் போன்று மார்பகங்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது.

பெர்ரிப் பழங்கள்
பெரும்பாலான பழங்களின் தோல் சாப்பிடக்கூடியவையாக இருக்கும். அதில் ஒன்று தான் பெர்ரிப் பழங்கள். இவற்றில் அதிகளவில் ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே ஸ்ட்ராபெர்ரி, பீச், ஆப்பிள், செர்ரிப் பழங்கள் போன்றவை ஆண்களுக்கு மார்பக வளர்ச்சியை உண்டாக்கக்கூடும்.

சூப்பர் மார்கெட் இறைச்சி மற்றும் சீஸ்
சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படும் இறைச்சி மற்றும் சீஸ்களைச் சுற்றியுள்ள உறைகள் பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி)-இல் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பி.வி.சி ஹார்மோன் மாற்றங்களைத் தூண்டக்கூடியவை. ஆகவே எப்போதும் இறைச்சி சாப்பிடுவதாக இருந்தால் நற்பதமான இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். பதப்படுத்தப்படும் இறைச்சிகளை வாங்குவதை அறவே தவிர்த்திடுங்கள்.

வாட்டர் பாட்டில்
பெரும்பாலான வாட்டர் பாட்டில் பாலிகார்பனேட்டால் ஆனது. நீங்கள் உபயோகிக்கும் பாட்டில் பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிய, பாட்டிலின் அடிப்பகுதியைப் பாருங்கள். அங்கு #7 இல் பாட்டில் உருவான பொருள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் பாலிகார்பனேட் இருந்தால், அந்த பாட்டிலைத் தவிர்த்திடுங்கள். ஹார்வார்டு ஆய்வின் படி, ஒரு வாரம் தொடர்ந்து பாலிகார்பனேட் பாட்டிலில் இருந்து நீரைக் குடித்தால், 70 சதவீதம் ஹார்மோன்களில் இடையூறை உண்டாக்கும் BPA அளவு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

கேன் உணவுகள்
கேன் உணவுகளில் அதிகளவிலான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவற்றில் சிறிது பூச்சிக்கொல்லிகளும் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே கேன்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளைத் தவிர்த்து, நற்பதமான உணவுகளை வாங்கி சாப்பிடுங்கள்.

கொழுப்பு உணவுகள்
கொழுப்பு அமிலங்கள், பூச்சிக்கொல்லிகள், பித்தலேட்டுகள் போன்றவை அதிகம் நிறைந்த உணவுகள் ஆண்களின் மார்பக வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே ஆண்கள் இம்மாதிரி அசிங்கமான மார்பக வளர்ச்சியைத் தவிர்க்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி, அந்த உணவுகளைத் தவிர்ப்பது தான். மேலும் உடல் பருமனை உண்டாக்கும் உணவுகளும் மார்பக வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே ஆண்கள் ஃபிட்டாக இருக்க நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளையே தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.



Click it and Unblock the Notifications