Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
புற்றுநோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்!
பொதுவாக புற்றுநோயாளிகள் பசி உணர்வை இழந்துவிடுவர். அதனால் அவர்கள் சரியான இடைவெளியில் உண்பதில்லை. அது தவறான ஒன்றாகும். ஆகவே அவர்கள் சரியான இடைவெளியில் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை கையாளுவதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. பொதுவாக புற்றுநோயாளிகள் பசி உணர்வை இழந்துவிடுவர். அதனால் அவர்கள் சரியான இடைவெளியில் உண்பதில்லை. அது தவறான ஒன்றாகும். ஆகவே அவர்கள் சரியான இடைவெளியில் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக அவர்கள் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் மற்றும் சிகிச்சையின் போதும் சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆகவே புற்றுநோயாளிகள் உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை இங்கு பார்க்கலாம்.

காய்கறிகள்
புற்றுநோயாளிகள் தக்காளி, பூசணிக்காய், கேரட், பட்டாணி மற்றும் முள்ளங்கி போன்ற காய்களை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் இந்த காய்களில் வைட்டமின் சத்துக்களும் நார்ச்சத்துக்களும் அதிகம் இருக்கின்றன. பாலுறுப்புகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்காளி மிகவும் நல்லது. மேலும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்களையும் அவர்கள் உண்ணலாம். ஏனெனில் இந்த காய்களில் உள்ள வேதிப் பொருட்கள் அவர்களின் உடலில் உள்ள நச்சு ஈஸ்ட்ரோஜனை (oestrogen) நல்ல ஈஸ்ட்ரோஜனாக மாற்றுகிறது. இது அவர்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கிறது.

சுவைமிகு பழங்கள்
ஆரஞ்சு, வாழைப்பழம், கிவிப்பழம், குழிப்பேரி/பீச் (peaches), ஸ்ட்ராபெர்ரி பழம், மாம்பழம், பேரிக்காய் போன்ற பழங்களை புற்றுநோயாளிகள் அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் இந்த பழங்களில் அதிக அளவிலான வைட்டமின் சத்துகளும் நார்ச்சத்துக்களும் உள்ளன. மேலும் அவர்கள் அவகேடோ (avocados), கொடி முந்திரி, கொய்யாப்பழம், வாதுமைப்பழம்/ஆப்ரிகாட் (apricot) மற்றும் அத்திப்பழம் போன்ற பழங்களையும் அவர்கள் உண்ணலாம்.

நல்ல கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவுகள்
புற்றுநோயாளிகள் அரிசிச் சோறு, நூடுல்ஸ், சப்பாத்தி, கோதுமை ரொட்டி மற்றும் பாஸ்தா போன்ற நல்ல கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதோடு அவர்கள் ஓட்ஸ், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பால் பொருட்கள் மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளையும் அதிகம் உண்ணலாம். மேலும் தேனில் நச்சு பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு பூஞ்சைகளுக்கு எதிரான துகள்கள் உள்ளதால், தேனை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளலாம். அது தொற்று பரவாமல் தடுக்கும்.

புரோட்டீன் மிகுந்த உணவுகள்
குறைந்த கொழுப்புள்ள இறைச்சி, விதைகள், காய வைத்த பீன்ஸ்கள், சுண்டல், மீன், கோழி, முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை புற்றுநோயாளிகள் உண்ண வேண்டும். குறிப்பாக பாலுறுப்புகளில் புற்றுநோய் உள்ளவர்கள் மீன் மற்றும் சோயா உணவுகளை உண்ணலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
புற்றுநோயாளிகள் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உணவுகளில் உப்பு அல்லது சர்க்கரை ஆகியவற்றை அதிக அளவில் சேர்க்கக்கூடாது. எண்ணெய் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ள ஊறுகாய், ஜாம் போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் பொதுவானவையே. ஆகவே புற்றுநோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி தங்களின் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அல்லது தள்ளி வைப்பது நல்லது.



Click it and Unblock the Notifications