Just In
- 41 min ago
ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கான சில நாட்டு வைத்தியங்கள்!
- 1 hr ago
ஆண்களே! இந்த 5 குணங்களில் ஒன்று உங்களிடம் இருந்தாலும் உங்களால் பெண்களை ஈஸியாக ஈர்க்க முடியுமாம்...!
- 1 hr ago
உங்க குழந்தை இவ்வுளவு நேரம் தூங்குவதுதான் அவங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம் தெரியுமா?
- 2 hrs ago
வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்வது எப்படி தெரியுமா?
Don't Miss
- News
மெகா சிக்கல்.. எடப்பாடிக்கு கேட் போட காத்திருக்கும் தேனி டீம்! ஓகே சொல்வாரா ஓபிஎஸ்! அப்பவே சொன்னாரே?
- Automobiles
2023 ஆட்டோ எக்ஸ்போவில் எல்லாரது கண்ணும் இந்த 5 கார்கள் மீதுதான்!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில்...
- Finance
சோதனை என்ற பெயரில் 800 பேர் பணி நீக்கமா.. விப்ரோவில் என்ன தான் நடக்குது.. உண்மை என்ன?
- Technology
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- Movies
அந்த ஷாட்ல உண்மையாவே அஜித் அடிச்சாரு.. துணிவு படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஜிஎ.ம் சுந்தர்!
- Sports
நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
அடிக்கடி தலைவலி வருதா? அப்ப அதுக்கு நீங்க சாப்பிடுற இந்த உணவுகள் தான் முக்கிய காரணம்..
இன்று நிறைய பேர் தலைவலியால் அடிக்கடி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தற்போதைய வேலைப்பளு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இருப்பினும் ஒருவருக்கு தலைவலி வருவதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கு தலைவலியை வரத் தூண்டும் சில உணவுகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில் மக்கள் பலர் அடிக்கடி தலைவலியை அனுபவிக்கிறார்கள். இப்படி தலைவலி வருவதற்கு தாங்கள் உண்ணும் உணவுகள் ஓரு காரணமாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்த்ததில்லை.
ஆனால் ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வந்தால், அதற்கு மரபணுக்களும் காரணமாக இருக்கலாம். நீங்கள் எவ்வளவு மரபணு ரீதியாக தலைவலியால் பாதிக்கப்படுகிறீர்களோ, அந்த அளவுக்கு சில உணவுகள் தலைவலியைத் தூண்டிவிடும். சில சமயங்களில் காலநிலை மாற்றங்கள், கடுமையான பெர்ஃப்யூம்கள், பிரகாசமான வெளிச்சம் மற்றும் மாதவிடாய் சுழற்சி போன்றவை தலைவலியைத் தூண்டலாம். இந்த காரணிகளால் ஏற்படும் தலைவலியை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், உண்ணும் உணவுகளால் ஏற்படும் தலைவலியை, அதை உண்பதைத் தவிர்ப்பதன் மூலம் நம்மால் கட்டுபடுத்த முடியும். கீழே எந்த உணவுகள் எல்லாம் ஒருவருக்கு தலைவலியை தூண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உணவுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரெட் ஒயின்
தலைவலியைத் தூண்டும் ஒரு பொதுவான பொருளாக அறியப்படுவது ரெட் ஒயின். அதுவும் எவ்வளவு ரெட் ஒயின் குடிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. சிலருக்கு ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்ததுமே தலைவலி வந்துவிடும். இன்னும் சிலருக்கு 2-3 டம்ளர் ரெட் ஒயின் குடித்தால் தலைவலி ஏற்படலாம். எனவே உங்களுக்கு ஒயின் குடித்து தலைவலி வந்தால், அதை குடிப்பதை நிறுத்திவிடுங்கள்.

சீஸ்
சிலருக்கு சீஸ் அல்லது சீஸ் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரக்கூடும். ஏனெனில் சீஸில் தைரமைன் உள்ளது. இது இரத்த நாளங்களை சுருக்கி தலைவலியை உண்டாக்கும். ஆகவே உங்களுக்கு தலைவலி வருவதற்கு முன், நீங்கள் சீஸ் நிறைந்த உணவுகளை சாப்பிட்டிருந்தால், அதற்கு காரணம் நீங்கள் சாப்பிட்ட சீஸ் தான் என்பதை நினைவில் கொண்டு, அடுத்த முறை சீஸ் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

சாக்லேட்
என்ன இந்த பட்டியலில் சாக்லேட் இருப்பது ஆச்சரியமாக உள்ளதா? ஆம், சாக்லேட்டும் தலைவலியைத் தூண்டும். ஆனால் ஒரு சாக்லேட் சாப்பிட்டால் தலைவலி வராது. அதுவே 4-5 துண்டுகள் சாக்லேட் சாப்பிட்டால் தான் தலைவலியை உண்டாக்கும். ஏனெனில் இதில் காப்ஃபைன் மற்றும் தைரமைன் உள்ளது. இவை இரண்டும் உடலில் அதிகமாகும் போது தான் தலைவலி ஏற்படுகிறது.

பால் மற்றும் காபி
தினமும் நாம் சாப்பிடும் பால் மற்றும் காபியும் ஒருவருக்கு தலைவலியை உண்டாக்கும். அதுவும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனையைக் கொண்டவர்கள் பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களை உட்கொண்டால், அதன் பக்கவிளைவாக தலைவலியை அனுபவிக்க நேரிடும்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், ஆரோக்கியமான பழங்களாக இருக்கலாம். ஆனால் அவற்றில் ஆக்டோபமைன் என்ற பொருள் உள்ளது. இது தலைவலியைத் தூண்டக்கூடிவை. எனவே அசிட்டிக் பழங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலமிச்சை, சாத்துக்குடி, கிரேப்ஃபுரூட் போன்றவற்றை உட்கொள்ளும் போது தலைவலியால் அவதிப்படலாம்.

செயற்கை சுவையூட்டிகள்
பொதுவாக செயற்கை சுவையூட்டிகள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியவை. குறிப்பாக செயற்கை சுவையூட்டிகளில் அஸ்பார்டேம் உள்ளது. இது நல்ல மனநிலையுடன் வைத்திருக்க உதவும் டோபமைன் ஹார்மோன்களின் அளவைக் குறைப்பதோடு, தலைவலியைத் தூண்டும்.