Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
இரவு 8 மணிக்கு மேல் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க..
ஆய்வு ஒன்றில், இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுபவர்கள் அதிகளவு கலோரிகளை உட்கொள்வது தெரிய வந்தது. கலோரிகளை அதிகம் உட்கொண்டால், அது உடல் பருமனுக்கு தான் வழிவகுக்கும்.
வழக்கமாக நீங்கள் இரவு நேரத்தில் எத்தனை மணிக்கு சாப்பிடுவீர்கள்? 8 மணிக்கு முன்பா அல்லது 8 மணிக்கு பின்னரா? நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இரவு 8 மணிக்கு முன்னரே சாப்பிட வேண்டும், இல்லாவிட்டால் உடல் பருமனாகிவிடும் என்று பலர் சொல்வார்கள். ஆனால் இது இதோடு நிற்கவில்லை. இரவு படுக்கைக்கு முன் பழங்களை சாப்பிடக்கூடாது, படுக்கைக்கு 2-3 மணிநேரத்திற்கு முன்னரே சாப்பிட்டுவிட வேண்டும் மற்றும் பலவற்றை சொல்வதுண்டு. ஆனால் இவையெல்லாம் உண்மையா அல்லது கட்டுக்கதையா?

ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரின் கூற்றுப்படி, நீங்கள் எவ்வளவு உணவு உண்கிறீர்கள் என்பதை விட எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். மேலும் ஒருவர் இரவு தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதனால் தூங்கும் போது உடல் எடையை இழக்க நேரிடும். அதோடு இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் சாப்பிடும் இரவு உணவு லேசானதாக இருக்க வேண்டும். இதனால் அவை எளிதில் ஜீரணமாகும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், இரவு உணவை உண்பதால் மட்டும் ஒருவரது உடல் பருமனாகாது.
ஆய்வு ஒன்றில், இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுபவர்கள் அதிகளவு கலோரிகளை உட்கொள்வது தெரிய வந்தது. கலோரிகளை அதிகம் உட்கொண்டால், அது உடல் பருமனுக்கு தான் வழிவகுக்கும். ஆகவே நீங்கள் இரவு தாமதமாக உண்பவராக இருந்தால், மோசமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. முக்கியமாக ஆரோக்கியமற்ற, கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதோடு இரவு தாமதமாக உணவுகளை உட்கொண்டால், தூங்குவதற்கு முன் சிறிது வாக்கிங் மேற்கொள்வது நல்லது.

சாக்லேட்
சாக்லேட்டுகள் ஒருவரின் இனிப்பின் மீதான ஆவலைப் போக்கலாம். ஆனால் அவை கலோரிகள் அதிகம் நிறைந்தவை. அதோடு, சாக்லேட்டுகளில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. இது ஒருவரது உடலில் ஆற்றலை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இதில் மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் விழித்திருக்கச் செய்யும்.

ஆல்கஹால்
நீங்கள் உங்களின் உடல் எடையைக் குறைத்து, தசைகளின் வலிமையைப் பெற முயற்சித்தால், இரவு நேரத்தில் மது அருந்துவதில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் ஆல்கஹாலில் கலோரிகள் அதிகம் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு, தூக்க சுழற்சியை தொந்தரவு செய்யும்.

சிப்ஸ்
சிப்ஸ்கள் எண்ணெயில் பொரிக்கப்பட்டவை. இவற்றில் கலோரிகள் அதிகம் நிறைந்திருக்கும். பலருக்கு டிவி பார்க்கும் போது சிப்ஸ் போன்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை சாப்பிடப் பிடிக்கும். ஆனால் இரவு நேரத்தில் சிப்ஸ்களை சாப்பிட்டால், அது உடல் பருமனை அதிகரிக்கும்.

காற்றூட்டப்பட்ட பானங்கள்
காற்றூட்டப்பட்ட பானங்கள் சுவையாக இருக்கலாம். ஆனால் இந்த வகையான பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் நிறைந்துள்ளது என்பது தெரியுமா? இந்த பானங்களை பகல் நேரத்தில் குடித்தாலே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுவும் இரவு நேரத்தில் குடித்தால், அது உடல் பருமனை அதிகரித்து, பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஐஸ்க்ரீம்
யாருக்கு தான் ஐஸ்க்ரீம் சாப்பிட பிடிக்காது? ஆனால் இந்த சுவையான மற்றும் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். ஏனெனில் ஐஸ்க்ரீமிலும் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே இரவு நேரத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications
