Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்
உங்க இதயத்தை ஆரோக்கியமாகவும் சர்க்கரை அளவை குறைக்கவும்... இந்த 5 உணவுகள சாப்பிட்டா போதுமாம்!
19 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 25-30 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது என அமெரிக்காவின் வேளாண்மைத் துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து தகவல் மையம் கூறுகிறது.
நாம் சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறன. ஆதலால், நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் என்பது உங்கள் உடல் சரியாக செயல்பட, ஆற்றலை உருவாக்க மற்றும் நோய்களைத் தடுக்க நீங்கள் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள். அவற்றில் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நார்ச்சத்து போன்ற பல உள்ளன. அவை அனைத்தும் அவசியமானவை என்றாலும், நார்ச்சத்து உங்களுக்குத் தேவையான மிக முக்கியமான மேக்ரோநியூட்ரியண்ட்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் குடல் ஆரோக்கியத்தை ஒரே நேரத்தில் கட்டுக்குள் வைத்திருக்கவும், அதே நேரத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவும் சிறப்பான வழியாகும். மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அவை என்னென்ன உணவுகள் மற்றும் நன்மைகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நார்ச்சத்து சாப்பிட வேண்டும்?
19 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 25-30 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது என அமெரிக்காவின் வேளாண்மைத் துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து தகவல் மையம் கூறுகிறது. இந்தத் தேவையான அளவைப் பெறுவதற்கு, உங்கள் வழக்கமான உணவில் பல்வேறு காய்கறிகள், பழங்கள், நட்ஸ்கள் மற்றும் விதைகளைச் சேர்க்க வேண்டும். உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அதிக நார்ச்சத்து கொண்ட சில உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

நார்ச்சத்துக்களின் ஆரோக்கிய நன்மைகள்
உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உடலைப் பெற, சரியான நார்ச்சத்து நிறைந்த உணவு முறையையும் பின்பற்ற வேண்டும். நார்ச்சத்து நமது உணவில் மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது, மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நல்ல நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை சந்திப்பதை தவிர்க்கலாம். ஆப்பிள் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, அது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதிகளவு நார்ச்சத்தும் உள்ளதால், இவை உடல் எடையை குறைப்பது, செரிமான ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் உட்பட பல நன்மைகளை உங்களுக்கு வழங்கிறது. ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிளில் 4.4 கிராம் நார்ச்சத்து உள்ளது மற்றும் 100 கிராம் ஆப்பிளில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அவகேடோ
வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மிகவும் ஆரோக்கியமான பழமாக அவகேடோ உள்ளது. இந்த பழத்தில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமல்ல, ஆரோக்கியமான கொழுப்புகளும் நிறைந்துள்ளது. இது 100 கிராமுக்கு 6.7 கிராம் நார்ச்சத்து அல்லது ஒரு கப் அவகேடோ பழத்தில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் சருமம், தலைமுடி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களை செய்கிறது.

ராஸ்பெர்ரி
ராஸ்பெர்ரி இனிமையான சுவையின் கூடுதல் நன்மைகளுடன் மிகவும் சத்தானதாக உள்ளது. வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு சத்துகள் இதில் நிறைந்துள்ளன. ஒரு கப் ராஸ்பெர்ரியில் 8 கிராம் அல்லது 100 கிராமுக்கு 6.5 கிராம் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும், இவை பொட்டாசியத்தையும் உங்களுக்கு வழங்குகின்றன. இது இதய செயல்பாட்டிற்கு அவசியமானவை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. ராஸ்பெர்ரியில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பக்கவாதம் மற்றும் இதய நோய்களைத் தடுக்க உதவும். ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க ராஸ்பெர்ரி உதவுகிறது.

பருப்பு
பருப்பு வகைகள் மலிவான விலையில் எளிதாக கிடைக்கும். இவற்றை காய்கறிகள், சூப் உட்பட பல வழிகளில் தயார் செய்து உட்கொள்ளலாம். பருப்பில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ன. பருப்பு சூப் பல உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். சமைத்த ஒரு கப் பருப்பில் 13.1 கிராம் அல்லது 100 கிராமுக்கு 7.3 கிராம் அதிக நார்ச்சத்து உள்ளது.

பட்டாணி பருப்பு
பட்டாணி பருப்பு உலர்ந்த மற்றும் உரிக்கப்படும் விதைகளால் செய்யப்படுகின்றன. இவற்றை நாம் பல்வேறு வகைகளில் சமைக்கலாம். ஃபைபர் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, சமைத்த பட்டாணி பருப்பில் 16.3 கிராம் நார்ச்சத்து அல்லது 100 கிராமுக்கு 8.3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளன. எனவே, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் நார்ச்சத்து நிறைந்த இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications