For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடுவது விஷம் சாப்பிடுவதற்கு சமமாம்... உஷார்...

பெரும்பாலான மக்கள் காலை உணவைத் தவிர்ப்பதோடு, காலை உணவாக உண்ணும் உணவுகளில் தவறுகளை செய்கின்றனர். குறிப்பாக ஆரோக்கியமான சில உணவுகளை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடுவது விஷயம் சாப்பிடுவதற்கு சமமாகும்.

|

ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. காலை உணவை உண்டால் தான் நாள் முழுவதும் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும். ஆனால் பெரும்பாலான மக்கள் காலை உணவைத் தவிர்ப்பதோடு, காலை உணவாக உண்ணும் உணவுகளில் தவறுகளை செய்கின்றனர். குறிப்பாக ஆரோக்கியமான சில உணவுகளை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடுவது விஷம் சாப்பிடுவதற்கு சமமாகும்.

Eating These Things Can Be Danger For You On An Empty Stomach In The Morning

இப்போது எந்த உணவுகளை எல்லாம் காலையில் வெறும் வயிற்றில் காலை உணவாக உட்கொள்ளக்கூடாது என்பதைப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அந்த உணவுகளை உங்களின் காலை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளியை வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆபத்தானதாக கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் டயட்டில் இருக்கும் போது காலையில் சாலட்டுகள் சாப்பிடுவார்கள். அப்படி சாலட் தயாரிக்கும் போது அந்த சாலட்டில் தக்காளியை சேர்க்காதீர்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே தக்காளியை காலை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். அதுவும் தக்காளி ஜூலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது கல் அபாயத்தை அதிகரிக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

கிழங்கு வகையைச் சேர்ந்தது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இது அற்புதமான இனிப்புச் சுவையைக் கொண்ட ஒரு குளிர்கால காய்கறி. இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் என்ன தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள டானின்கள் மற்றும் பெக்டின், வாய்வுத் தொல்லை, அமில சுரப்பு மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை உண்டாக்கும். ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை காலை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

வாழைப்பழத்துடன் பால்

வாழைப்பழத்துடன் பால்

வாழைப்பழத்துடன் பால் சாப்பிடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். இந்த காரணத்தால் பலர் காலை உணவின் போது பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் நீங்கள் தினமும் வாழைப்பழத்துடன் பால் சாப்பிடுபவரானால், கவனமாக இருங்கள். ஏனெனில் இந்த இரண்டையும் ஒன்றாக வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலை உணவாக வாழைப்பழம் பால் சாப்பிடுபவர்கள் வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பார்கள். ஏனென்றால் பாலுடன் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அவற்றில் உள்ள மக்னீசியம் இருமடங்காகி, மலச்சிக்கலை உண்டாக்கும். வேண்டுமானால் வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடுவதற்கு முன் பிரட் சாப்பிடுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

பெரும்பாலான மக்கள் காலை உணவாக பழங்களை சாப்பிட விரும்புவார்கள். ஏனெனில் பழங்களை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக புளிப்புச் சுவை கொண்ட பழங்களான சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும். வேண்டுமானால் பிரட் சாப்பிட பின் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள். ஏனெனில் காரமான உணவுகளில் உள்ள மசாலாப் பொருட்கள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். எனவே எப்போதும் காரமான உணவுகளை காலை உணவின் போது எடுக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating These Things Can Be Danger For You On An Empty Stomach In The Morning

Did you know eating these things can be Danger for you on an empty stomach in the morning? Read on to know more...
Desktop Bottom Promotion