For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் இந்த உணவுகளை காலையில வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடம்புல எந்த பிரச்சனையும் வராதாம்...

கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கவும், உடலை ஆற்றலுடன் வைத்துக் கொள்ளவும் ஒருசில உணவுகளை காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும்.

|

காலை உணவு என்பது ஒரு நாளின் மிகவும் முக்கியமான உணவு. காலை உணவின் போது நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். இதனால் ஒரு நாள் முழுவதும் செயல்பட தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் உடலின் ஆற்றல் சிறப்பான நிலையில் இருக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் வேண்டுமானால், வறுத்த மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு பதிலாக, ஆரோக்கியமான உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும்.

Eat These Foods On An Empty Stomach In The Morning During Summer

அதுவும் கோடையில் அதிகமான வெயிலால், உடலின் ஆற்றல் குறைந்து விரைவில் சோர்ந்துவிடுவோம். எனவே கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கவும், உடலை ஆற்றலுடன் வைத்துக் கொள்ளவும் ஒருசில உணவுகளை காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும். இதனால் அந்த உணவுகள் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். இப்போது கோடை காலத்தில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி

பப்பாளி

காலை எழுந்ததும் பப்பாளியை சாப்பிட உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதோடு, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.

சீரக நீர்

சீரக நீர்

சீரகத்தை இரவு தூங்கும் முன் சுடுநீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்தம் குடிக்க வேண்டும். இதனால் இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரிகிறது.

தர்பூசணி

தர்பூசணி

கோடையில் அதிகம் கிடைக்கும் பழம் தான் தர்பூசணி. வெயில் காலத்தில் நாள் முழுவதும் உடல் நீரேற்றத்துடன் இருக்க நிறைய எலக்ட்ரோலைட்டுகள் தேவை. இப்பழத்தில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. மேலும் இது செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இது தவிர இப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, லைகோபைன், ஃபுருக்டோஸ் போன்றவை அதிகம் உள்ளது. இதில் கலோரிகளும் குறைவு. முக்கியமாக தர்பூசணியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. எனவே இப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

ஊற வைத்த உலர் பழங்கள்

ஊற வைத்த உலர் பழங்கள்

நினைவாற்றல் மற்றும் மனதை கூர்மையாக்குவதற்கு ஒரு கையளவு நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் ஜிம் செல்பவர்கள் மற்றும் உடலை ஃபிட்டாதக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், ஊற வைத்த பாதாமை ஒரு கையளவு சாப்பிட வேண்டும். பாதாம், வால்நட்ஸ் மற்றும் உலர் அத்திப்பழம் போன்றவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஓம நீர்

ஓம நீர்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஓம நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஓமத்தில் கனிமச்சத்துக்கள், நொதிகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இந்த ஓம நீர் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். மேலும் இந்த நீர் உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் உதவுகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட நினைப்பவர்கள், காலையில் ஓம நீரை குடியுங்கள். அதற்கு இரவு தூங்கும் முன் ஓமத்தை சுடுநீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும்.

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ்

கேரட், பீட்ரூட், பச்சை காய்கறிகளால் ஆன ஜூஸை காலையில் குடிப்பதும் நல்லது. இந்த ஜூஸ் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். குறிப்பாக இந்த காய்கறி ஜூஸ் பெண்களுக்கு மிகவும் நல்லது. காய்கறி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இவை செரிமான மண்டலம், சருமம், தலைமுடி போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat These Foods On An Empty Stomach In The Morning During Summer

In this article, we shared some foods you should consume on an empty stomach in the morning during summer. Read on...
Story first published: Wednesday, March 30, 2022, 18:15 [IST]
Desktop Bottom Promotion