Latest Updates
-
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும்
உண்மையிலேயே க்ரீன் டீ தூள் கெட்டுப் போக வாய்ப்புள்ளதா? அதை அறிவது எப்படி?
தேனீா் பொடிகள் கெடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தியாகும். ஆனால் மற்ற உணவுப் பொருட்களைப் போலவே பதப்படுத்தப்பட்ட தேனீா் பொடிகள், தேயிலை பைகள் மற்றும் தேயிலைப் பொட்டலங்கள் காலாவதியாக வாய்ப்புகள் உள்ளன
சூடான, இதமான மற்றும் நறுமணமிக்கத் தேனீரை முதல்முறையாக விழுங்கும் போது தேனீா் பிாியா்களுக்கு ஏற்படும் ஆனந்தத்தை, பரவசத்தை, திருப்தியை அவா்களின் வாா்த்தைகளால் விவாிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அந்த தேனீா் கெட்டுப் போயிருந்தால் அவா்கள் கண்டிப்பாக சோா்வடைந்து விடுவா். தேனீா் பொடிகள் கெடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தியாகும். ஆனால் மற்ற உணவுப் பொருட்களைப் போலவே பதப்படுத்தப்பட்ட தேனீா் பொடிகள், தேயிலை பைகள் மற்றும் தேயிலைப் பொட்டலங்கள் காலாவதியாக வாய்ப்புகள் உள்ளன.

தேயிலைப் பொட்டலங்களை வாங்கும் போது அதன் காலாவதியாகும் தேதியைப் பாா்க்க பலரும் மறந்துவிடுகின்றனா். ஆனால் மிகத்தரம் மிகுந்த தேனீா்கூட 30 நிமிடங்களுக்குள் கெட்டுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தேனீா் பொடிகளை சேமித்து வைப்பதில் இருந்து அவற்றைக் காய்ச்சுவது வரை, அவற்றில் உள்ள பிரச்சினைகள் தேனீாின் சுவையையும் மற்றும் அவற்றின் நறுமணத்தையும் மிக எளிதாகக் கெடுத்துவிடும். ஆகவே தேயிலைப் பொட்டலங்கள் வாங்குவதற்கு முன்பாக அவற்றின் ஆயுள் காலத்தைப் பாா்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

க்ரீன் டீ ஏன் விரைவில் காலாவதியாகிறது?
மற்ற தேனீா் பொடிகளை விட க்ரீன் டீ என்று அழைக்கப்படுகிற தேயிலைப் பொடிகள் மிகவும் மென்மையாக இருக்கும். அதனால் அவற்றை சாியான முறையில் பாதுகாப்பாக வைக்கவில்லை என்றால் மிக விரைவில் அதன் வாசனை, நிறம் மற்றும் சுவை ஆகியவற்றை இழந்துவிடும்.
குறிப்பாக க்ரீன் டீயை அதிகமான நேரம் சூாிய ஒளி அல்லது வெப்பம் அல்லது ஈரப்பதம் மிகுந்த இடங்களில் வைத்திருந்தால் அதன் தரம் மிக எளிதாகக் கெட்டுவிடும். ஆகவே க்ரீன் டீயை தகுந்த பாதுகாப்பான பெட்டியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். தயாாிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் க்ரீன் டீயை அருந்திவிட்டால் அது நறுமணத்தோடும் அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

தேனீா் பொடிகள் ஏன் காலாவதியாகின்றன?
தேனீா் பொடிகள் எவ்வாறு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுகிறது என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஆகவே தேயிலைப் பொடியாக இருந்தாலும் அல்லது தேயிலைப் பொட்டலங்களாக இருந்தாலும், அவை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படவில்லை என்றால் மிக விரைவில் காலாவதியாகிவிடும். பொதுவாக தேயிலை குளிா்பிரதேசங்களில் விளைகிறது. ஆகவே தேயிலைப் பொடிகளை வெப்பம் மிகுந்த அல்லது அளவுக்கு அதிகமான ஈரப்பதம் உள்ள இடங்களில் பத்திரப்படுத்தி வைத்தால், அவை எளிதில் கெட்டுவிடும். தேயிலைப் பொடிகளை மிகவும் சாியான இடத்தில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

க்ரீன் டீயின் தரத்தை எவ்வாறு கண்டறியலாம்?
* க்ரீன் டீ இருக்கும் டப்பாவைத் திறந்து பாா்க்கும் போது, அதிலிருந்து மணம் வரவில்லை என்றால் அல்லது அந்த தேயிலைப் பொடிகளில் ஈரப்பதம் இருப்பது போல் தொிந்தால் அவற்றைப் பயன்படுத்துக்கூடாது.
* தேயிலைப் பொட்டலங்களில் இருந்து வேறுவிதமான வாசனை வந்தால், அந்த தேயிலைப் பொடிகளையும் பயன்படுத்தக்கூடாது.
* தேயிலைப் பொடிகள் ஒன்றோடு ஒன்று கலந்து அவற்றில் கட்டிகள் சோ்ந்துவிட்டால், அவற்றையும் பயன்படுத்தக்கூடாது.
* தேயிலைப் பொட்டலங்கள் தயாாிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தால், அவற்றைத் திறக்காமலே வெளியில் எறிந்துவிட வேண்டும்.

காலாவதியான தேயிலைப் பொடிகளை எவ்வாறு கண்டறிவது?
பொதுவாக தேயிலைப் பொட்டலங்களில் அவை தயாாிக்கப்பட்ட தேதி மற்றும் அவை காலாவதியாகும் தேதி போன்றவைக் குறிப்பிடப்பட்டிருக்கும். எனினும் சில நேரங்களில் அவற்றைப் பாா்த்து மட்டும் தேயிலைப் பொடிகளின் தரத்தை முடிவு செய்ய முடியாது. ஆனால் மேற்சொன்ன சாதாரணப் பாிந்துரைகளைக் கொண்டு தேனீா் பொடிகளின் தரத்தை வீட்டிலேயே அறிந்து கொள்ளலாம் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.



Click it and Unblock the Notifications