For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

பொதுவாக கார்போஹைட்ரேட் உணவுகள் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகின்றன. ஆனால் பல ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் இயற்கையாகவே உடலில் இருந்து கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

|

பொதுவாக கார்போஹைட்ரேட் உணவுகள் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகின்றன. ஆனால் கார்போஹைட்ரேட்டுகளில் இரு வகைகள் உள்ளன. அவை நல்ல கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கார்போஹைட்ரேட்டுகள். இதில் குக்கீஸ், மிட்டாய் மற்றும் பிற இனிப்பான உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் தீங்கு விளைவிக்கும். ஆனால் பல ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் இயற்கையாகவே உடலில் இருந்து கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

Carbohydrate Foods That Reduce Bad Cholesterol From The Body

இன்று கொலஸ்ட்ரால் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தற்போது முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இப்பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். கொலஸ்ட்ரால் பிரச்சனை ஒருவருக்கு வருவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை போன்றவை முக்கியமான காரணங்களாகும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அது இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுப் போன்ற பொருளாகும். இது இரத்த நாளங்களின் தேங்கி அடைப்பை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒருவரது உடலில் எவ்வளவு கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும்?

ஒருவரது உடலில் எவ்வளவு கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும்?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கொலஸ்ட்ரால் உலகெங்கிலும் இதய நோயை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாகும். உயர் கொலஸ்ட்ராலால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2.6 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 20 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் மொத்த கொலஸ்ட்ரால் 125 முதல் 200 mg/dL ஆகவும், ஆண்களில் 125 முதல் 200 mg/dL ஆகவும் இருக்க வேண்டும்.

கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி?

கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி?

உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க நினைத்தால், அதற்கு பல உணவுகள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளில் கார்போஹைட்ரேட் உணவுகளும் அடங்கும். அதுவும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் தானாக குறையும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ் ஆற்றல் தரும் கார்போஹைட்ரேட்டுகளை மட்டும் அதிகம் கொண்டிருப்பதில்லை. இதில் நார்ச்சத்து, புரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க எளிய வழி பீன்ஸ் சாப்பிடுதாகும். ஆய்வு ஒன்றில் நான்கு வாரத்திற்கு தினமும் ஒரு கப் பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவது தெரிய வந்தது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள்களில் பல்வேறு பாலிஃபீனால்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆப்பிளில் இருப்பதாக கூறப்படும் பெக்டின் என்னும் ஊட்டச்சத்து, அதன் தோலில் உள்ளது. எனவே ஆப்பிளை சாப்பிடும் போது அதை தோலுடன் சாப்பிடுங்கள். இது கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உறிஞ்சப்படுவதைத் தடுக்க உதவுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுப் பொருளாகும். இதில் உள்ள பீட்டா குளுக்கன் நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலுடன் பிணைந்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்றுகிறது. தினமும் குறைந்தது 3 கிராம் ஓட்ஸ் பீட்டா-குளுக்கன் சாப்பிடுவது கெட்ட கொழுப்பை 10 mg/dL வரை குறைக்கும் என்று ஒரு பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

உலர்ந்த ப்ளம்ஸ்

உலர்ந்த ப்ளம்ஸ்

உலர்ந்த ப்ளம்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு பல சத்துக்கள் கிடைக்கும். முக்கியமாக இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ஜர்னல் ஆஃப் மெடினல் ஃபுட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், ஆறு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு உலர் ப்ளம்ஸ் சாப்பிடுவது கொழுப்பைக் குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு பொதுவாக மாவுச்சத்து நிறைந்த காய்கறி. கூடுதலாக இதில் கார்போஹைட்ரேட்டுகளுடன், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இந்த நார்ச்சத்து இரத்தத்தில் கொழுப்புக்கள் உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். மேலும் உருளைக்கிழங்கில் அந்தோசயனின் பாலிபினால்கள் உள்ளன. இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Carbohydrate Foods That Reduce Bad Cholesterol From The Body

Here we listed some carbohydrate-rich food items that will flush out the cholesterol that has accumulated in the blood.
Story first published: Friday, April 1, 2022, 17:31 [IST]
Desktop Bottom Promotion