For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

மூட்டுக்களில் பிரச்சனைகள் வர ஆரம்பிப்பதற்கு முன்பே மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதில் ஒரு சிறப்பான வழி கால்சியம், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் உணவுகளை உண்பது.

|

பெரும்பாலானோர் தங்கள் மூட்டுக்களில் பிரச்சனைகளை சந்திக்கும் வரை, மூட்டுக்களைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. ஆனால் வருமுன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே மூட்டுக்களில் பிரச்சனைகள் வர ஆரம்பிப்பதற்கு முன்பே மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

Best Foods To Help Relieve Your Joint Pain

இளமையிலேயே மூட்டுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சித்தால், வயதான பின் மூட்டுக்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பொதுவாக வயதாகும் போது எலும்புகளின் அடர்த்தி குறையும். எலும்புகளின் அடர்த்தி குறையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதில் ஒரு சிறப்பான வழி கால்சியம், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வது.

MOST READ: இதுவரை நாம் தவறான முறையில் சாப்பிட்டு வந்த சில ஆரோக்கியமான உணவுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூட்டு வலி

மூட்டு வலி

வாழ்வின் ஒரு கட்டத்தில் அனைவரும் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் மூட்டு வலி. சில சமயங்களில் கீல்வாதம், முடக்கு வாதம், புர்சிடிஸ், கவுட், சுளுக்கு மற்றும் பிற காயங்கள் உள்ளிட்ட நோய் அல்லது காயத்தால் கூட மூட்டு வலி ஏற்படலாம்.

உங்கள் மூட்டு வலியைப் போக்க மருந்து அல்லது மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருத்துகளுடன், உண்ணும் உணவுகளின் மீதும் கவனத்தை செலுத்துங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உங்களுக்கு மூட்டு வலி இருந்தால், சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், மாட்டிறைச்சி, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், ட்ரான்ஸ் கொழுப்புக்கள் போன்றவற்றை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இவை மூட்டுக்களின் வீக்கத்தை அதிகரிக்கும். ஆனால் குறிப்பிட்ட சில உணவுகள் மற்றும் மசாலா பொருட்கள் மூட்டு வலிக்கு நல்லது. கீழே அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் மூட்டு வலியைக் குறைக்கலாம்.

மத்திய தரைக்கடல் உணவு

மத்திய தரைக்கடல் உணவு

மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் மத்திய தரைக்கடல் டயட்டை மேற்கொள்வது நல்லது. ஏனெனில் இந்த டயட்டானது முழு உணவுகளில் கவனத்தை செலுத்துகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உள்ளடக்கியது. ஆகவே கீல்வாதம் உள்ளவர்கள் இந்த டயட்டை மேற்கொள்வதன் மூலம் மூட்டு வீக்கம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதுடன், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன. ஆகவே மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும். பல ஆய்வுகள் மீன் எண்ணெய் மூட்டு வலியைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, NSAIDs தேவையைக் குறைப்பதாக கூறுகின்றன. காட்டு சால்மன், ட்ரௌட் மற்றும் மத்தி போன்ற மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்களாகும். சைவ உணவாளர்கள் இத்தகைய ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தை ஆளி விதை, சியா விதைகள் மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றில் இருந்து பெறலாம்.

இலைக் காய்கறிகள்

இலைக் காய்கறிகள்

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முளைக்கட்டிய புருஸல்ஸ் அல்லது கேல் கீரை போன்றவற்றை அதிகம் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த காய்கறிகள் ஆன்டிங.ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களின் சக்தி நிலையங்களாகும். இவை மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மஞ்சள் மற்றும் இஞ்சி

மஞ்சள் மற்றும் இஞ்சி

மஞ்சள் மற்றும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ள்ளன. 2006 ஆம் ஆண்டு மேற்கொள்ப்பட்ட அரிசோனா ஆய்வில், மஞ்சுள் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை தடுக்க உதவுவதாக தெரிய வந்தது. ஆகவே அன்றாட உணவில் மஞ்சள் மற்றும் இஞ்சியைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

2008 இல் மேரிலேண்ட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், க்ரீன் டீ கீல்வாதம் தொடர்பான பிரச்சனைகளில் மாற்றங்களைத் தூண்டியது. மேலும் க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனாலிக் பொருட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது. ஆகவே தினமும் ஒரு கப் க்ரீன் டீயை மூட்டு வலி உள்ளவர்கள் குடிப்பது நல்லதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Foods To Help Relieve Your Joint Pain

If you have joint pain, dieticians recommend avoiding sugars, refined grains, and red meat. But certain foods and spices can help reduce inflammation.
Desktop Bottom Promotion