Just In
- 10 min ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 5 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Don't Miss
- Sports
இந்திய அணியில் அதிகரிக்கும் கொரோனா.. டிரெஸிங் ரூம்மில் என்ன பிரச்சினை.. பயோ பபுள் இல்லாததால் சிக்கல்
- News
நாங்க இருக்கோம்! ஒரு கை பாத்துருவோம்! தந்தைக்காக களமிறங்கிய ‘தனயன்கள்.. சூடுபிடித்த அதிமுக ரேஸ்.!
- Finance
ரஷ்யாவின் ஒற்றை நடவடிக்கை.. 40 - 50 மில்லியன் மக்களை பசியில் ஆழ்த்தும்
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா? அப்ப இந்த உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்க..
பைல்ஸ் என்னும் மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை. பைல்ஸானது ஆசன வாய் பகுதியில் எரிச்சல் மற்றும் அரிப்புக்கள், இரத்தக்கசிவு, வலி மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும். இந்த பைல்ஸ் கர்ப்பம், உடல் பருமன் அல்லது குடல் அசைவுகளின் போது அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் ஏற்படுகிறது. ஆசன வாய் பகுதியில் வலி, அரிப்பு மற்றும் இரத்தப்போக்கு போன்றவை பைல்ஸ் பிரச்சனையின் முக்கியமான அறிகுறிகளாகும்.
பைல்ஸ் ஆபத்தானவை அல்ல. இருப்பினும், இது கடுமையானது மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியது. இந்த பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனித்தால், பைல்ஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம். சில உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கி பைல்ஸ் பிரச்சனையை தீவிரப்படுத்தும். அந்த உணவுகளைத் தவிர்த்து வந்தாலே, பைல்ஸ் வராமல் தடுக்கலாம்.

க்ளுட்டன் உணவுகள்
க்ளுடடன் அதிகம் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும். இந்த க்ளுட்டன் கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் அதிகம் காணப்படுகிறது. க்ளுட்டன் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுப்பதோடு, சிலருக்கு நோயெதிர்ப்பு அமைப்பு செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்துகிறது. இது மலச்சிக்கலைத் தூண்டி பின்னர் பைல்ஸை உண்டாக்கும்.

பசும்பால் அல்லது பால் பொருட்கள்
சிலருக்கு பசும்பால் அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டுமெனில் பசும்பாலுக்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தலாம்.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியை சாப்பிடுவதும் பைல்ஸ் நோயை உண்டாக்கலாம். ஏனெனில் மாட்டிறைச்சியில் மிகவும் குறைவான அளவில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இதில் கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆகவே மாட்டிறைச்சியை உட்கொண்டால், அது எளிதில் ஜீரணிக்காமல், உடலில் அப்படியே தேங்கி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே தான் பைல்ஸ் நோயாளிகள் மாட்டிறைச்சிறை அறவே தொடக்கூடாது.

வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அது பைல்ஸ் பிரச்சனையை வரவழைக்கும். ஏனெனில் மாட்டிறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளன. ஆகவே வறுத்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

ஆல்கஹால்
ஆல்கஹால் உடலில் நீரின் அளவைக் குறைத்து, நீரிழப்பை ஏற்படுத்தும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது மலச்சிக்கலை தீவிரமாக்கும். மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், நீண்ட காலமாக மலம் எளிதாக வெளியேறாமல் அதிக அழுத்தம் மலக்குடலுக்கு கொடுக்கப்பட்டு, பைல்ஸ் நோயை ஏற்படுத்தும். ஆகவே ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.