For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா?... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா?

காபி பீன்ஸைப் பயன்படுத்தி காபி குடிப்பதால் என்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகளும் பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

|

ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச காபி தினம் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினத்தின் சரியான தோற்றம் தெரியவில்லை. உலகளவில், இந்த நாள் அக்டோபர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது, ஆனால் சில நாடுகளில் அந்தந்த நாட்டிற்கென குறிப்பிட்ட தேசிய காபி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், இந்த நாள் செப்டம்பர் 29 ல் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அது அக்டோபர் 1 வரை தொடரும்.

Coffee Beans

காபி பீன் அல்லது காபி செர்ரி என்பது காபி செடியின் விதை மற்றும் மிகவும் பிரியமான brew காபியின் மூலப்பொருளாகும். இதன் கொட்டைகள் பீன்ஸுடன் ஒத்திருப்பதால் அவை பீன்ஸ் என்று குறிப்பிடப்படுகின்றன. காபி பீன்ஸ் வழக்கமாக காபியாக தயாரிக்க உலர்த்தி, வறுத்து, காய்ச்சப்படுகிறது. கூடவே சில ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. காபி பீன்ஸ் ஒரு கப் காபியின் அதே நன்மைகளை வழங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி குடிப்பது

காபி குடிப்பது

காபி குடிப்பது எடை இழப்பு, வகை 2 நீரிழிவு நோய் குறைதல், கல்லீரல் நோய் வருவதைத் தடுக்கும் மற்றும் மேலும் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கிறது. காபி பீன்ஸ் நுகர்வுக்கு பாதுகாப்பானதா? இந்த சர்வதேச காபி தினத்தன்று, காபி பீன்ஸ்களின் நம்பத்தகுந்த நன்மைகள் மற்றும் அபாயங்கள் மற்றும் காபி பீன்களின் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம்.

MOST READ: உங்க ஜாதகத்தில் ராகு கேது எப்படி இருக்கிறது - பலன் தரும் பரிகாரங்கள்

காபி பீன்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

காபி பீன்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

ஆம், காபி பீன்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானது. ஆனால், மிதமாக மட்டுமே. காபி பீன்ஸ் சாப்பிடுவது அல்லது மெல்லுவது காஃபின் உங்கள் உடலில் நேரடியாக நுழைய அனுமதிக்கிறது, ஏனெனில் இது உங்கள் வாயின் புறணி காஃபின் விரைவாக உறிஞ்சப்படுவதை அனுமதிக்கிறது.

காபி பீன்ஸ் கொண்டிருக்கும் நன்மைகள் அதை நேரடியாக உட்கொள்ளும்போது அதிகரிக்கின்றன. அதேபோல , அதன் எதிர்மறையான தாக்கமும் பெருக்கப்படுகிறது - இதன் மூலம் அதை மிதமாக உட்கொள்வதன் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது.

பச்சை காபி பீன்ஸ் உடன் ஒப்பிடுகையில், வறுத்த காபி பீன்ஸ் நேரடி நுகர்வுக்கு ஏற்றது. பச்சை காபி பீன்ஸ் ஒரு கசப்பான மற்றும் மர சுவை கொண்டது மற்றும் இது வறுத்தெடுக்கப்படாததால் நேரடி நுகர்வுக்கு தகுதியற்றது. வறுக்கும் செயல்முறை காபி பீன்களிள் குளோரோஜெனிக் அமிலம் எனப்படும் சேர்மத்தின் அளவைக் குறைக்கிறது. எனவே, நாம் உட்கொள்ளும் சாதாரண வறுத்த காபியில் குறைந்த அளவு குளோரோஜெனிக் அமிலமே உள்ளது, மேலும் இது பச்சை காபியைப் போல பயனளிக்காது.

காபி பீன் உட்கொள்ளும் மற்ற பொதுவான வகைகளில் ஒன்று சாக்லேட் மூடிய வறுத்த காபி பீன்ஸ் ஆகும், அவை சுவையாக மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

காபி பீன்ஸின் ஊட்டச்சத்து மதிப்பு

காபி பீன்ஸின் ஊட்டச்சத்து மதிப்பு

காபி பீன்களின் சாத்தியமான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை ஆராய்வதற்கு முன், 100 கிராம் வறுத்த காபி பீன்ஸ் கொண்ட ஊட்டச்சத்து மதிப்பைப் பார்ப்போம்,

100 கிராம் காபி பீன் 284 கிலோகலோரி ஆற்றலும், 15.4 கிராம் மொத்த கொழுப்பும் கொண்டது.

25.9 கிராம் கார்போஹைட்ரேட்

19.8 கிராம் உணவு நார்

10.4 கிராம் புரதம்

74 மி.கி சோடியம்

2020 மி.கி பொட்டாசியம்

இது தவிர கால்சியம், தியாமின், நியாசின், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, ரிபோஃப்ளேவின், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் காபி பீன்களில் உள்ளன.

ஆரோக்கிய நன்மைகள்:

ஆரோக்கிய நன்மைகள்:

காபி பீன்ஸ் கொண்ட ஆரோக்கிய நன்மைகள் குறித்த ஆய்வுகள் குறைவாகவே உள்ளன . காபி பீன்ஸ் சாப்பிடுவது காபி குடிப்பதால் கிடைக்கும் அதே நன்மைகளைப் பெறுவதாக வலியுறுத்தப்படுகிறது. அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆன்டி ஆக்ஸிடண்ட்களின் வளமான ஆதாரம்: ஏராளமான சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்களால் நிரம்பிய காபி பீன்களில் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்துள்ளது, இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பாலிபினால்களின் குடும்பத்தைச் சேர்ந்தது.

நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம்: காபி பீன்களில் குளோரோஜெனிக் அமிலம் இருப்பது இந்த பண்புடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைவான காபி பீன்ஸ் பயன்பாடு நீரிழிவு நோயைக் குறைக்க உதவும். இருப்பினும், காபி பீன்களில் உள்ள குளோரோஜெனிக் அமிலத்தின் அளவு வறுத்த முறை மற்றும் அரபிகா பீன்ஸ், ரோபஸ்டா பீன்ஸ், லைபரிகா பீன்ஸ் மற்றும் எக்செல்சா பீன்ஸ் போன்ற பீன்ஸ் வகையைப் பொறுத்து மாறுபடும்.

MOST READ: இதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா?... இந்த அறிகுறி இருக்குமாம்...

என்ன செய்யும்?

என்ன செய்யும்?

* வீக்கத்தைக் குறைக்கிறது

* புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடலாம்

* இதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கிறது

* சில வகையான புற்றுநோய்கள் வருவதைத் தடுக்கிறது

* மனச்சோர்வு, அல்சைமர் நோய் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற மூளைக் கோளாறுகளிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது

* ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் கல்லீரல் சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்களுக்கு நன்மை பயக்கும்.

குறிப்பு: காபி பீன்களின் மேற்கூறிய சுகாதார நன்மைகள் கூர் நோக்கு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை, இதன் மூலம் மனித உடலில் அதன் முழுமையான தாக்கத்தை கணிசமாகக் கூற கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

வயிற்றுப் பிரச்சினைகள்

வயிற்றுப் பிரச்சினைகள்

காபி பீன்ஸ் அதிகமாக உட்கொள்வது வயிற்றுப் பிரச்சினையை ஏற்படுத்தும், ஏனெனில் இதிலுள்ள காஃபின் மற்றும் கேடகோல்ஸ் (catechols) எனப்படும் கலவைகள் வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இது வயிற்று வீக்கம், குமட்டல் மற்றும் சென்சிடிவ் நபர்களுக்கு வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

குடல் அழற்சி நோய் (ஐபிடி) அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) போன்ற குடல் உபாதை கொண்டவர்கள் இதன் நுகர்வைத் தவிர்க்க வேண்டும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

வயிற்று அமிலத்தின் அதிக அளவு உங்கள் உணவுக்குழாயில் மீண்டும் தள்ளப்படுகிறது, இது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.

தூக்க பாதிப்பு:

தூக்க பாதிப்பு:

கடுமையான அல்லது சிக்கலான பக்க விளைவு இல்லை என்றாலும், காபி பீன்களை அதிகமாக மென்று சாப்பிடுவது தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும், குறிப்பாக காஃபின் உணர்திறன் கொண்ட நபர்களில்.

மேற்கூறிய பக்க விளைவுகளைத் தவிர, காபி பீன்ஸ் அதிகமாக உட்கொள்வது பின்வருவனவற்றையும் ஏற்படுத்தும்:

MOST READ: உடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா?... இதெல்லாம்தான்...

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

கவலை அறிகுறிகளான படபடப்பு, குமட்டல் மற்றும் மன அழுத்த உணர்வுகள் போன்றவற்றை அதிகரிக்கின்றது. இதுவரை நீங்கள் நன்மைகளைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது காபி பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பார்ப்போம்.

*கருச்சிதைவு, குறைந்த எடை கொண்ட குழந்தை பிறப்பு மற்றும் ஆரம்பகால பிரசவம் போன்ற கர்ப்ப பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும்.

அளவோடு உட்கொள்ளும் எதுவுமே எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பது நிதர்சனம். தொடர்ச்சியாக, காபி பீன்ஸ் எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் நீங்கள் அதை அளவோடு மட்டுமே சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are Coffee Beans Safe For Consumption? Science-backed Health Benefits And Risks

Coffee bean or coffee cherry is the seed of the coffee plant and source of the most beloved brew, coffee. They are referred to as beans because of their resemblance to the legume beans.
Story first published: Wednesday, October 9, 2019, 13:17 [IST]
Desktop Bottom Promotion