For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை நிறத்துக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்குற இந்த 6 இரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?

|

நிறங்கள் இந்த உலகில் பல ஆயிரம் உள்ளது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. இது சாப்பிட கூடிய உணவு முதல் உடுத்தும் உடை வரை, இதே தன்மை தான். குறிப்பாக நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் சில நிறங்கள் மட்டுமே நமக்கு அதிக ஆரோக்கியம் தரும். உதாரணத்திற்கு சிவப்பு நிறத்தில் உள்ள பீட்ரூட், செர்ரி, தக்காளி, மிளகாய் போன்றவற்றை கூறலாம்.

பச்சை நிறத்துக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்குற இந்த 6 இரகசியங்கள் பத்தி உங்களுக்கு தெரியுமா?

அதே போல ஊதா நிற காய்கனிகளான முள்ளங்கி, அத்திப்பழம், திராட்சை, கேரட் முதலியவற்றை குறிப்பிடலாம். இந்த நிற பழங்கள் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதே போன்று வெறும் பச்சை நிறத்தில் இருக்க கூடிய சில உணவுகளை நாம் சாப்பிட்டால் சூரியனிடம் இருந்து தாவரத்திற்கு கிடைக்கும் அனைத்து வித சத்துகளும் நேரடியாக நமது உடலுக்கு செல்லும். இனி பச்சை நிறத்திற்குள் ஒளிந்துள்ள அந்த 6 இரகசியங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை நிறம்!

பச்சை நிறம்!

நாம் நினைப்பதை விட இந்த பச்சை நிறம் அதிக ஆற்றலை கொண்டது. இது சூரியனிடம் இருந்து நேரடியாக கிடைக்கும் chlorophyll என்கிற பச்சையத்தை எண்ணற்ற அளவில் கொண்டிருக்கும். இவை நமது முழு உடல் ஆரோக்கியத்திற்கும் வலுவை தந்து, நோய்கள் உருவாகாமல் பார்த்து கொள்ளும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பச்சை நிற பழங்கள்

பச்சை நிற பழங்கள்

- பச்சை ஆப்பிள்

- பேரிக்காய்

- எலுமிச்சை

- கிவி பழம்

- சீத்தாப்பழம்

- கொய்யாப்பழம்

- நெல்லிக்காய்

- ஸ்டார் பழம்

பச்சை நிற காய்கறிகள்

பச்சை நிற காய்கறிகள்

- மாங்காய்

- முட்டைகோஸ்

- வெண்டைக்காய்

- முருங்கைக்காய்

- கொத்தமல்லி

- கருவேப்பில்லை

- மிளகாய்

- வெள்ளரிக்காய்

பச்சை இரகசியம் #1

பச்சை இரகசியம் #1

பச்சை நிற காய்கனிகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. குறிப்பாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், கேரட்டினோய்ட்ஸ், பிளவனோய்ட்ஸ் போன்றவை உள்ளன.

இவற்றை சாப்பிடுவதன் மூலமாக வயிற்று புற்றுநோய், மார்பக புற்றுநோய், தோல் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. எனவே, பச்சை நிற காய்கனிகளை எப்போதுமே தவிர்க்காதீர்கள்.

MOST READ: இந்த ஒரே ஒரு கருப்பு பொருளை மட்டும் வீட்டுல வச்சிருந்தா, சர்க்கரை நோயிக்கு முடிவு கட்டிடலாம்..!

பச்சை இரகசியம் #2

பச்சை இரகசியம் #2

பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளை சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைத்து விடலாம். இதனால் இதய நோய்கள், இதய அடைப்புகள், போன்றவற்றை தடுக்கலாம். உடல் எடை கூடும் பிரச்சினையை கட்டுக்குள் வைக்க பச்சை நிற காய்கனிகள் உதவும்.

பச்சை இரகசியம் #3

பச்சை இரகசியம் #3

ஒரு சில மணி நேரங்களில் சோர்வடைந்து விடுவோருக்கு சிறந்த உணவாக இந்த பச்சை நிற காய்கனிகள் உள்ளன. பட்டாணி, ப்ரோக்கோலி, அவகேடோ, முளைக்கீரை போன்றவையில் வைட்டமின் பி9 அதிக அளவில் உள்ளதால் மூளையின் செயல்திறனை கூட்டும். அத்துடன் ஞாபக சக்தி மற்றும் புத்தி கூர்மைக்கும் இவை உதவும்.

பச்சை இரகசியம் #4

பச்சை இரகசியம் #4

இன்று பலரும் அவதிப்படும் பிரச்சினை செரிமான கோளாறு தான். செரிமான கோளாறு உங்களுக்கு ஏற்பட்டால் அதை எளிதில் சரி செய்ய பச்சை நிற காய்கனிகள் போதும்.

மேலும், செல்களின் வளர்ச்சியை தூண்டவும், சிதைவடைந்த செல்களை மறு உற்பத்தி செய்யவும் பச்சை நிற காய்க்கனிகள் சிறந்த தேர்வு.

பச்சை இரகசியம் #5

பச்சை இரகசியம் #5

பச்சை நிறத்தில் இருக்க கூடிய முளைக்கீரை, கிவி பழம், திராட்சை போன்றவற்றில் அதிக சத்துக்கள் உள்ளது. இவற்றை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக கண் பார்வை மிக கூர்மையாக இருக்கும்.

அத்துடன் கண்ணில் ஏற்பட்டுள்ள புரை, மங்கிய தன்மை, குறைவான இரத்த ஓட்டம் ஆகிய பிரச்சினைகளையும் இவை குணப்படுத்தும்.

MOST READ: சமையல் அறையில் கட்டாயம் செய்ய கூடாத 10 விஷயங்கள்..! மீறினால் எவ்வளவு ஆபத்து தெரியுமா!?

பச்சை இரகசியம் #6

பச்சை இரகசியம் #6

உடலில் செயல் திறன் குறைவாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தால் அதை அதிகரிக்க இந்த பச்சை நிற காய்கனிகள் பயன்படும்.

மேலும் அதிக அளவு வலுவை ஏற்படுத்தி ஆரோக்கியமான உடல் அமைப்பை இது தரும். சீரான உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் வாழ பச்சை நிற பழங்கள் தான் சிறந்த தேர்வு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Green Fruits And Vegetables

Health Benefits Of Green Fruits And Vegetables
Desktop Bottom Promotion