For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா? சிக்கரி அதிகமா இருக்கணுமா?

காபி பொடியிலோ அல்லது அதற்கு பதிலாகவோ சிக்கரி கலந்து குடிப்பதால் என்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

|

எல்லாருக்கும் காபி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கரி போட்ட காபி என்றால் கண்டிப்பாக பிடிக்காமல் போகாது. விஞ்ஞான ரீதியாக சிக்கோரியம் இன்டிபஸ் என்று அழைக்கப்படும் தாவரத்தின் வேர்கள், இலைகள் மற்றும் மொட்டுகள் சிக்கரி தயாரிக்க பயன்படுகிறது . இதன் இலைகளை நாம் கீரைகள் போலக் கூட பயன்படுத்தி கொள்ளலாம். சாலட் போன்ற வகைகளிலும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதை நாம் உணவில் சேர்த்து வந்தால் நிறைய உடல் நல நன்மைகளும் கிடைக்கக் கூடும்.

Chicory

சிக்கரி தாவரத்தில் பெரிதும் பயன்படும் விஷயம் அதன் வேர்ப் பகுதிகள் தான். டான்டெலியன் குடும்பத்தை போலவே இதன் வேர்களும் மரத்தை போன்று நார்களுடன் காணப்படும். இதன் வேர்கள் பொடியாக்கப்பட்டு காபி தயாரிக்க பயன்படுகிறது. இந்த பொடி மாத்திரை வடிவில் கூட கிடைக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ தாவரம்

மருத்துவ தாவரம்

சிக்கரி வேர்கள் ஆயிரம் வருடங்களாக மூலிகைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சீரண பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், பாக்டீரியா தொற்று, நோயெதிப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற நன்மைகளைத் தருகிறது. இந்த காபி பொடி நிறைய வகைகளில் உங்கள் உடலுக்கு நன்மை சேர்க்கும்.

MOST READ: உங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்? தெரிஞ்சிக்கங்க...

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

உலர்ந்த 100 கிராம் சிக்கரியில்

72 கலோரி ஆற்றல்

0.2 கிராம் கொழுப்பு

8.73 கிராம் சர்க்கரை

0.8 மில்லி கிராம் இரும்புச்சத்து

17.51 கிராம் கார்போஹைட்ரேட்

80 கிராம் தண்ணீர்

1.4 கிராம் புரோட்டீன்

1.5 கிராம் நார்ச்சத்து

41 மில்லி கிராம் கால்சியம்

22 மில்லி கிராம் மக்னீசியம்

61 மில்லி கிராம் பாஸ்பரஸ்

290 மில்லி கிராம் சோடியம்

50 மில்லி கிராம் பொட்டாசியம்

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இது நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்கள் அடைத்து ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் சிக்கரியில் உள்ள ஆன்டி த்ரோபோட்டிக் மற்றும் ஆன்டி அர்த்ரிதமிக் பொருட்கள் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது.

சீரண சக்தியை மேம்படுத்துகிறது

சீரண சக்தியை மேம்படுத்துகிறது

இதில் நார்ச்சத்துகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த சிக்கரி வேரில் உள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள இன்சுலின் சீரண மின்மை, வாய்வுத் தொல்லை, வயிறு வீக்கம், எதுக்களித்தல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை களைகிறது.

உடல் எடை இழப்பு

உடல் எடை இழப்பு

இதிலுள்ள ஒலிகோஃப்ரக்டோஸ் உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. இதிலுள்ள இன்சுலின் கெரலினை கட்டிப்பாட்டில் வைக்கிறது. இதனால் அடிக்கடி பசிப்பது கிடையாது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் உடல் எடையும் வெகுவாக குறைந்து விடும்.

ஆர்த்ரிட்ஸ்

ஆர்த்ரிட்ஸ்

சிக்கரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் ஆர்த்ரிட்ஸ் நோய் வருவதை தடுக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்ரிட்ஸ் நோயால் வரும் வலியை குறைத்து அதை கட்டுப்பாட்டில் வைக்கிறது. மூட்டு வலி, தசை வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் புண், அழற்சி இவற்றை போக்குகிறது.

MOST READ: உடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்?

நோயெதிப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிப்பு சக்தியை அதிகரித்தல்

ஆன்டி பாக்டீரியல் மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு தன்மை நமது உடலின் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் பாலிபினாலிக் பொருட்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. எனவே காபிக்கு பதிலாக இதை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

அனெக்ஸிட்டி சிகிச்சை

அனெக்ஸிட்டி சிகிச்சை

இதன் மயக்க மருந்து தன்மை அனிஸிட்டிக்கு பயன்படுகிறது. இது மூளைக்கு ரிலாக்ஸ் கொடுத்து அனிஸிட்டி தன்மையை போக்குகிறது. அதே நேரத்தில் இது நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மன அழுத்தம், அனிஸிட்டி அளவு, ஹார்மோன் சமநிலையின்மை, இதய நோய்கள், நினைவாற்றல் செயலிழப்பு, இன்ஸோமினியா, சீக்கிரம் வயதாகுதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள்

இதன் டையூரிடிக் தன்மை சிறுநீர் வரப்பை அதிகரிக்கிறது. சிறுநீரக செயல்பாட்டை சரி செய்கிறது. சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மலச்சிக்கல், புற்றுநோயை தடுத்தல், டயாபெட்டீஸ் சிகிச்சை, கல்லீரல் ஆரோக்கியம், எக்ஸிமா, கேண்டிடா போன்றவை வராமல் தடுக்கிறது.

சிக்கரி ரெசிபிகள்

சிக்கரி ரெசிபிகள்

டான்டெலியன் மற்றும் சிக்கரி டீ

தேவையான பொருட்கள்

1/2 கப் தண்ணீர்

2 துண்டுகள் இஞ்சி

1 டீ ஸ்பூன் டான்டெலியன் வேர், வறுத்து பொடியாக்கியது

1 டீ ஸ்பூன் சிக்கரி வேர், வறுத்து பொடியாக்கியது

2 கருப்பு மிளகு

2 ஏலக்காய்

1 கிராம்பு

1/2 கப் பால்

1அங்குல பட்டை, தூளாக்கியது

1 டேபிள் ஸ்பூன் தேன்

பயன்படுத்தும் முறை

தண்ணீர், இஞ்சி, டான்டெலியன் வேர் , சிக்கரி வேர், மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள்

மூடியை மூடி நன்றாக கொதிக்க விடுங்கள்

இப்பொழுது அடுப்பின் தீயை குறைத்து 5 நிமிடங்கள் காய்ச்சவும்

அதனுடன் பால் மற்றும் தேன் கலந்து கொஞ்சம் கொதிக்க விடுங்கள்

இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு கப்பிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். சுவையான ஆரோக்கியமான டீ ரெடி.

வெண்ணிலா ரெசிபி

வெண்ணிலா ரெசிபி

தேவையான பொருட்கள்

11/2 உறைய வைத்த வாழைப்பழம்

1 கப் க்ளூட்டன் இல்லாத ஓட்ஸ்

2 டீ ஸ்பூன் சிக்கரி பொடியாக்கப்பட்டது

1 டீ ஸ்பூன் பட்டை

1/3 கப் பாதாம்

1/2 டீ ஸ்பூன் வெண்ணிலா பவுடர்

நுனிக்கிய பாதாம் மற்றும் பட்டை.

பயன்படுத்தும் முறை

மேற்கொண்ட எல்லா பொருட் களையும் ஒரு மிக்ஸி சாரில் போட்டு கொள்ளுங்கள். அதை நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவும்.

இதை குளிர வைத்து சாப்பிடவும்.

MOST READ: எபோலா வைரஸ் தாக்கி 1700 பேர் மரணம்... உலக சுகாதார நிறுவனம் எமர்ஜென்சி அறிவிப்பு...

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

கருவுற்ற பெண்கள் இதை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது மாதவிடாயை ஏற்படுத்தி கருச்சிதைவு ஏற்பட வழி செய்து விடும்.

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மேரிகோல்டு, டைஸி பூக்களால் அழற்சி உடையவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சிக்கியும் அழற்சியை ஏற்படுத்த நிறையவே வாய்ப்புள்ளது.

பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் சிக்கரியை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Fascinating Health Benefits Of Chicory You Must Know

We have all come across the word 'chicory'. Yes, it is the same as that of the 'chicory' in chicory coffee. Scientifically termed as Cichorium intybus, the chicory plant is used for its roots, leaves and buds.
Story first published: Friday, July 19, 2019, 12:38 [IST]
Desktop Bottom Promotion