For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பு தினை சாப்பிட்டிருக்கீங்களா? இத படிங்க... தினமும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க

கருப்பு கீன்வா சாப்பிடுவதால் ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் மிக விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.

|

தானியங்களில் நன்மைகளை அளிக்க கூடிய பலவகைகள் இருந்தாலும் கருப்பு கீன்வாவின் பயன்கள் அற்புதம். ஏனெனில் இதில் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய நிறைய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உள்ளன.

Health Benefits Of Black Quinoa

இந்த கீன்வாவில் புரோட்டீன், இரும்புச் சத்து, விட்டமின்கள் பி, ஆந்தோசயனின், காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு கீன்வா என்றால் என்ன?

கருப்பு கீன்வா என்றால் என்ன?

கருப்பு கீன்வா மற்றும் வொயிட் கீன்வா என்ற இரண்டு வகைகள் உள்ளன. இதில் கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு மொறுமொறுப்பான நன்மையையும் தருகிறது. இது லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். க்ளூட்டன் இல்லாத உணவு என்பதால் இதை உங்கள் உணவில் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.

MOST READ: மலம் கழிக்கிற இடத்துல எரிச்சலா இருக்கா? மலம் கழிக்கும்முன் இத செய்ங்க... சரியாகிடும்...

பயன்கள்

பயன்கள்

இந்த கீன்வாவில் புரோட்டீன், இரும்புச் சத்து, விட்டமின்கள் பி, ஆந்தோசயனின், காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன.

அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்

அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்

இதில் அதிகளவு புரோட்டீன் மற்றும் 10 அமினோ அமிலங்களின் கூட்டம் உள்ளது. வெஜிட்டேரியன் பிரியர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்தும் சேர்ந்து இருப்பது கூடுதல் பயன்.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து

இரும்புச் சத்து தான் நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்கிறது. இரும்புச் சத்து பற்றாக்குறை இருந்தால் சோர்வு, பலவீனம் மற்றும் அனிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு கப் கருப்பு கீன்வாவில் 15% இரும்புச் சத்து அடங்கியுள்ளது.

MOST READ: மக்காசோளம் தவிர இந்த 5 பொருள்ல கூட பாப்கார்ன் செய்யலாம்... அதவிட சூப்பரா இருக்கும்...

பி விட்டமின்கள்

பி விட்டமின்கள்

கருப்பு கீன்வாவில் போலேட், விட்டமின் பி போன்றவை ஆரோக்கியமான கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது. அதே மாதிரி கண்களின் ஆரோக்கியத்திற்கு, கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் இதில் காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்றவை அழற்சியை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

கருப்பு கீன்வாவில் ஆந்தோசயனின் அதிகளவில் காணப்படுகிறது. இந்த ஆந்தோசயனின் சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்தும், புற்றுநோய் செல்களையும் தடுக்கிறது நாள்பட்ட பிரச்சினைகள், இதய நோய்களை தடுக்கிறது.

க்ளூட்டன் இல்லாத உணவு

க்ளூட்டன் இல்லாத உணவு

குறைந்த கொழுப்பு கொண்ட க்ளூட்டன் இல்லாத உணவு என்பதால் கருப்பு கீன்வாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வருவது நல்லது.

சீரண பிரச்சனைகள்

சீரண பிரச்சனைகள்

சில நபர்கள் கீன்வாவை எடுத்துக் கொள்ளும் போது சீரண பிரச்சனைகளை சந்திக்கின்றனர். காரணம் இதிலுள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகரிக்கிறது.

MOST READ: சனிபகவானின் கோரப்பார்வை விழப்போகிற அந்த ரெண்டு ராசிகள் எது தெரியுமா?

கிருமித் தொற்று

கிருமித் தொற்று

கீன்வாவை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக கழுவி விட்டு சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதன் மூலம் கிருமித் தொற்று வர நிறையவே வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Black Quinoa

Black quinoa is a type of quinoa that is a cross of white quinoa and lamb’s quarter, a type of grain. The resulting crossbreed quinoa seed has a darker color than white quinoa and a crunchier texture. It also has a slightly sweeter taste and is typically harder to find than the more popular red and white quinoa varieties
Story first published: Saturday, May 18, 2019, 15:43 [IST]
Desktop Bottom Promotion