For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய பிரச்சினைகளை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் உணவு வகைகள் என்னென்ன..?

|

நமது உடலுக்கு தேவையான ஆற்றலை சரியான அளவில் தர கூடிய முக்கிய பங்கு ரத்தத்திற்கு உள்ளது. இதன் அளவோ, செயல்பாடோ குறைந்தால் பலவித பாதிப்புகள் நமக்கு வர கூடும். குறிப்பாக ரத்தம் உறைதல், ரத்தம் கட்டி கொள்ளுதல், ரத்த ஓட்டம் குறைதல்... இப்படிப்பட்ட பிரச்சினைகள் நமக்கு கொஞ்சம் அபாயத்தை தர கூடியவை.

இதய பிரச்சினைகளை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் உணவு வகைகள் என்னென்ன..?

இதில் பலருக்கும் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் பிரச்சினை இருக்கும். இதனை சரி செய்ய எதை எதையோ செய்ய தேவையில்லை. மிக எளிமையான வழியில் நமது வீட்டில் இருக்க கூடிய உணவு பொருட்களை வைத்தே இந்த பிரச்சினைக்கு தீர்வை நம்மால் தர இயலும். உங்களின் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து சீரான ரத்த ஓட்டத்தை தர கூடிய உணவுகள் என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரீன் டீ

கிரீன் டீ

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் நிறைந்த கிரீன் டீ நமது உடலுக்கு பலவித நன்மைகளை தரவல்லது. கிரீன் டீயை குடிப்பதால் ரத்த ஓட்டல் அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் இதயத்திற்கு எந்தவித பாதிப்புகளும் உண்டாகாமல் பார்த்து கொள்ளும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க பலவித வழிகள் இருந்தாலும் இந்த டார்க் சாக்லேட் உங்களுக்கு எளிதாக உதவும். இவை நைட்ரிக் ஆக்சைட்டை உற்பத்தி செய்து ரத்த நாளங்களை தளர்த்தி சீரான ரத்த ஓட்டத்தை தரும். முக்கிய குறிப்பு என்னெவென்றால் நீங்கள் சாப்பிட கூடிய சாக்லேட்டில் 70 சதவீதம் கோகோ கலந்திருக்க வேண்டும்.

மாதுளை

மாதுளை

உங்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்த கூடிய ஆற்றல் இந்த மாதுளைக்கு உள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் அதிகம் உள்ளதால் தசைகளின் திசுக்களை வேகப்படுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறதாம். தினமும் மாதுளையை உணவில் சேர்த்து கொண்டாலே ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

வெங்காயம்

வெங்காயம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய ஆற்றல் இந்த வெங்காயத்திற்கு உள்ளது. ரத்த நாளங்களை சீரான முறையில் வேலை செய்ய வெங்காயம் உதவுகிறது. அத்துடன் இதயத்தில் உள் உறுப்புகளில் ஏற்பட கூடிய வீக்கங்களை குணப்படுத்தி ரத்த ஓட்டத்தை சரியான அளவில் தருகிறது.

MOST READ: உங்களுக்கு தொப்பை இருக்கா..? அப்போ கூடவே இப்படிப்பட்ட ஆபத்தான நோய்களும் வரும்..!

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இந்த மசாலா பொருள் உங்களின் ரத்த ஓட்டத்திற்கும் பயன்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றை டீ போன்று தயாரித்து குடித்தால் நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும். மேலும், இதயத்தின் செயல்திறனை சீராக வைக்கவும் இந்த இலவங்கம் உதவுகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டினால் உடலில் நன்றாக ரத்தம் சுரக்கும். அதே போன்று, ரத்த ஓட்டத்தையும் இது சீராக வைக்கும். இதிலுள்ள நைட்ரைட், நைட்ரிக் ஆக்சிடாக மாறி ரத்த நாளங்களின் செயல்திறனை அதிகரித்து விடும்.

பூண்டு

பூண்டு

சல்பர் அதிகம் நிறைந்த இந்த பூண்டின் பயன்கள் அதிகம். இவற்றில் உள்ள அல்லிசின் என்கிற முக்கிய மூலப்பொருள் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. உடலில் ரத்தம் கட்டி கொண்டால் அதனையும் இது சரி செய்ய கூடும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வைட்டமின் இ அதிகம் நிறைந்த இந்த வால்நட்ஸ் நமக்கு பலவித நன்மைகளை தரவல்லது. இவை உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. மேலும், வீக்கங்களையும் இது குறைக்க உதவுகிறதாம்.

MOST READ: தினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்..

இஞ்சி

இஞ்சி

பலவித மருத்துவ பயன்களை கொண்ட இஞ்சியின் பெருமையை பற்றி நம் எல்லோரும் நன்கு அறிவோம். இஞ்சி பெரும்பாலும் எல்லாவித பிரச்சினைகளுக்கும் தீர்வை தர கூடிய ஆற்றல் பெற்றது. அந்த வகையில் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க இஞ்சி உங்களுக்கு உதவுகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods to Increase Blood Flow and Circulation

Here we listed some foods to increase blood flow and circulation.
Story first published: Saturday, January 12, 2019, 14:51 [IST]
Desktop Bottom Promotion