For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிட்னியில எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராம இருக்கணும்னா இந்த 6 பொருள சாப்பிடாதீங்க...

சிறுநீரகப் பிரச்சினை இருக்கின்றவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு தான் இது.

|

உடல் உறுப்புகளில் முக்கியமான ஒரு உறுப்பு சிறுநீரகம். உடலின் முக்கிய செயல்பாடுகளான இரத்த சுத்தீகரிப்பு, ஹார்மோன் உற்பத்தி, கனிம சமநிலை, மற்றும் உடலின் திரவ சமநிலையை கட்டுப்படுத்துவது போன்றவை இதன் பணியாகும். ஆரோக்கியமற்ற அல்லது சீரற்ற சிறுநீரகம் உடலில் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும்.

Kidney Disease

உடலில் அதிக நீர் தேக்கம், இரத்தத்தில் கழிவுகள் சேர்வது, சிறுநீரில் இரத்தம் மற்றும் புரதம் கலப்பது, ஒன்று அல்லது இரண்டு சிருநீரகதிற்கும் சிறு காயம் ஏற்படுவது, சிறுநீரக பகுதியில் வலி ஏற்படுவது, சிறுநீரக கற்கள் உருவாவது, ஹெபடிடிஸ் சி பாதிப்பு ஏற்படுவது போன்றவை சிறுநீரக பாதிப்பால் உண்டாகும் உடல் சார்ந்த பிரச்சனைகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரகக் கோளாறு

சிறுநீரகக் கோளாறு

வாழ்வின் எந்த நிலையிலும் மேலே கூறியவற்றில் ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் கடந்து வந்தால் அதனை அலட்சியம் செய்யாமல் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இதனை அலட்சியம் செய்வதால் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற அபாயகரமான பாதிப்புகள் உண்டாக நேரலாம்.

உடல் நலத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதில் உணவு மிக முக்கிய காரணியாக உள்ளது. சிறுநீரக பாதிப்பிற்கும் இந்த உண்மை பொருந்தும். சிறுநீரக பாதிப்பை எதிர்த்துப் போராடத் தேவையான உணவைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் அதே வேளையில் எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதும் மிக முக்கியமானது. எனவே, சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் சில குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

MOST READ: ஆணுறுப்பு விறைப்பு குறையறதுக்கு உண்மையான காரணம் என்ன? எதெல்லாம் கட்டுக்கதை?

தவிர்க்க வேண்டிய சில உணவுகள் :

தவிர்க்க வேண்டிய சில உணவுகள் :

1. அடர் நிறம் கொண்ட மென் பானங்கள்

2. கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்

3. முழு கோதுமை பிரட்

4. வாழைப்பழம்

5. ஆரஞ்சு பழம் மற்றும் அதன் சாறு

6. பதப்படுத்தப்பட்ட இறைச்சி

அடர் நிறம் கொண்ட மென் பானங்கள்

அடர் நிறம் கொண்ட மென் பானங்கள்

ஆரோக்கியமான மனிதர்களுக்கும் மென்பானம் ஆரோக்கியமற்றது. மற்றும் தீங்கு உண்டாக்கக் கூடியது. அதிக அமிலத்தன்மைக் கொண்ட இந்த மென் பானங்கள் , கலோரி மற்றும் சர்க்கரை அளவை அதிகமாகக் கொண்டவையாகும். மேலும், இந்த மென்பானங்கள் பாஸ்பரஸ் சேர்க்கைகள் அதிகம் கொண்டவையாக இருக்கும்.

உங்கள் உடலால் எளிதாகவும் விரைவாகவும் உறிஞ்சப்படும் ஒரு கனிமம் பாஸ்பரஸ். அதிகரித்த பாஸ்பரஸ் உறிஞ்சுதல் சிறுநீரகத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். மேலும், இதர உடல் பாதிப்புகளான தீவிர மலச்சிக்கல் , குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.

கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்

கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்

கேன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், பீன்ஸ், சூப் போன்றவை பதப்படுத்தப்படுவதற்காக அதிக அளவு சோடியம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. எந்த வடிவத்திலும் அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்வதால், சிறுநீரகத்திற்கு அதிக பாதிப்புகள் உள்ளது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், குறைந்த சோடியம் உணவுகள் அல்லது "உப்பு சேர்க்கப்படாதது " என்று குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை வாங்கி பயன்படுத்தலாம்.

MOST READ: ஆஸ்துமாவுக்கு மாத்திரை சாப்பிடறீங்களா? அதுக்கு பதிலா இத சாப்பிடுங்க... சீக்கிரம் சரியாகிடும்

முழு கோதுமை பிரட்

முழு கோதுமை பிரட்

அடிப்படையில் முழு கோதுமை பிரட் என்பது ஒரு ஆரோக்கியமான உணவு. இருப்பினும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், இதனை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. காரணம் இந்த பிரெட்டில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் காணப்படுகிறது. சிறுநீரக பாதிப்பு உள்ள நோயாளிகள் முழு கோதுமை ப்ரெட் பயன்படுத்துவதை விட வெள்ளை பிரட் பயன்படுத்தலாம். இவற்றில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் குறைந்த அளவு உள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப் பழத்தில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. ஒரு மிதமான அளவு வாழைப்பழத்தில் 420 மிகி அளவு பொட்டாசியம் உள்ளது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுபவர்கள், வாழைப்பழம் தினமும் சாப்பிடுவதால் சிறுநீரக பாதிப்பு தீவிர நிலையை எட்டும்.

ஆரஞ்சு பழம் மற்றும் அதன் சாறு

ஆரஞ்சு பழம் மற்றும் அதன் சாறு

ஆரஞ்சு பழம் வைட்டமின் சி சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இது மட்டுமில்லாமல், ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தில் 330 மிகி அளவு பொட்டாசியம் உள்ளது, அதே நேரம், ஒரு கிளாஸ் ஆரஞ்சு பழச்சாற்றில் 470மிகி அளவ பொட்டாசியம் உள்ளது.

ஆகவே, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், ஆரஞ்சு பழம் மற்றும் ஆரஞ்சு பழச்சாற்றின் அதிக பொட்டாசியம் அளவு காரணமாக இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அல்லது இவற்றின் உட்கொள்ளல் அளவை மிதப்படுத்திக் கொள்ளலாம். ஆரஞ்சு பழம் மற்றும் அதன் பழச்சாற்றுக்கு மாற்றாக, திராட்சை, கிரான்பெர்ரி, ஆப்பிள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில், அதன் சுவை மற்றும் வாசனையை சமநிலை படுத்த சில பதனச்சரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக உப்பு இந்த இறைச்சியில் அதிகம் சேர்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் உடலின் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது சிறுநீரகத்திற்கு மேலும் தீங்கை உண்டாக்குகிறது.

மேலும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உணவில் புரத அளவை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிக அளவு புரதம் உள்ளது. அதனால் முடிந்த அளவு பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது.

MOST READ: உங்க வீட்டு பெண்ணுக்கும் PCOD பிரச்சினை இருக்கா? உங்க கேள்விக்கு நிபுணர்கள் பதில் இதோ...

முடிவுரை

முடிவுரை

சிறுநீரக பாதிப்பு தொடர்பான சிறு அறிகுறியையும் அலட்சியமாக விடுவது நல்லதல்ல. இது மெல்லக் கொல்லும் விஷத்திற்கு சமமானது. ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுப் பழக்கம், சிறுநீரக பாதிப்பில் உங்கள் போராட்டத்தில் ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால் மேலே கூறிய உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது.

மேலும் கூடுதல் தகவலாக, உங்கள் உணவு அட்டவணையில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் அளவையும் கண்காணிப்பில் வைப்பது அவசியம். இந்த பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது அல்லது மிதமான அளவில் எடுத்துக் கொள்வது உங்கள் சிறுநீரக பாதிப்பைக் அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Avoid If You Have Kidney Disease

If you have chronic kidney disease (CKD), it’s important to watch what you eat and drink. That’s because your kidneys can’t remove waste products from your body like they should. A kidney-friendly diet can help you stay healthier longer.
Desktop Bottom Promotion