For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீன் சாப்பிட ரொம்ப பிடிக்குமா? இந்த பொருளோடு மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..!

சில ஆரோக்கிய உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று முற்காலத்தில் கூறப்பட்டதால் இன்றுவரை நாம் அதனை சாப்பிடாமல் இருக்கிறோம்.

|

இயற்கை நமக்கு ஏராளமான ஆரோக்கிய உணவுகளை அளித்திருக்கிறது. அதனை முறையாக சாப்பிடும்போதுதான் நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆரோக்கிய உணவுகளை படைத்த இயற்கைதான் அதனை சாப்பிடுவதற்கான சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி சில ஆரோக்கிய உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.

Fish and Milk: Toxic Combination or myth?

இதில் சில உண்மைகள் இருந்தாலும் பழங்காலம் முதலே இதில் சில மூடநம்பிக்கைகளும் உள்ளது. அதாவது சில ஆரோக்கிய உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று முற்காலத்தில் கூறப்பட்டதால் இன்றுவரை நாம் அதனை சாப்பிடாமல் இருக்கிறோம். இந்த நம்பிகையில் முக்கியமான ஒன்றுதான் பாலையும், மீனையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்பது. இந்த பதிவில் பாலையும், மீனையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா? கூடாத? என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலும், மீனும்

பாலும், மீனும்

பாலும், மீனும் ஆரோக்கியமான உணவுகள் என்பதில் உங்களுக்கு துளியும் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் இந்த இரண்டுமே நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று நம் அம்மா சொல்வதை அடிக்கடி கேட்டிருப்போம். அம்மாவுக்கு அவரின் அம்மா சொல்லியிருப்பார். ஆனால் அது உண்மையா என்பதை நமது அம்மாவும் யோசித்திருக்க மாட்டார், நாமும் யோசிக்க மாட்டோம். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

அறிவியல் உண்மை

அறிவியல் உண்மை

அறிவியல்ரீதியாக பார்க்கும் போது இந்த இரண்டு பொருட்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடாமல் இருக்க வேண்டுமெனில் இதில் ஏதாவது ஒரு பொருளால் அலர்ஜி இருக்க வேண்டும். அதனை தவிர்த்து இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேறு எந்த காரணமும் இல்லை. இவை இரண்டும் ஒன்றாக சாப்பிடப்படும் போது அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

இந்த இரண்டு பொருளையும் தனித்தனியாக பார்த்தால் இரண்டுமே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இதனால்தான் பல கலாச்சாரங்களில் உடல்நிலை விரைவில் முன்னேற்றமடைய இந்த இரண்டு உணவையும் பரிந்துரைத்தார்கள்.

எப்போது சாப்பிடக்கூடாது?

எப்போது சாப்பிடக்கூடாது?

மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. அதனை மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

MOST READ: இந்த ரேகை கையில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாம் தெரியுமா?

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

ஆயுர்வதத்தின் படி பார்க்கும்போது இந்த இரண்டு உணவையும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்கள். அதன்படி பால், மீன் இரண்டுமே வித்தியாசமான உணவுமுறைகளை கொண்டது. அதாவது மீன் என்பது அசைவ உணவை சேர்ந்தது, அதேபோல பாலானது விலங்கிலிருந்து பெறப்படும் பொருளாக இருந்தாலும் அது சைவ உணவுவகையை சார்ந்தது.

விளைவுகள்

விளைவுகள்

ஆயுர்வேத கொள்கைகளின் படி இந்த இரண்டு வித்தியாசமான உணவுமுறைகளும் உங்கள் உடலில் வெவ்வேறான விளைவுகளை உண்டாக்கும். பால் குளிர்ச்சி தன்மையுடையது, அதேபோல மீன் வெப்பத்தன்மையுடையது. இது இரண்டும் ஒரேநேரத்தில் சாப்பிடப்படும் போது அது உங்கள் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும், இதனால் உங்கள் உடலில் இரசாயன மாற்றங்கள் ஏற்படலாம்.

யார் தவிர்க்க வேண்டும்?

யார் தவிர்க்க வேண்டும்?

ஆயுர்வேதத்தின் இந்த குளிர்ச்சி மற்றும் வெப்ப விளைவு சார்ந்த கருத்தானது பல ஊட்டச்சத்து நிபுணர்களால் ஆதரிக்கப்டுகிறது, இதனால் அவர்கள் இந்த உணவு இணையை எதிர்க்கிறார்கள். ஆனால் பல கலாச்சாரங்களில் இந்த உணவுகள் ஆதரிக்கப்படுகிறது, அவர்களின் கருத்துப்படி நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் மட்டும் இந்த உணவுகளை ஒரே நேரத்தில் தவிர்த்தால் போதும் என்று கூறுகிறார்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

இந்த உணவுகளின் விளைவுகளை பொறுத்த வரையில் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த இரண்டு பொருட்களும் புரோட்டின்களின் மிகசிறந்த ஆதாரமாக இருக்கிறது. ஆனால் இவற்றில் இருக்கும் அளவீடுகள் மிகவும் வித்தியாசமானவை. எனேவே. இவை இரண்டும் செரிமானம் அடைய வெவ்வேறு அளவிலான நொதிகள் தேவைப்படுகிறது. இதனால் ஏற்படும் இரசாயன சமநிலையின்மை உங்கள் செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்.

MOST READ: இந்த இடத்தில் மச்சம் இருக்கும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி காதலில் விழுவார்களாம் தெரியுமா?

முடிவு

முடிவு

பாலும், மீனும் ஆபத்தான உணவுகள் என்பதற்கான எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆனால் அவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க பல காரணங்கள் உள்ளது. ஆனால் பல கலாச்சாரங்களில் நாள்பட்ட நோய்களை குணப்படுத்த இந்த இரண்டு உணவையும் ஒன்றாக பயன்படுத்துகிறார்கள். அலர்ஜிகளும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்களை தவிர இதனை அனைவரும் சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fish and Milk: Toxic Combination or myth?

Is the combination of fish and milk good or bad? Is it superstition or is it true?
Desktop Bottom Promotion