Just In
- 5 hrs ago
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- 6 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- 10 hrs ago
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- 11 hrs ago
இன்றைய ராசிப்பலன் (24.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
Don't Miss
- Finance
செம சரிவில் தங்கம் விலை.. தங்கத்தை அள்ள இது சரியான நேரமா? இன்னும் குறையுமா?
- News
பெற்ற குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்கு விளையாடியதே பெருமை.. கிரிக்கெட் வீரர் நடராஜன்
- Movies
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- Sports
என்ன ஆட்டமா காட்டுறீங்க? வீரர்களுக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி.. கதறிய ஆஸி. வெளியான ரகசியம்!
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னென்ன கலர் கத்திரிக்காயில் என்னென்ன பவர் இருக்கு... எதை சாப்பிடலாம்? எது சாப்பிடக்கூடாது?
கத்திரைிக்காய் நம்மில் நிறைய பேருக்குப் பிடிக்காது. குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் கத்தரிக்காயை கண்டாலே காத தூரம் ஓடும். ஆனால் நம் வீட்டில் உ்ளள பெரியவர்கள் கத்தரிக்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஏனென்றால் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் உணர்வதில்லை. சரி. விஷயத்துக்கு வருவோம். கத்திரிக்காயில் அப்படி என்னதான் இருக்குனு தெரிஞ்சா தான் அடுத்து பிள்ளைங்க சாப்பிட ஆரம்பிக்கும்.

கத்தரிக்காய்
கத்தரிக்காய் உலகம் முழுவதிலுமே தண்ணீர் குறைவாக இருக்கின்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்றான விளைகிறது. கத்தரிக்காயின் பூர்வீகம் எது தெரியுமா? நம்முடைய இந்தியா தானாம். இதில் மிகக் குறைந்த கலோரியே இருக்கிறது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிக ஏற்ற காய்களில் ஒன்று கத்தரிக்காய். 100 கிராம் கத்தரிக்காயில் வெறும் 24 கலோரிகள் மட்டுமே உண்டு.

ஊட்டச்சத்துக்கள்
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பத்து சதவீதம் நார்ச்சத்து இருக்கிறது. கொழுப்பு புரதம், கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்துக்கு வைட்டமின்கள் அவசியம். கத்தரிக்காயில் பி காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின் பி1, பி2, பி5, பி6, போன்ற வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கிறது.
அதேபோன்று கத்தரிக்காயில் இரும்புச் சத்து, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ நன்மைகள்
கத்தரிக்காயில் உள்ள ஆர்த்தோசயனின் என்னும் பிளவனாய்டுகள் புற்றுநோய், வயது முதிர்ச்சி, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், உடல் எரிச்சல் போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றது. இவை நம் உடலில் செல்களுடைய எரிபொருளாகப் பயன்படுகிறது. மேலும் ஒவ்வொரு நிறக் கத்திரிக்காயும் என்ன மாதிரியான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

கத்தரிக்காய் நிறங்கள்
ஒவ்வொரு காயும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். பின்பு மரபணு மாற்றம் அதிகரித்த நிலையில் ஒரு காயின் நிறத்தைக் கூட மாற்ற முடிந்தது. ஆனால் கத்தரிக்காய் இயற்கையிலேயே பல நிறங்களைக் கொண்டது. கத்திரிக்காயின் நிறங்கள் என்பது பஞ்சபூத சேர்க்கையால் உருவாகிறது என்று சொல்வார்கள்.
MOST READ: செக்ஸில் பெண்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்? ஆண்களை இத படிக்காதீங்க...

நீலநிறக் கத்தரிக்காய்
கத்தரிக்காய் செடி பூத்துக் காய்க்கத் தொடங்கும்போது சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தையும் பூமியில் உள்ள இரும்புச் சத்தையும் கிரகித்துக் கொள்ளுமாம். அதனால் தான் கோயின் தோல் இருண்டு நீலமாகவும் உள்ளே வெள்ளையாகவும் இருக்கிறதாம்.
பொதுவாக நீல நிறக் கத்தரிக்காய்கள் கல்லீரல் நோய்கள், உடலில் ஏற்படும் ரத்தக் குறைபாடு, உடல் சோர்வு மற்றும் மந்தத் தன்மையைப் போக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

வெள்ளை கத்தரி
வெள்ளை கத்தரிக்காய் சூரியனில் உள்ள ஏழு வகை நிறங்களையும் கிரகித்துக் கொள்ளுமாம். ஆனாலும் இந்த வெள்ளை நிறக் காயில் பஞ்சபூதத்தில் நெருப்பின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த கலர் கத்தரி பித்தத்தைச் சரியாகத் தூண்டிவிடும். மலமிளக்கியாகச் செயல்படும். கல்லீரலின் செயல்பாடுகளுக்கு வெள்ளை நிறக் கத்தரிக்காய் மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகளுக்கு அதிகமாகக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அஜீரணக் கோளாறை உண்டாக்கும்.
MOST READ: நரைமுடியை கருகருவென மாற்றும் பீர்க்கங்காய்... எப்படி தேய்க்க வேண்டும்?

வெளிர் பச்சை கத்தரிக்காய்
வெளிர் பச்சை நிறக் கத்தரிக்காயும் வெள்ளை நிறக் காயைப் போலத் தான் பலன்கள் கொண்டது. கல்லீரல் வீக்கத்தை சரிசெய்யும். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது நம்முடைய உடலில் பஞ்ச பூதங்களின் எந்த ஆற்றல் குறைவாக இருக்கிறதோ அதைக் கண்டறிந்து அதற்கேற்ற நிற காய்கறிகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆயுள் நீடிக்கும்.