Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
தொடர்ந்து 21 நாள் எலும்பு சூப் குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? இத நீங்களே படிச்சு பாருங்க...
எலும்பு சூப் டயட் இருப்பதால் என்ன மாதிரியாான உடலியல் மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய விவரமான விஷயங்கள் கொண்ட தொகுப்பு தான் இது.
சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும் சிறந்த வழியில் எடை குறைப்பை மேற்கொள்ளவும் எலும்பு சாறு டயட் நல்ல பலன் தருகிறது. ஆனால் இந்த டயட்டை நீங்கள் தேர்வு செய்வதற்கு முன்னர், இந்த டயட் குறித்து நன்கு புரிந்துக் கொண்டு அதனால் உண்டாகும் பக்க விளைவுகள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.
உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து, வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான அறிகுறிகளில் நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது.

எலும்பு சாறு டயட் என்றால் என்ன?
எலும்பு சாறு டயட் என்பது ஒரு கடுமையான 21 நாள் டயட் ஆகும். இந்த டயட்டில் வாரத்தில் இரண்டு நாள் முழுவதும் எலும்பு சாறு மட்டுமே பருக வேண்டும். இப்படி தொடர்ந்து நான்கு வாரங்கள் பின்பற்ற வேண்டும். இதற்கிடையில் உணவுக் கட்டுப்பாடுகளும் இந்த டயட்டில் உண்டு. எலும்பு சாறில் உள்ள உயர் ஊட்டச்சத்துகளுடன் இணைத்து, இந்த உணவு கட்டுப்பாடும் உங்கள் இடுப்பு பகுதியில் நல்ல எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.
மேலும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து, வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான அறிகுறிகளில் நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது.

ஆட்டுக்கால் சூப்
எலும்பு சாறு என்பது விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் சூப் போன்ற ஒரு பானமாகும். குறிப்பாக, கோழி எலும்பு, பன்றி, மாட்டின் முழங்கால் எலும்பு போன்றவற்றைக் கொண்டு இந்த சூப் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில், சிறிதளவு உப்பு, எலும்புகள், தாளிப்பு போன்றவற்றை சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் இவை அசிடிட்டியின் ஆதாரமாக விளங்குகின்றன.

முழுமையான ஊட்டச்சத்து
கடந்த காலங்களில் தயாரிக்கப்படும் சாறு பெருமளவில் ஒரு அமிலத்தன்மை உள்ளவையாக மட்டுமே இருந்து வந்தன. இந்த எலும்பு சாறை சமைத்தவுடன், அதன் சாறு மற்றும் வாசனை முழுவதும் சூப்பில் இறங்கியவுடன், அந்த எலும்புத் துண்டுகளை வடிகட்டி தனியே பிரித்துக் கொள்ள வேண்டும். இதனால் ஊட்டச்சத்துகள் மட்டும் அந்த பானத்தில் முழுவதும் கிடைக்கப்படும். இந்த சாறு கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்களின் ஆதாரமாக மட்டும் விளங்காமல், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் போன்றவற்றின் ஆதாரமாகவும் விளங்குகின்றன.

எலும்புச் சாறு டயட் அட்டவணை
இந்த எலும்புச் சாறு அட்டவணையை தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்ற வேண்டும். அதில் 6 நாட்கள் மட்டுமே எலும்பு சாறு உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது.
முதல் நிலை - இந்த டயட்டை தொடங்கும்போது, ஒரு வாரத்தில் இரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்து, அன்று முழுவதும் எலும்பு சாறு மட்டுமே பருக வேண்டும். அடுத்தடுத்த இரண்டு நாட்களாக இல்லாமல் இடைவெளி கொடுத்து அந்த நாட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
இரண்டாம் நிலை - அந்த நாட்களில் ஒரு நாளில் 6 கிளாஸ் எலும்பு சாறு பருக வேண்டும். பன்றி, கோழி, வாத்து, மாடு, மீன் தலை அல்லது முயல் போன்றவற்றின் எலும்புகளில் இருந்து சாறு தயாரித்துப் பருகலாம்.
பூலியான் க்யுப், இறால் அல்லது போனிடோ போன்றவற்றால் தயாரிக்கப்படும் சூப் பருகுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
மூன்றாம் நிலை - சூப் பருகும் நாட்களில் வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.
நான்காம் நிலை - சூப் பருகும் நாட்களைத் தவிர இதர 5 நாட்களில், பேலியோ டயட்டில் பின்பற்றப்படும் பாரம்பரிய மூன்று வேளை உணவு திட்டம் பின்பற்றப் படவேண்டும். பேலியோ டயட் என்பது குறைந்த கார்போ, அதிக கொழுப்பு மற்றும் புரதம் கொண்ட உணவு அட்டவணை ஆகும்.
ஐந்தாம் நிலை - வார நாட்களில் தொடர்ந்து இல்லாத வெவ்வேறு இரு நாட்களில் சூப், மற்ற நாட்களில் பேலியோ டயட் என்ற இதே அட்டவணையை அடுத்த மூன்று வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

குறிப்பு:
உடல் கார்போஹைட்ரெட் சத்தை எரிக்காமல், கொழுப்பை எரிக்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம், எடை இழப்பு ஏற்படுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே எலும்பு சாறு டயட் பின்பற்றும் அதே நேரத்தில் பேலியோ டயட் பின்பற்றப்படுகிறது,

நன்மைகள்
. கொலஸ்ட்ரால் அளவு மேம்படுகிறது
. இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது
. வேகமான எடை குறைப்பு சாத்தியமாகிறது.
. நச்சுகள் விலகல் அதிகரிக்கிறது.
. இரத்த சர்க்கரை அளவு சீராகிறது.
. நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது.
. பசியுணர்வு குறைகிறது.
. சருமம் பளபளக்கிறது.
. கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது.
. வயது முதிர்வு குறைக்கப்படுகிறது.
. அறிவாற்றல் செயல்பாடு அதிகரிக்கிறது.
. அழற்சி குறைகிறது.
. மனநிலை மேம்படுகிறது
. சிறந்த தூக்கத்திற்கு உதவுகிறது

எவ்வளவு எடை குறையும்?
மூன்று வாரங்களில் சுமார் பத்து பவுண்ட் எடை குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எலும்பு சாறில் உயர்ந்த அளவு கொலஜென் மற்றும் இதர மூலப்பொருட்கள் இருப்பதால், உடல் வளர்ச்சி அதிகரித்து, சேதங்கள் சீர் செய்யப்பட்டு சரும ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
சுருக்கங்கள் குறைகிறது. மூட்டு வலி மற்றும் அழற்சி கூட இதன் முக்கிய கனிமங்கள் மற்றும் கூறுகளின் இருப்பு காரணமாக குணமடைகிறது. ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கிறது.

ராத்திரி உணவில்
ஊட்டச்சத்து அடர்த்தி அதிகம் உள்ள இந்த பானம், நோயெதிர்ப்பு அளவை மேம்படுத்துகிறது. கெட்டோசிஸ் மேலும் அணுகக்கூடிய ஆற்றல் சக்திகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. கார்போஹைட்ரெட் மற்றும் கலோரிகள் குறையும் ஆரம்பக் கட்ட அறிகுறிகளின்போது உங்கள் மனநிலையில் ஒரு ஊக்கம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.
நச்சுகளை அகற்றும் தன்மைக் காரணமாக குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்பு சாறில் உள்ள ஜெலட்டினில் க்ளைசின் இருப்பதால் ஆழ்ந்த தூக்கம் உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமகவே எலும்பு சாறை "இரவு அமுதம்" என்றும் கூறுவார்கள்.

பக்க விளைவுகள்
இந்த டயட் பின்பற்றுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உண்டு. அவை,
1. திடீர் எடைக் குறைப்பு
மிக விரைவாக அதிக எடை குறையும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சீரழிவு உண்டாகலாம்.
2. வேறு மருந்துகள் உட்கொள்ளும்போது இடையூறு ஏற்படலாம்:
மற்ற நோய்களுக்கான மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது, இவற்றால் சில இடையூறுகள் ஏற்படலாம்.
3. ஹைப்போ க்ளைகேமியா
இரத்த சர்க்கரை அளவு அபாயகரமான அளவிற்கு குறையலாம்.
4. குறைந்த ஊட்டச்சத்து உட்கொள்ளல்
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த டயட் பின்பற்றுவதைத் தவிர்க்கலாம். இந்த டயட் பின்பற்றும்போது, உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் போதிய அளவு கிடைப்பதில்லை.



Click it and Unblock the Notifications