For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் கொஞ்சூண்டு மூங்கில் தண்டு சாப்பிட்டா மாரடைப்பே வராதாம்... நிரூபிக்கப்பட்ட உண்மைங்க

|

மூங்கில் தண்டுகள் மூங்கில் தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இவைகள் மூங்கில் முளைகள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் இந்த மூங்கில் தண்டுகள் சமையலில் சுவையை ஊட்ட பெரிதும் பயன்படுகிறது. இதில் அதிகமான கலோரியோ கொழுப்போ இல்லாததால் மக்கள் இதை விரும்பி உண்ணுகின்றனர். இப்படி சமையலில் பயன்படும் இந்த மூங்கில் தண்டுகள் நமக்கு நிறைய நன்மைகளையும் அள்ளித் தருகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைப் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூங்கில் தண்டுகள் ஆரோக்கியமானதா?

மூங்கில் தண்டுகள் ஆரோக்கியமானதா?

மூங்கில் தண்டுகளில் புரோட்டீன், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள், குறைந்த கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் தயமின், நியசின், விட்டமின் ஏ, பி6 மற்றும் ஈ உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துகள் மற்றும் பைட்டோஸ்டோரால் போன்றவை கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால்அளவை குறைக்க பயன்படுகிறது. இந்த நார்ச்சத்துகள் இரத்த அழுத்தம், உடற்பருமன், புற்று நோய் போன்றவை வர விடாமல் தடுக்கிறது.

MOST READ: சாப்பிட்டதும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க இனிமேல் டீ குடிக்கவே மாட்டீங்க...

உடல் எடையை குறைத்தல்

உடல் எடையை குறைத்தல்

உங்கள் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க இது சிறந்தது என்கிறது ஆய்வறிக்கை. இதிலுள்ள நார்ச்சத்துகள் புரோபயோடிக் தன்மை கொண்டு இருப்பதால் மைக்ரோபயோட்டா மற்றும் குடல் மெட்டா பாலிசத்தை சீர்படுத்துகிறது. எனவே இது உங்கள் உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்றே கூறலாம்.

புற்றுநோய்

புற்றுநோய்

இந்த மூங்கில் தண்டுகளில் அமைந்துள்ள லிக்னனைன் இழைகள் ஆன்டி கேன்சர் தன்மையை கொண்டுள்ளது. இதிலுள்ள பினோலிக் பொருட்கள் புற்று நோய் தடுப்புக்கு உதவுகிறது.

குறிப்பாக குடல் புற்று நோயை தடுப்பதில் சிறந்தது. குடல் இயக்கம் நன்றாக செயல்பட உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இந்த தண்டுகளில் அதிகளவிலான பொட்டாசியம் இருப்பது இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும், இதயத் துடிப்பு சீராக இருக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் கொழுப்பை குறைப்பதால் ஹார்ட் அட்டாக் போன்ற இதய நோய்கள் வருவதில்லை.

இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மிகச் சிறந்த மருந்து என்று அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தினமும் மூங்கில் தண்டை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வருவது தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

MOST READ: கணவனை கட்டிவைத்து அடித்தே கொன்ற மனைவி - மகளும் தற்கொலை - சோகத்தின் உச்சம்

காயங்கள் ஆற்ற

காயங்கள் ஆற்ற

மூங்கில் தண்டுகள் காயங்கள், புண்களை ஆற்ற பயன்படுகிறது. மூங்கில் இலைகள் காயங்களை ஆற்ற மருத்துவ துறையில் பயன்படுகிறது.

மாதவிடாய் பிரச்சினைகள்

மாதவிடாய் பிரச்சினைகள்

தொடர்ந்து இந்த மூங்கில் தண்டுகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளும் சரியாகி விடும். நிறைய பழங்குடி மக்கள் இந்த தண்டுகளைக் கொண்டு தான் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், கருவுறுதலில் சிக்கல்கள், அதிக இரத்த போக்கு, பிரசவ வலி போன்றவற்றை சரி செய்கின்றனர்.

இப்படி ஏராளமான ஊட்டச்சத்துகள், சேச்சுரேட்டேடு கொழுப்பு மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் இதை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

கீரை மூங்கில் தண்டு ரெசிபி

கீரை மூங்கில் தண்டு ரெசிபி

தேவையான பொருட்கள்

1 கைப்பிடியளவு கீரைகள்

1/4 கப் சீவிய மூங்கில் தண்டுகள்

1/2 கப் பீனட் அல்லது வெஜிடபிள் ஆயில்

11/2 டீ ஸ்பூன் உப்பு

2 டீ ஸ்பூன் சர்க்கரை

பயன்படுத்தும் முறை

கீரையின் இலைகளை நன்றாக கழுவி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். இப்பொழுது மூங்கில் தண்டுகளை போட்டு 45 நிமிடங்கள் வதக்கவும்.

கீரையை போட்டு நன்றாக வதக்கவும்

இப்பொழுது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்குங்கள்.

இப்பொழுது இதை ஒரு சூடாக தட்டில் தட்டிக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்க கூடாது.

MOST READ: விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா... இன்னும் என்னலாம் பண்றார்? முழு விவரம் உள்ளே...

சுவையான கீரை மூங்கில் தண்டு ரெசிபி ரெடி.

சுவையான கீரை மூங்கில் தண்டு ரெசிபி ரெடி.

சால்மன் மற்றும் க்ரீன் கறி சாஸ்

தேவையான பொருட்கள்

131/2 அவுன்ஸ் தேங்காய் பால்

3 டீ ஸ்பூன் மீன் சாஸ்

3-4 டேபிள்ஸ்பூன் தை க்ரீன் கறி பேஸ்ட்

1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி

5அவுன்ஸ் மூங்கில் தண்டுகள்

3/4 கப் ஹான்மெஜி காளான்

10 தக்காளி (பாதியாக நறுக்கி கொள்ளவும்)

அரை எலும்பிச்சை பழ சாறு

12 அவுன்ஸ் சால்மன் மீன் (தோல் நீக்கியது)

உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவைக்கேற்ப

ஆலிவ் ஆயில் தேவைக்கேற்ப

பயன்படுத்தும் முறை

கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் தேங்காய் பால், க்ரீன் கறி பேஸ்ட், துருவிய இஞ்சி, மீன் சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதனுடன் மூங்கில் தண்டுகள், நறுக்கிய தக்காளி, லெமன், காளான் எல்லாம் சேர்த்து 25 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பிறகு மீன் சேர்த்து உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்கவும்

3 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வதக்குங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள்

சூடாக ஒரு தட்டில் வைத்து சாஸூடன் சேர்த்து பரிமாறுங்கள்.

இப்பொழுது மீனுடன் சாஸ் தொட்டு சாப்பிடுங்கள்

இந்த ஆரோக்கியமான உணவை நீங்கள் தினசரி கூட எடுத்து வரலாம். கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தைராய்டு பிரச்சினை இருந்தால் மூங்கில் தண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Science-Backed Reasons to Eat More Bamboo Shoots

amboo shoots are the edible shoots of several bamboo plant species. They are also called bamboo sprouts. Predominantly used in Asian countries, they add texture and bulk to dishes without piling on extra fat or calories. What’s fascinating about the shoots is the array of benefits they offer
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more