Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
பெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்!
இங்கு பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் டாப் 10 உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்களுக்கு மட்டும் தான் பாலுறவில் அதிக ஆவல் இருக்கும் என்பதில்லை. பெண்களுக்கும் இருக்கும். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் அதிகம் இருக்கும். ஆனால் அதை பெண்கள் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஒருவரது பாலுணர்ச்சியை அதிகரிப்பதற்கு உணவுகள், பானங்கள் அல்லது மருந்துகள் என்று ஏராளமானவைகள் உள்ளன.
தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், பலருக்கும் பாலுணர்ச்சி குறைவாக உள்ளது. அதோடு மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும் மக்களின் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எப்படி மோசமான உணவுப் பழக்கங்கள் ஒருவரது பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கிறதோ, அதேப் போல் சரியான உணவுப் பழக்கங்களின் மூலம் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்க முடியும்.

அதிலும் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகளை உட்கொண்டு வந்தால், அது இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் பயோ கெமிக்கல்களை வெளியிடச் செய்யும். இதனால் பாலியல் உறுப்புக்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, பாலுணர்ச்சி உடனடியாக தூண்டப்படும். இதன் விளைவாக படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியும். இப்போது பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டி, படுக்கையில் குதூகலத்தை அனுபவிக்கச் செய்யும் உணவுகள் எவையென்று காண்போம்.

கொக்கோ
கொக்கோ மிகவும் சுவையான உணவுப் பொருள். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. அதில் பாலுணர்ச்சியைத் தூண்டும் பண்புகளும் ஒன்றாகும். கொக்கோவில் உள்ள மக்னீசியம், பாஸ்பரஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு, அர்ஜினைன், மெத்தில்ஜாந்தைன் போன்றவை பாலுணர்ச்சியை மேம்படுத்தும். கொக்கோவில் உள்ள பீனைன் எத்திலமைன் ஒரு காதல் கெமிக்கலாகும். இந்த கெமிக்கல் உடலுறவின் போது மூளையில் டோபமைன் என்னும் கெமிக்கலை வெளியிடத் தூண்டும்.

வெந்தயம்
பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் மற்றொரு பொருள் தான் வெந்தயம். பழங்காலத்தில் ரோம், க்ரீஸ், எகிப்து போன்ற பகுதியில் பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பெண்களின் பாலுணர்ச்சியை அதிகரிப்பதற்கு சமையலில் சிறிது வெந்தயத்தை சேர்த்து வந்தாலே போதும். இல்லாவிட்டால் ஒரு வாரம் வெந்தய சப்ளிமெண்ட்டுகளை எடுத்து வர வேண்டும். மேலும் வெந்தய விதைகள் மார்பக திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, தாய்ப்பால் உற்பத்தியையும் மேம்படுத்தும்.

பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழம் மிகவும் தித்திப்புடன் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். பேரிச்சம் பழம் ஒருவரது காதல் வாழ்க்கை மேம்படுத்த உதவும். அரேபிய கலாச்சாரத்தில், பேரிச்சம் பழம் மற்றும் பட்டைத் தூளை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், பாலுணர்ச்சி அதிகரிக்குமாம். பேரிச்சம் பழம் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்கள் உடலின் உள்ளே வெப்பத்தை அதிகரிக்கும். அதிலும் குங்குமப்பூ பெண்களின் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் அற்புதமான ஒரு மூலிகை. ஜாதிக்காய் பாலுணர்ச்சியின் செயல்பாட்டை அதிகரிக்கும். கிராம்பு குறைவாக இருக்கும் பாலுணர்வை அதிகரித்து, உடலுறவில் திருப்தியை உணரச் செய்யும். ஆகவே இந்த பொருட்களைக் கொண்டு மசாலா டீ தயாரித்துக் குடியுங்கள்.

கடற்சிப்பி
கடற்சிப்பியில் ஜிங்க் அதிகம் உள்ளது. இது செக்ஸ் ஹார்மோன்களை சீராக்கும். இந்த உணவுப் பொருள் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் நல்லது. இதில் உள்ள ஜிங்க் சத்து, ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரித்து, உறவில் சிறப்பாக ஈடுபடச் செய்யும். முக்கியமாக கடற்சிப்பி, உடலில் டோபமைன் அளவை அதிகரித்து, பெண்களின் பாலியல் உணர்வை தூண்டும்.

ரெட் ஒயின்
பெண்கள் குறைவான அளவில் ரெட் ஒயினை குடித்தால், அது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். ஆனால் ரெட் ஒயினை அளவாக குடித்தால் தான், இதன் பலனைப் பெற முடியும். அதிகமாக குடித்தால், அப்படியே எதிர்மறை விளைவைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

தேன்
பழங்காலத்தில் மாலை நேரத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் தேன் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் தேன் பாலுணர்ச்சியை மேம்படுத்தும். தேனில் உள்ள போரான் என்னும் கனிமச்சத்து, செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்க உதவும். எனவே உங்கள் பாலுணர்ச்சியை அதிகரிக்க நினைத்தால், நீங்கள் குடிக்கும் அனைத்து பானங்களிலும் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் இரவில் தூங்கும் முன் பாலில் தேன் கலந்து குடித்தால், அந்த இரவு சிறப்பான குதூகலமான இரவாக இருக்கும்.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்கள் பெண்களின் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளுள் ஒன்றாகும். இவற்றில் உள்ள வளமான அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான், உறவின் போது நீண்ட நேரம் குதூகலமாக இருக்கச் செய்கிறது. அதிலும் ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் இந்த பழங்கள் உடலில் டோபமைன் அளவை அதிகரித்து, நல்ல மனநிலையை உணரச் செய்யும் ஹார்மோன்களின் உருவாக்கத்தைத் தூண்டும்.

தர்பூசணி
தர்பூசணியை தினமும் சாப்பிட்டு வந்தால், அது சிறப்பான இரத்த ஓட்டத்திற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் அர்ஜினைனை வெளியிடச் செய்ய சிக்னல் அனுப்பி, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். முக்கியமாக இந்த பழம் அந்தரங்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலியல் உறவில் சிறப்பாக செயல்படச் செய்யும்.

கார உணவுகள்
பச்சை மிளகாய் சேர்த்த உணவுகள், ஒருவரது பாலுணர்ச்சியை அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஏனெனில் பச்சை மிளகாய் நரம்புகளை விரிவடையச் செய்யும் மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள் தான் காரணம்.



Click it and Unblock the Notifications











