Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
முருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுகிறதாம் தெரியுமா?
நமது மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு எண்ணம் முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது. இது உண்மைதான் ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை என்பதுதான் உண்மை.
தென்னிந்தியர்கள் உணவில் குறிப்பாக தமிழர்களின் உணவில் மிக முக்கியமான காய்கறி என்றால் அது முருங்கைக்காய் தான். பிடிக்கிறதோ இல்லையோ பெரும்பாலும் முருங்கைக்காயை யாரும் தவிர்ப்பதில்லை, அதற்கு முக்கிய காரணம் அதில் ' அந்த ' மாதிரி சத்துக்கள் அதிகம் இருக்கிறது என்னும் நம்பிக்கைகைதான். இது ஓரளவிற்கு உண்மைதான். ஆனால் முருகைக்காயை விட தாம்பத்தியத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கும் காய்கறிகள் நிறைய உள்ளது.

நமது மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு எண்ணம் முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது. இது உண்மைதான் ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை என்பதுதான் உண்மை. இந்த பதிவில் முருங்கைக்காயால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.

வீக்கத்தை குறைக்கும்
இதில் உள்ள பீட்டோ கரனைடு, வைட்டமின் சி மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்றவை வீக்கத்தை கட்டுப்படுத்தும் பண்பு கொண்டவையாகும். குளோரோஜெனிக் அமிலம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கங்களை சமநிலை செய்து வீக்கங்களை குறைக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்
முருங்கைக்காயில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. முருங்கைக்காய் சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் மூட்டுகளில் ஏற்படும் முறிவுகளையும் விரைவில் குணமாக்குகிறது.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
முருங்கைக்காயில் உள்ள பினோலிக் மூலக்கூறுகளான குவாட்டசின் மற்றும் காம்பெஃபெரால் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடியது. நியாமிஸின் என்னும் இதில் உள்ள ஒரு பொருள் உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளருவதை தடுக்கிறது. குறிப்பாக முருங்கைக்காய் சாப்பிடுவது தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படமால் உங்களை பாதுகாக்கிறது.

மூளை ஆரோக்கியம்
முருங்கையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி உங்கள் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க உதவுகிறது. உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமான செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்ற அத்தியாவசிய பொருட்களை முருங்கைக்காய் வழங்குகிறது. இது உங்கள் நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

கல்லீரலை பாதுகாக்குகிறது
நமது உடலின் மிகமுக்கியமான ஒரு உறுப்பு என்றால் அது கல்லீரல்தான். ஏனெனில் இதுதான் நம் வளர்ச்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதோடு இரத்த சுத்திகரிப்பையும் செய்கிறது. மேலும் இது பிப்ரோசிஸ் பாதிப்பை குறைப்பதுடன் கல்லீரலில் புரோட்டினின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இத்தனை நன்மைகள் இருந்தாலும் முருங்கைக்காயில் பல பக்கவிளைவுகளும் உள்ளது.

அதிக நார்ச்சத்து ஆபத்தானது
முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அது அதிகளவில் உடலில் சேர்வது ஆபத்தானதுதான். அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைகள், வாயுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல
அதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது. இதனால் ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

அலர்ஜிகள்
முருங்கைக்காய் என்னதான் ஆரோக்கியமான காயாக இருந்தாலும் அது சிலருக்கு ஏற்றதாக இருக்காது. ஏனெனில் இதில்உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு முருங்கைக்காயால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகஅதிகம்.

ஹைப்போடென்ஷன்
ஹைப்போடென்ஷன் என்பது இரத்த அழுத்தத்தை மிக அதிகளவில் உயர்த்தும் ஒரு குறைபாடு ஆகும். இதனால் உலகம் முழுவதும் பலரும் பாதிக்கப்ட்டுள்ளனர். ஹைப்போடென்ஷன் இதய ஆரோக்கியத்தை பாதித்து மாரடைப்பு வரை கூட ஏற்படுத்தும். முருங்கைக்காய் ஹைப்போடென்ஷன் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். ஆனால் இதில் உள்ள பாதிப்பு என்னவென்றால் மிக அதிக அளவில் குறைக்கும். அதனால் மயக்கம், தலைசுற்றல், குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்

கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும். மேலும் கருவில் உள்ள குழந்தையும் இதனால் பாதிக்கப்படலாம்.



Click it and Unblock the Notifications











