For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இத படிச்சதுக்குப் பிறகு யாராவது இனிமேல் அதிகமா வாழைப்பழம் சாப்பிடுவீங்களா?

  By Vijaya Kumar
  |

  முக்கனிகளில் ஒன்றான வாழை இந்தியாவில் மட்டுமல்ல இதன் சுவை , தன்மை மற்றும் இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதால் உலகம்முழுவதும் விரும்பபப்படும் பொருளாகவும் , அதிகம் நுகரப்படும் பழங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நமைகள் கிடைக்கப்பெற்றாலும் , அவற்றை உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  உடல்பருமன்

  உடல்பருமன்

  நீங்கள் சாப்பிடும் பிஸ்கட்டுகள் கூக்கிசை விட வாழைப்பழத்தில் கலோரிகள் குறைவுதான் என்றாலும் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம் உதாரணமாக ஆரஞ்சு ,துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி,ஒரு கப் திராட்சை, போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்

  ஒரு நல்ல குறைவான கலோரிகள் கொண்ட சிற்றுண்டியை நீங்கள் விரும்பினால் வாழைப்பழம் மட்டும் சிறந்த தேர்வாக இருக்காது , வாழைப்பழத்துடன் தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, கேண்டலூப், பீச்சஸ், வெள்ளரி, கீரை, சீமை சுரைக்காய், முட்டைக்கோஸ், முதலியன சேர்த்து சாப்பிடும் போது உங்களை நல்ல புத்துணர்ச்சியை வைத்திருக்கும் , இந்த உணவு குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது.

  பக்க விளைவுகள்

  பக்க விளைவுகள்

  உடல் எடை கூட்டுவது, குறைப்பது என இரண்டு வழிகளிலும் வாழைப்பழம் செயல்படுகிறது. இது பல சமயங்களில் எதிர் விளைவுகளையு தந்துவிடுகின்றன. அதாவது எடை குறைவாக இருப்பவர்கள் மேலும் எடை குறையலாம். பருமனாக இருப்பவர்கள் மேலும் பருமனாகலாம். இரண்டு வகையான பாதிப்புகளுமே உண்டு. அதுமட்டுமல்லாமல், ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்னைகள், சிறுநீரகப் பிரச்னைகள், நரம்புப் பிரச்னைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும். இதைத்தவிர நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மருந்துகளுக்கு வாழைப்பழத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியுமா?... அது தெரிந்தால் கொஞ்சம் அதிர்ந்துதான் போவீர்கள்.

  ராக்வெட் அலர்ஜி

  ராக்வெட் அலர்ஜி

  ராக்வெட் அலர்ஜி என்பது (pollen grains ) எனப்படும் மகரந்த தானியங்களை நூகரும் போது அது நோய்யதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்

  இந்த ஒவ்வாமை பாதிக்கப்பட்ட ஒரு நபர் வீங்கிய உதடுகள், எரிச்சல் தொண்டை,மற்றும் வீங்கிய நாக்கு போன்ற அறிகுறிகளோடு இருப்பர் .

  ஏற்கனேவே ராக்வெட் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன என்ன நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகிறதோ அதே அறிகுறிகள் ஒருவர் வாழைப்பழத்தை அதிகம் உட்கொண்டாலோ அல்லது கையாண்டலோ ஏற்படலாம்

  Aller Hypersensitivity gic Latex

  ஆய்வன் படி ஆஸ்துமா மற்றும் நோயெதிர்ப்பியல் குறைபாடு உள்ளவர்களுக்கும் , வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது. அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு , இருமல், தொண்டை எரிச்சல் , கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

  அனலிலைடிக் அதிர்ச்சி

  அனலிலைடிக் அதிர்ச்சி

  வாழைப்பழங்களால் ஒவ்வாமை உள்ள நபர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் அனலிலைடிக் அதிர்ச்சி ஏற்படும். தீவிர நோயெதிர்ப்பு குறைபாடால் இரத்த அழுத்தம் திடீர் வீழ்ச்சியடையும். அவர்களின் சுவாச பிரச்சனைகள் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை உயராமல் தடுத்து அனலிலைடிக் அதிர்ச்சியை உருவாக்குகிறது. அந்த சமயங்களில் வலிப்பு, நரம்பு விறைத்தல், உறுப்புகள் செயல்படாமை ஆகிய பிரச்னைகள் உண்டாகலாம்.

  எச்சரிக்கை

  எச்சரிக்கை

  வாழைப்பழங்களின் நுகர்வு தொடர்பாக சில எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன:

  1 . உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும்.ஏனனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும் இது ஆபத்தை விளைவிக்கும் .

  2 . வாழைப்பழங்கள் அரை வெப்பத்தில் தான் வைக்கப்படுகிறது இதனால் சீக்கிரம் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் , அதனால் தேவைக்கேற்ற நன்றாக பழுத்த வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடவும்

  3 .நீங்கள் ஒவ்ஒரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது

  மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம் , நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்தவும்

  4 . நீங்கள் வாழைப்பழத்தை அதிகம் உண்ணவிரும்பினால் உங்கள் மருத்துவரை அணுகி எவ்வளவு உண்ணவேண்டும் என்கிற ஆலோசனையும் அளவையும் பெற்றுக்கொள்ளுங்கள்

  முக்கிய தொடர்புகள்

  முக்கிய தொடர்புகள்

  தேசிய நுகர்வோர் லீக் மற்றும் யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் முடிவுகளில் வாழைப்பழம் மற்றும் நாம் பயன்படுத்தும் மருத்துகளுக்கான தொடர்புகள்

  1.பீட்டா-பிளாக்கர்ஸ்

  1.பீட்டா-பிளாக்கர்ஸ்

  நீங்கள் ஒரு இதய நோயாளியாக இருந்தால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு பீட்டா-பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்து வகைகளை பரிந்துரைத்திருக்கலாம். இந்த மருந்து இரத்தத்தில் பொட்டாசியம் அளவில் ஓர் எழுச்சியை ஏற்படுத்துகிறது . பொட்டாசியம் நிறைந்த நிலையில் இருப்பதால், இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவுகளில் அபாயகரமான வளர்ச்சியை ஏற்படுத்தலாம்.

  2. ஆக்ஸாசோலிடோனோ ஆன்டிபாக்டீரியல்ஸ்

  2. ஆக்ஸாசோலிடோனோ ஆன்டிபாக்டீரியல்ஸ்

  உங்களுக்கு oxazolidinone நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருந்தால், வாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்தவும் . வாழைப்பழத்தில் டைரமைன் உள்ளது இது இரத்தக் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

  ACE இன்ஹிபிட்டர்ஸ்

  ACE இன்ஹிபிட்டர்ஸ்

  ஆன்ஜியோடென்சின்-மாற்றியமைக்கும் என்சைம் இன்ஹிபிட்டர்ஸ் என்பது தான் இந்த ACE என்பதன் விளக்கமாகும். இரத்த அழுத்தத்தை குறைக்க அல்லது இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இந்த மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். பீட்டா-பிளாக்கர்ஸ் போன்றவை, இரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கின்றன. எனவே, நீங்கள் இந்த மருந்து உட்கொண்டு இருந்தாலோ ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் தொல்லைகள் ஏற்பட்டாலோ ,வாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்

  டையரிடிக்ஸ்

  டையரிடிக்ஸ்

  உடல் நீர் , சோடியம், மற்றும் குளோரைடுகளை அகற்ற உதவுவதற்காக மருத்துவர்கள் டையரிடிக்ஸ் நீரிழிவு மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இந்த மருந்துகள் இதய நோய் அல்லது கல்லீரல் பிரச்சனைகளால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. மேலும் இந்த மருந்துகள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன. டையரிடிக்ஸ் நீரிழிவு மருந்துகள் உடலில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கும், இந்த மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது வலைப்பழத்தை சாப்பிட்டால் அது ஆபத்தை விளைவிக்கும்

  வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதை ஏற்படும் பிரச்சனைகளை பார்த்தோம் ,

  வாழைப்பழத்தை அளவாக சப்பிட்டு வர எந்தவித கெடுதலும் ஏற்படாது

  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற மூத்தோர் மொழியைப் பின்பற்றி வாழ்தல் நலம் பயக்கும்

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Serious Side Effects Of Bananas While Eating More

  All over the world, this sweet, soft, and creamy fruit is famous for its delightful flavor and remarkable health benefits.
  Story first published: Friday, April 20, 2018, 23:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more