For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி சோயா சாப்பிடுவீங்களா? அப்போ நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்...

சில பேர்களுக்கு பால் அழற்சி யாக இருக்கும். காரணம் அதிலுள்ள விலங்குகளின் கொழுப்புகளால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. எனவே அவர்கள் இதற்கு பதிலாக சோயா புரோட்டீனை எடுத்துக் கொள்ளலாமா? அதன் நன்மை தீமைகளை பற்றி

|

சில பேர்களுக்கு பால் அழற்சி யாக இருக்கும். காரணம் அதிலுள்ள விலங்குகளின் கொழுப்புகளால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. எனவே அவர்கள் இதற்கு பதிலாக சோயா புரோட்டீனை எடுத்துக் கொள்ளலாமா? இது நல்லதா போன்ற சந்தேகங்கள் எல்லார் மனதிலும் நிலவி வருகிறது.

நாம் சாப்பிடும் இறைச்சிக்கு பதிலாக சோயா புரதங்களை எடுத்து கொள்ளலாம். இது மிகவும் நல்லது மற்றும் ஆரோக்கியமான தும் கூட. டோஃபு, சோயா பால், டெம்பீ போன்ற சோயா பொருட்களில் அதிகளவு புரதச்சத்து அடங்கியுள்ளது. இந்த சோயா புரோட்டீனை நீங்கள் புரோட்டீன் பவுடர் வடிவில் கூட எடுத்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான அளவு

சரியான அளவு

அதே நேரத்தில் இதை நீங்கள் சரியான அளவு எடுத்துக் கொள்வதும் முக்கியம். அதிகளவு சோயா புரோட்டீன் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து அவர் கூறும் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

MOST READ: காலையில எழும்போது இந்த அறிகுறிகள்லாம் இருந்தா உங்களுக்கு குடலிறக்கம் இருக்குனு அர்த்தம்...

பயன்கள் தசைகளின் கட்டமைப்பு

பயன்கள் தசைகளின் கட்டமைப்பு

நமது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை இது உற்பத்தி செய்கிறது. சோயா புரோட்டீனில் அமினோ அமிலங்களின் சங்கிலி தொடரான 3 அமினோ அமிலங்கள் :லுசின், ஐசோலினின் மற்றும் வால்ன் போன்றவை உள்ளன. இந்த பிசிஏஏ அமினோ தொடர் தசைகளின் கட்டமைப்புக்கும் வலிமைக்கும் உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் பால் புரோட்டீன் உடன் சோயா புரதத்தையும் சேர்த்து எடுத்து வந்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

அதிகளவில் புரதச்சத்தை எடுத்துக் கொள்ளும் போது எடை குறைப்பு நிகழ்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி பார்க்கையில் சோயா புரோட்டீன் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். சோயா புரோட்டீனுக்கும், விலங்குகளின் புரோட்டீனுக்கும் இடையே ஒரு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. இதில் 20 உடல் பருமன் உடைய ஆண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சோயா உணவுகளையும், விலங்கு உணவுகளையும் கொடுத்து ஆய்வு நடத்தினர். இதில் சோயா உணவுகளை உண்ட வர்களின் எடை கணிசமாக குறைந்து இருப்பது தெரிய வந்தது.

MOST READ: காலையில் குடிக்கும் காபியுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா?

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

சோயா புரோட்டீன் நமது இதயத்திற்கும் நண்பனாக செயல்படுகிறது. இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆராய்ச்சியில் விலங்குகளின் புரோட்டீனுக்கு பதிலாக 25 கிராம் சோயா புரோட்டீன் கொடுக்கப்பட்டது. அப்பொழுது கெட்ட கொழுப்புகள், ட்ரைகிளிசரைடு கொழுப்புகள் இரத்தத்தில் குறைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

புற்றுநோய் அரண்

புற்றுநோய் அரண்

சோயா உணவுகளில் ஐஸோஃப்ளவன்ஸ் என்ற பொருள் உள்ளது. இது பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் மாதிரி செயல்படுகிறது என்றும் இதனால் புற்றுநோய் வருகிறது என்றும் மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்க புற்றுநோய் மையம் நடத்திய ஆராய்ச்சி படி சோயா வில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாதிரியான ஐஸோஃப்ளவன்ஸ் உள்ளது உண்மை. ஆனால் அது நமக்கு ஆன்டி ஈஸ்ட்ரோஜன் பொருளாக செயல்படுகிறது.

எனவே பெண்கள் சோயா உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால் மார்பக புற்று நோய் வரும் அபாயம் குறைவு என்று இந்த ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே மாதிரி இதிலுள்ள நார்ச்சத்துகள் இதர புற்று நோய்கள் வராமலும் தடுக்கிறது.

MOST READ: பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா? எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க...

நச்சுக்களை ஓரம் தள்ளுதல்

நச்சுக்களை ஓரம் தள்ளுதல்

நமது உணவில் உள்ள நச்சு வாய்ந்த தாதுக்களை குடல் உறிஞ்சி கொள்ளலாமல் இருக்க சோயா புரோட்டீன் உதவுகிறது. இது ஒரு ஆன்டி நியூட்ரிஷன் பொருள் மாதிரி செயல்படுகிறது.

தைராய்டு பிரச்சினை

தைராய்டு பிரச்சினை

நமது தொண்டை பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி தான் உணவில் உள்ள அயோடினை தைராய்டு ஹார்மோனான தைராக்ஸின் மற்றும் ட்ரியோடோதைரோனைன் ஆக மாற்றுகிறது. சோயா வில் உள்ள ஐஸோஃப்ளவன்ஸ் ஒரு ஹைட்ரோஜென் மாதிரி செயல்பட்டு இந்த ஹார்மோன் உற்பத்தி சுரப்பை பாதிக்கிறது.

ஹார்மோன் சமநிலை பாதிப்பு

ஹார்மோன் சமநிலை பாதிப்பு

சோயா வில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் என்ற தாவரத்தில் உள்ள கெமிக்கல் பொருள் உள்ளது. இது நமது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் மாதிரி செயல்படும் என்பதால் நிறைய மக்கள் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என்று கூறுகின்றனர்.

MOST READ: ஐஸ்வர்யா மாதிரி அடிக்கடி மூடு மாறிக்கிட்டே இருக்கும் ராசிகள் எதுன்னு தெரியுமா? இந்த ஆறும் தான்

முடிவு

முடிவு

சோயா புரோட்டீனில் நமக்கு நிறைய நன்மைகளும் அதே நேரத்தில் ஒரு சில தீமைகளும் இருக்கவே செய்கிறது. நமது அன்றாடப் உணவில் சரியான அளவு சோயா உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். நீங்கள் சைவபிரியர்கள் என்றால் உங்களின் புரதச்சத்துக்கு சோயா ஒரு சிறந்த உணவு எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Soy Protein Good For Your Health?

People allergic to dairy products and even vegans substitute animal proteins with soy proteins. Soy proteins are considered to be a healthier alternative for meat. It give heart healthy, cancer protection, muscle building and so on
Story first published: Tuesday, October 9, 2018, 12:32 [IST]
Desktop Bottom Promotion