For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையை சட்டென குறைக்க நெய்யை சாப்பிட்டாலே போதும்..! மேலும் பல நன்மைகள் உள்ளே...

|

சிறு வயது முதல் பெரியவர்கள் ஆகும் வரை பாலை குடித்து வளர்ந்து வருகின்றோம். பால், உடல் ஆரோக்கியத்தை நலமோடு காக்க வழி செய்கிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எல்லா வகையான உணவு பொருட்களும் எண்ணற்ற சத்துக்களை கொண்டது. சிறந்த உணவு பொருட்களில் ஒன்றாக பாலும் கருதப்படுகிறது. அதே போன்றுதான், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களிலும் பல்வேறு நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.

குறிப்பாக இதில் இருந்து தயாரிக்கப்டும் நெய் அதிக மருத்துவ குணங்களை கொண்டதாம். இது உடல் எடை குறைப்பது முதல் சர்க்கரை நோயாளிகள் வரை அனைத்து வகையான நோய்களுக்கும் உதவுகிறது. நெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தி நலம் பெறலாம் என்பதை இனி அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணல் மணலான நெய்..!

மணல் மணலான நெய்..!

நெய்யானது பாலில் இருந்து எடுக்கப்படும் முக்கிய உணவு பொருளாகும். மற்ற நாட்டினரை விட நெய்யை இந்தியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். நெய்யில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதனை ஒரு சில குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தி வந்தால், இதன் மருத்துவ குணங்கள் இருமடங்காக மாறும்.

பாரம்பரிய நெய்..!

பாரம்பரிய நெய்..!

நெய்யை எல்லா வகையான உணவுகளிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக நம் பாரம்பரிய உணவுகளில் நெய்யை பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் இதில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.

கலோரிகள்

நிறையுற்ற கொழுப்பு

வைட்டமின் எ

வைட்டமின் ஈ

கால்சியம்

பொட்டாசியம்

வைட்டமின் கே

பாஸ்பரஸ்

தொப்பையை குறைக்க

தொப்பையை குறைக்க

உடல் பருமனால் அவதிப்படும் முக்கால் வாசி பேருக்கு இந்த தொப்பை பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. தொப்பையை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து விட்டீர்களா..? பலன் ஏதும் கிடைக்கலையா..? இனி இந்த நெய் வைத்தியத்தை செய்து பாருங்கள். இதில் உள்ள அமினோ அமிலங்கள் தொப்பையில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவும். மேலும், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்களும் இதில் இருப்பதால் உடல் பருமனை குறைக்கும்.

 சளி தொல்லைக்கு

சளி தொல்லைக்கு

மழை காலம் ஆரம்பித்து விட்டதால், இனி சளி, இரும்பல், ஜலதோஷம் போன்ற தொல்லைகள் அதிகமாக கூடும். குறிப்பாக சளி தொல்லை பலருக்கு வர கூடும். இதனை சட்டென குணப்படுத்த இந்த எளிய வழி முறை இருக்கிறது.

தேவையானவை :-

நெய்

இலவங்கப்பட்டை

இஞ்சி

ஏலக்காய்

MOST READ: உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க இந்த 4 வகையான பீட்ரூட் ஜுஸ் போதுமே..!

செய்முறை :-

செய்முறை :-

சளி தொல்லை அதிகமாக இருந்தால் ஒரு துண்டு இலவங்கப்பட்டையை நெயில் சிறிது நேரம் வதக்கி எடுத்து விட்டு, அதனை அப்படியே விழுங்கி விடவும். மேலும் மூக்கு அடைப்பாக இருந்தால், இஞ்சி தூள் மற்றும் ஏலக்காயை நெயில் வதக்கி கொண்டு பிறகு வடிகட்டி, அந்த நெய்யை சாப்பிட்டால் போதும்.

மலசிக்கல் பிரச்சனையா..?

மலசிக்கல் பிரச்சனையா..?

மலசிக்கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. தினமும் இரவில் 1 கிளாஸ் பாலில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து குடித்து வரவும். இது வயிற்றின் செரிமான மண்டலத்தை இலகுவாக்கி மலசிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ளும். அத்துடன், உடலின் மெட்டபாலிசத்தையும் கூட்டும்.

முடி உதிர்வை தடுக்க...

முடி உதிர்வை தடுக்க...

முடி உதிரும் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா..? பொடுகு தொல்லையும் கூடவே இருக்கிறதா..? இனி இந்த கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது நெய் வைத்தியம். அதற்கு இதனை பின்பற்றினாலே போதும்.

தேவையானவை :-

ஆலிவ் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

நெய் 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முடி உதிர்வை தடுக்க , முதலில் நெய்யை ஆலிவ் எண்ணெய்யுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றை முடியின் அடி வேரில் தடவி மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வு நிற்கும். மேலும், நெய்யை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

MOST READ: தம்பதியர் புணர்தலுக்கு பின் குளிக்க வேண்டியதன் கட்டாயம் என்ன?

சர்க்கரை நோயிற்கும் நெய்..!

சர்க்கரை நோயிற்கும் நெய்..!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுளோர்க்கு நெய் கொடுக்கலாமா..? கூடாதா..? என்ற கேள்வி பல நாட்களாக நம்மில் பலருக்கு இருந்து வருகிறது. ஆனால், இதற்கான தீர்வு என்னவெனில், நெய்யை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். சப்பாத்தி, சாதம், பரோட்டா ஆகியவற்றைதான் நெய்யை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

எதிர்ப்பு சக்தியை இருமடங்காக்க

எதிர்ப்பு சக்தியை இருமடங்காக்க

இன்று எதிர்ப்பு சக்தி குறைவால் பல வகையான நோய்களுக்கு ஆளாகின்றோம். எதிர்ப்பு சக்தியை கூட்ட பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றில் நெய்யும் மிக சிறந்த ஒன்றாகும். இதில் அதிகமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் நெய் உடலுக்கு நன்மையை தரும்.

முக அழகை இரட்டிப்பாக்க

முக அழகை இரட்டிப்பாக்க

முகத்தின் அழகை கூட்ட நெய் நன்றாக உதவும். இவற்றில் வைட்டமின் எ, ஈ, கே போன்ற பல்வேறு ஊட்டசத்துக்கள் உள்ளன. எனவே, இதனை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு மென்மையாக மாறும். அத்துடன், உதடுகளில் உள்ள கருமையை நீக்க நெய்யை உதட்டில் தடவி வந்தாலே போதும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Use Ghee For Various Home Remedies

One of India's most treasured foods, ghee has long been known for its healing properties and health and beauty benefits.