உங்களுக்கு நீர் உடம்பா? அதை குறைக்க வெந்தய நீரை இப்படி யூஸ் செய்ங்க!

Written By:
Subscribe to Boldsky

உடலில் உள்ள அதிகப்படியான நீரின் காரணமாக உடல் எடை அதிகமாக காணப்படுகிறது. இந்த நீர் உடம்பானது, கர்ப்பிணி பெண்கள் மற்றும் வீட்டில் அதிகமாக வேலை செய்யாமல் இருப்பவர்கள், உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களை தாக்குகிறது..

இந்த நீர் உடம்பினை எப்படி தான் குறைப்பது என்று தெரியாமல் பலர் குழம்பிக் கொண்டிருப்பார்கள். இந்த நீர் உடம்பின் காரணமாக, எழுந்து எந்த வேலையையும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். உங்களுக்கு நீர் உடம்பு உள்ளதா? கவலை வேண்டாம் ஒரு சில உணவுகளை தவிர்ப்பதன் மூலமாகவும், ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலமாகவு உங்களது உடலை எளிதாக குறைக்க முடியும். இந்த பகுதியில் நீர் உடம்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் மற்றும் செய்ய வேண்டியது விஷயங்கள் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக நீர் வெளிப்பாடு

அதிக நீர் வெளிப்பாடு

நீர் உடம்பு உள்ளவர்களுக்கு உடலின் பல்வேறு இடங்களில் இருந்தும் நீர்மம் வெளிப்படும். நீங்கள் உங்களது கால்கள் மற்றும் கைகள் கனமாக உள்ளது போன்ற உணர்வை உணர முடியும். இந்த நீர் எடையானது நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் மற்றும் அணிகலன்களை இறுக்கமானதாக உணர செய்யும். இது ஒரு வித அசௌகரியத்தையும் கொடுக்கும். இது இறுக்கத்தையும், ஒரு சில சமயங்களில் மூட்டு பகுதியில் வலியையும் கொடுப்பதாக அமையும்.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

இந்த நீரானது, உடலில் பல்வேறு பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக உள்ளது. குறிப்பாக இருதயம், கல்லீரல், கார்டிவாஸ்குலர் போன்ற பிரச்சனைகள் உண்டாக காரணமாக அமைகின்றன. இந்த நீர் உடல் பிரச்சனையானது கர்ப்பமாக இருக்கும் காலத்தில், நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பதலோ அல்லது அமர்ந்து கொண்டே இருப்பதாலோ உண்டாகிறது.

சோடியம் (உப்பு)

சோடியம் (உப்பு)

சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தடுக்க வேண்டியது அவசியமாகும். இப்போது கிடைக்கும் பலவகை உணவுகளில் இந்த சோடியம் அதிகமாக உள்ளது. கேன்களில் அடைக்கப்பட்டிருக்கும் சூப் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ்கள், ஊறுகாய்கள் போன்றவற்றில் இந்த சோடியம் அதிகமாக காணப்படுகிறது.

துரித உணவுகள்

துரித உணவுகள்

இந்த உப்பானது சிப்ஸ் வகைகள் மற்றும் துரித உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறது. நீங்கள் அதிகளவு உப்பு உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக தடுத்தால் தான் உடல் எடையை குறைப்பது சாத்தியமாகும். மேலும் நீங்கள் அதிகளவு உப்பை சேர்த்துக் கொள்வதால் உங்களது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இது ஸ்ட்ரோக் மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாகிறது.

உப்பை குறைக்கவும்

உப்பை குறைக்கவும்

நீர் உடலை குறைக்க, நீங்கள் அதிகமாக சோடியம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எப்போதும் புதிதாக சமைக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும்.

எப்போதும் பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கும் போது அதில் 120mg சோடியம் அல்லது 100 கிராமிற்கு குறைவான அளவு சோடியம் உள்ள உணவு பண்டங்களை வாங்கவும்.

மெக்னீசியம்

மெக்னீசியம்

மெக்னீசியம் என்ற ஒரு மினரல் உடலில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்க வேண்டியது அவசியமாகும். மெக்னீசியமானது உங்களது மாதவிடாய் காலத்தில் நடைபெறும் மனநிலை மாற்றங்களை நிர்வாகிக்க உதவுகிறது.

தினமும் 200mg அளவுக்கு பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையும் குறையும்.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

பாதாம், கீரைகள், கருப்பு பீன்ஸ், அவோகேடா, யோகார்ட் போன்றவை உங்களது நீர் உடம்பை குறைக்க உதவுகின்றன. எனவே நீர் உடலை குறைக்க இந்த மெக்னீசியம் நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

பொட்டாசியம்

பொட்டாசியம்

பொட்டாசியம் கூட உங்களது உடலில் உள்ள எலட்ராய்டுகளை சமமாக்க உதவுகிறது. இது உங்களது உடலில் உள்ள அதிக சோடியத்தை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் நீர் எடை அதிகரிப்பதையும் இது கட்டுப்படுத்த உதவுகிறது.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

நீங்கள் சோடியம் எடுத்துக் கொள்ளும் அளவை சமன் செய்ய இந்த பொட்டாசியம் உட்க்கொள்ளல் பயன்படுகிறது. பொட்டாசியம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உங்களது சிறுநீர் அதிகமாக வெளியேறுகிறது. தினசரி 4700 mg அளவிற்கு பொட்டாசியத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

கீரைகள், ப்ரோகோலி, வாழைப்பழங்கள், தக்காளி போன்றவற்றில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், நீங்கள் இவற்றை தினசரி உட்கொள்வதால் உங்களது நீர் எடையை குறைக்கலாம்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள் செய்வதன் காரணமாக உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும். சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், நடனமானடுதல் போன்றவை உங்களது உடலில் உள்ள அதிகப்படியான உடல் எடையை குறைக்க பயன்படுகின்றன.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

அஸ்வகந்தா போன்ற மூலிகைகள் ஆயுர்வேத ரீதியாக உங்களது நீர் உடலை குறைக்க பயன்படுகிறது. மேலும் நெல்லிக்காய், மிளகு, இஞ்சி போன்றவையும் உங்களது நீர் உடலை குறைக்க பயன்படுகிறது. மேலும் அடிக்கடி கொத்தமல்லியையும் உணவில் சேர்த்து வாருங்கள்.

ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காய் ஒரு மிகச்சிறந்த மூலிகையாகும். இந்த ஏலக்காய் நீர் எடையை குறைக்க உதவுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏலக்காய் விதை பவுடரை ஜூஸ் அல்லது பிற மூலிகைகளுடன் உங்களது எடை, வயது, ஆரோக்கியத்திற்கு தகுந்த அளவினை டிரை செய்து பார்க்கலாம்.

வெந்தயம்

வெந்தயம்

நமது வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருளான வெந்தயம் உங்களது நீர் உடலை குறைக்க பெருமளவில் பயன்படுகிறது. மேலும் இது கல்லீரல் செயல்பாடுகளை சரி செய்யவும் உதவுகிறது. வெந்தய விதைகளை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அதனை தினமும் இரண்டு தடவைகள் பருக வேண்டும். நீங்கள் தினசரி சமையலிலும் வெந்தய பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.

குருதி நெல்லி ( Cranberry)

குருதி நெல்லி ( Cranberry)

குருதி நெல்லி மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய ஒன்றாகும். இது உங்களது உடலில் உள்ள தேவையற்ற நீரை மிகவும் எளிமையான முறையில் சுலபமாக வெளியேற்றுகிறது. இது உங்களது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதனுடன், சிறுநீரை அதிகரித்து உங்களது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவுகிறது.

யோகா பயிற்சிகள்

யோகா பயிற்சிகள்

உங்களால் முடிந்த சின்ன சின்ன யோகா பயிற்சிகளையாவது தினமும் செய்யுங்கள். உடலை வளைப்பதன் மூலமாக உங்களது உடலில் உள்ள தேவையற்ற நீரினை வெளியேற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to reduce water weight naturally

How to reduce water weight naturally
Story first published: Monday, January 8, 2018, 15:41 [IST]