For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலை உணவை தவிர்த்தால் சர்க்கரை நோய் ஏற்படுமாம்... புதிய ஆய்வில் தகவல்..!

By Haripriya
|

உணவு ஒவ்வொரு உயிரினத்திற்கும் மிகவும் முதன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. உலகில் வாழும் எல்லா வகையான ஜீவ ராசிகளுக்கும் உணவே அடிப்படை. உணவின்றி இந்த பூமியில் எந்த உயிரினமும் இயங்காது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இவற்றை நாம் சரியான நேரத்திலும், ஆரோக்கியமான முறையிலும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

Harmful Effects Of Skipping Breakfast

இல்லையேல் எண்ணற்ற உடல் கோளாறுகளை இது ஏற்படுத்த கூடும். அந்த வகையில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவர் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் எத்தகைய பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும் என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அணுவும் இங்கு அசையாது..!

அணுவும் இங்கு அசையாது..!

உணவின் பயன்பாடு என்பது மிகவும் இன்றியமையாததாகும். நாம் அன்றாடம் உழைப்பது ஆரோக்கியமான உணவை உண்பதற்காகவே. ஆனால், இன்று கடமைக்கு நாம் செய்யும் செயல்களில் உணவும் ஒன்றாக மாறிவிட்டது. வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே கொண்டிருக்கின்றனர். இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணராமல் செய்கின்றனர்.

ஃபேஷன் டயட்..!

ஃபேஷன் டயட்..!

இப்போதெல்லாம் ஒரு புதுயுக ஃபேஷன் டயட் பல தரப்பு மக்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஃபேஷன் என்ற பெயரில் உணவை தவிர்ப்பது பக்க விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும். டயட் இருப்பது நல்லதுதான். ஆனால், டயட் என்பது ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதே தவிர, உணவை தவிர்ப்பது இல்லை. இது முழு உடலையும் சீர்குலைய செய்து விடும்.

ஆராய்ச்சியின் மோசமான முடிவு..!

ஆராய்ச்சியின் மோசமான முடிவு..!

காலை உணவை பற்றிய ஆராய்ச்சிகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,காலை உணவை தவிர்க்க கூடிய மக்களை கொண்டு செய்த ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அது என்னவென்றால், காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் உடலில் ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்தனர்.

சர்க்கரை நோயும் உணவும்..!

சர்க்கரை நோயும் உணவும்..!

நீங்கள் காலை உணவை தவிர்த்தால் அது உங்கள் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை உண்டாகுமாம். தினமும் காலையில் சாப்பிடாமல் இருந்தால் அவை இன்சுலின் உற்பத்தியை குறைத்து விடும். பிறகு மதிய உணவை நீங்கள் எடுத்து கொள்ளும்போது அவற்றின் குளுக்கோஸ் அளவை இவற்றால் ஈடுகட்ட முடியாமல் Insulin resistance ஏற்படுத்துமாம். இறுதியாக இவை சர்க்காரை நோயிற்கு வழி வகுக்கும்.

மூளையை சோர்வுற செய்யுமா..?

மூளையை சோர்வுற செய்யுமா..?

மூளைக்கு சரியான அளவில், உடலில் இருந்து ஆற்றல் கிடைக்க வில்லையென்றால் அது பல்வேறு உடற்கூறுகளை பாதிக்கும். காலை உணவை தவிர்ப்பதால் உடலில் குளுகோஸின் அளவு குறைந்து மூளை சோர்வு பெறுகிறது. மேலும் இது மறதி போன்ற பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அத்துடன் வேளையில் ஆர்வத்தை குறைத்து மழுங்க செய்து விடும்.

இதய நோய்களின் வாசல்..!

இதய நோய்களின் வாசல்..!

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர். சராசரியாக 27 சதவீதம் இதய நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என ஆய்வுகள் சொல்கிறது. அத்துடன் மன அழுத்தம் போன்றவையும் இதனால் ஏற்படுமாம்.

காலை உணவும் உடற்பருமனும்...!

காலை உணவும் உடற்பருமனும்...!

சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளா விட்டால் அது ஒவ்வொரு உறுப்புகளையும் பாதிக்க செய்யும். அந்த வகையில் காலை உணவை தவிர்த்தால் அது மதிய உணவு சாப்பிடும் போது அதிக பசியை தூண்டி விடும். இதனால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு, உடல் எடை கூடுவதற்கான வழியை செய்துவிடும்.

ஹார்மோன்களின் விளையாட்டு..!

ஹார்மோன்களின் விளையாட்டு..!

நாம் எத்தகைய உணவை உடலுக்குள் செலுத்துகிறமோ அதை பொருத்துதான் அவற்றின் செயல்பாடும், ஆற்றலும் இருக்கும். உணவை சரியாக எடுத்து கொள்ளாவிட்டால் அது ஹார்மோன்களில் மாற்றங்களை தரும். குறிப்பாக காலை உணவை தவிர்த்தால் Dopamine மற்றும் Serotonin ஹார்மோன்கள் குறைவாக சுரக்கும். இவற்றின் குறைபாடு மன நிம்மதியை இழக்க செய்து விடும்.

ரத்த அழுத்த நோய்கள்...

ரத்த அழுத்த நோய்கள்...

வேலை பளுவால் நாம் செய்யும் இந்த உணவு தவிர்க்கும் பழக்கம் எத்தகைய விளைவை நமது உடலில் ஏற்படுத்தும் என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். காலை உணவை நீங்கள் தவிர்த்தால் உயர் ரத்த அழுத்த நோய்கள் கூட ஏற்படமாம். மேலும், உடலில் ரத்த ஓட்டத்தை பாதித்து, செயல்பாட்டை குறைத்து விடும்.

எதிர்ப்பு சக்திக்கு டாட்..!

எதிர்ப்பு சக்திக்கு டாட்..!

காலைஉணவை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்றால் உங்களின் எதிர்ப்பு சக்தியின் அளவை நீங்களே குறைத்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் காலை உணவை தவிர்த்தால் அவை புதுப்புது நோய்களுக்கு கதவுகளை திறக்க கூடும். மேலும், காலையில் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிட்டாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

துர்நாற்றம் வீசுமாம்...!

துர்நாற்றம் வீசுமாம்...!

காலை உணவு சாப்பிடாவிட்டால் அது வாயில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்காமல் விட்டுவிடும். அதாவது காலையில் நாம் உண்ணும்போது எச்சில் உள்ள லைஸோசைம் என்பவை வாய் கிருமிகளை அழிக்கும். இல்லையென்றால் இவை வாயில் துர்நாற்றம் ஏற்படத்தும். அத்துடன் செரிமான சுரப்பிகளையும் பாதிக்க செய்யும்.

பசியின்மைக்கு வழி ஏற்படுத்துமா..?

பசியின்மைக்கு வழி ஏற்படுத்துமா..?

ஒருவர் காலையில் உணவை தவிர்க்கிறார் என்றால் எண்ணற்ற கோளாறுகளை உடலுக்கு தர போகிறது என்று அர்த்தம். அந்த வகையில் பசியின்மையும் ஒன்று. காலை உணவை தவிர்த்தாலோ அல்லது சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ பசியின்மை ஏற்படும். இது உடல் பருமனாவதற்கு உதவி புரியும். எனவே, இனி காலை உணவை தவிர்க்காதீர்கள் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Harmful Effects Of Skipping Breakfast

People who avoid breakfast are also known to have an increased susceptibility to hypertension, heart diseases, diabetes..etc
Story first published: Monday, September 10, 2018, 16:48 [IST]
Desktop Bottom Promotion