இனி இந்த கோதுமையை தூக்கி வீசுட்டு புல்கூர் கோதுமை வாங்குங்க... அதுலதான் அத்தனை சத்தும் இருக்காம்...

Subscribe to Boldsky

உடைத்த கோதுமை, புல்கூர் கோதுமை என்று அழைக்கப்படுகிறது. முழு கோதுமை அதிக பிரபலமான ஒரு தானியம் ஆகும்.

health

சுத்தீகரிக்கப்பட்ட கோதுமையை விட அதிக வைட்டமின், நார்ச்சத்து, அன்டி ஆக்சிடென்ட், மினரல் மற்றும் பல்லூட்டச்சத்துகள் நிறைந்தது இந்த பல்குர் கோதுமை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இப்படி ஒரு கோதுமையா?

இப்படி ஒரு கோதுமையா?

இந்த கோதுமையில் கொழுப்பு குறைவாக உள்ளது. இரும்பு, மங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற மினரல்கள் அதிகமாக உள்ளன. இது ஒரு தாவர அடிப்படையிலான புரதம். இது மட்டுமல்லாமல், உங்கள் செரிமான மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு நல்ல நார்ச்சத்து உள்ள உணவாகும். முழு தானியத்தின் நுகர்வு புற்றுநோய், இதய நோய் , உடல் பருமன், மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு சுகாதார நிலைகளுக்கு எதிராக பயனுள்ளது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, புல்கூர் கோதுமை உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக இருக்க முடியும்.

புல்கூர் கோதுமையில் உள்ள பல்லூட்டச்சத்துகள், உடல் அழற்சியைக் குறைத்து தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து உடலை பாதுக்காக்கிறது என்பது மற்றொரு முக்கிய செய்தியாகும். பிளான்ட் ஸ்டீரால் , பிளான்ட் ஸ்டேனால், லிக்னன் போன்றவை இதில் இருக்கும் சில வகை பல்லூட்டச்சத்துகள் ஆகும்.

இந்தியா, துருக்கி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், பல காலங்களாக புல்கூர் கோதுமை ஒரு பிரதான உணவாகும். மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ஒரு உணவு வகையான டபுலே வில் இது ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். இருப்பினும், சூப், சாலட், பிரட் , மற்றும் பிரதான உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த புல்கூர் கோதுமையை தினசரி உங்கள் உணவில் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து இந்த பதிவைப் படித்து இந்த கோதுமையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

புல்கூர் கோதுமை என்றால் என்ன ?

புல்கூர் கோதுமை என்றால் என்ன ?

உமி நீக்கப்படாத பல்வேறு கோதுமையின் கலவை தான் இந்த புல்கூர் கோதுமை. இதனை வேகமாக சமைக்க முடியும் என்பதால் மேற்கத்திய உணவு வகைகளில் இது மிகவும் பிரபலமான ஒரு மூலப்பொருளாக உள்ளது. பாஸ்தா, சாலட் ,பிரட் போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம். பல வகையான தானியங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவை உற்பத்தி செய்யும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை ஆகும். ஆனால் இவற்றில் இருந்து பல்குர் கோதுமை முற்றிலும் வேறுபடுகிறது. இந்த வகை கோதுமையில் மினரல்கள், நார்ச்சத்து, வைட்டமின், அன்டி ஆக்சிடென்ட் போன்றவை பொதிந்து உள்ளன. இத்தகைய ஊட்டசத்து அதிகம் உள்ள புல்கூர் கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

இரும்பு, தாமிரம், ஜின்க், மங்கனீஸ், மெக்னீசியம், நியாசின், டயட் புரதம், பொட்டாசியம் போன்றவை இதன் முக்கிய மூலப்பொருட்கள் ஆகும். இதில் கலோரிகளும் கொழுப்பும் மிக குறைந்த அளவில் உள்ளன. இதனை தினசரி உட்கொள்வதால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து

ஒரு கப் புல்கூர் கோதுமையில் பின்வரும் ஊட்டச்சத்துகள் உள்ளன.

கலோரி - 151

நார்ச்சத்து - 8 கிராம்

புரதம் - 6 கிராம்

கொழுப்பு - 0.5 கிராம்

மங்கனீஸ் - 1 மில்லி கிராம்

மெக்னீசியம் - 60 மில்லி கிராம்

இரும்பு - 7

நியாசின் - 8 மில்லி கிராம்

வைட்டமின் பி 6 - 0.2 மில்லி கிராம்

புல்கூர் கோதுமையின் ஆரோக்கிய நன்மைகள்

புல்கூர் கோதுமையின் ஆரோக்கிய நன்மைகள்

உங்கள் உடல் வளர்ச்சிக்கான பல முக்கிய ஊட்டச்சத்துகள் இந்த கோதுமையில் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இதயத்தை ஆரோக்கியம்

புல்கூர் கோதுமையை சாப்பிடும் நபர்கள் தங்கள் எடை மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க முடிகிறது என்பதை சில ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. நோய்களை எதிர்க்கும் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் பீனோலிக் கூறுகள் இவற்றில் உள்ளது. உடலின் கொழுப்பு அளவை பராமரிப்பது மற்றும் உடல் அழற்சியை குறைப்பது போன்ற செயலபாடுகளில் இவை உதவுவதால் இதயதிற்கு ஏற்ற ஒரு உணவாக இந்த கோதுமை உள்ளது. இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் தினமும் ஒரு முறை இந்த புல்கூர் கோதுமையை தங்கள் உணவில் சேர்க்கலாம். இது உடலில் அழற்சியை குறைக்கும் ஒரு கூறாகும்.

ஒரு சில ஆய்வுகள் முழு தானிய உணவு நுகர்வு கடுமையான இதய நோய்கள் ஆபத்து குறைக்க முடியும் என்று கூறுகின்றன. இருப்பினும், அதிகபட்ச நன்மைகளைப் பெற நீங்கள் தினமும் 49-50 கிராம் புல்கூர் கோதுமை சாப்பிட வேண்டும். மேலும், முழு தானியங்கள் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீனின் செறிவுகளைக் குறைக்கின்றன, இதனால் உடலில் உள்ள வீக்கம் குறைகிறது. உயர் ஹோமோசிஸ்டீன் இருதய நோய்கள், நீரிழிவு, மற்றும் புலனுணர்வு செயல்பாட்டில் ஒரு சரிவை உண்டாக்குகின்றன. மேலே கூறிய எல்லாவித பாதிப்புகளையும் குறைக்க தினமும் புல்கூர் கோதுமையை சாப்பிட வேண்டும்.

எடை குறைப்பில் உதவுகிறது

எடை குறைப்பில் உதவுகிறது

மிக அதிக உடல் எடை ஆரோக்கியமற்றது மற்றும் விரும்பத்தகாதது. இது கீல்வாதம், பக்கவாதம், பித்தப்பை கற்கள், மாரடைப்பு, நீரிழிவு, மற்றும் பல நாள்பட்ட நோய்கள் ஆகியவற்றை அதிகரிக்கிறது. கூடுதலாக உங்களுக்கு சோர்வு, அயற்சி, மூட்டு வலி, மற்றும் சுவாச கோளாறுகள் போன்றவை தோன்றும்.

புல்கூர் கோதுமை நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள். நார்ச்சத்து உங்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். ஆகவே உங்களால் அதிக உணவை சாப்பிட முடியாது. விரும்பியபோதெல்லாம் உணவு உண்ணும் பழக்கத்தை இதனால் குறைக்க முடியும். எடை குறைப்பு திட்டத்தின்போது இரண்டு வேளை புல்கூர் கோதுமை எடுத்துக் கொள்ளலாம். 1/3 கப் பல்குர் கோதுமையில் 5.2 கிராம் புரதம் மற்றும் 2.7 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆகவே எடை குறைப்பின்போது இந்த சக்தி மிக்க கோதுமையை உங்கள் உணவு திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பி

ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பி

நாட்பட்ட உடல் வீக்கத்தைக் குறைக்க புல்கூர் கோதுமை உதவுகிறது. இதனால் சில நோய்களில் இருந்து உங்கள் உடல் பாதுகாக்கப்படுகிறது. முழு கோதுமை தானியங்கள் அதிக அளவு பீடைன் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, இது ஹோமோசைஸ்டீனின் செறிவு குறைக்கக்கூடிய ஒரு மெட்டாபொலிட் ஆகும். ஹோமோசைஸ்டீன் என்பது உடலில் அழற்சியை உண்டாக்கும் ஒரு காரணியாகும் மற்றும் இதய நோய் பாதிப்பும் இதனால் ஏற்படலாம். ஆகவே ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதால் உங்கள் உடலில் அழற்சி குறைக்கப்படலாம். உடல் வலி, முடக்கு வாதம், உடல் வீக்கம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் புல்கூர் கோதுமையை சாப்பிடுவதால் இந்த பாதிப்பு கட்டுப்படுகிறது.

pH அளவு

pH அளவு

முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்து அடிப்படையிலேயே, சிறிய குடல் மூலம் செரிக்க முடியாத ஸ்டார்ச் மற்றும் ஒலிகோசக்கரைடு போன்றவற்றை எதிர்க்கும் வடிவமாகும். மாறாக இந்த நார்ச்சத்து குடலில் புளிக்க வைக்கப்பட்டு, சங்கலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த குறைந்த சங்கிலி கொழுப்பு அமிலங்கள், உடலின் pH அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றன. இனிப்பு மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட உணவுகள் மூலம் ஏற்படும் அசிடிட்டி இந்த pH அளவு சமநிலையில் இருப்பதால் ஏற்படுவதில்லை. மேலும் இந்த pH அளவு பராமரிக்கப்படுவதால், குடல் இயக்கங்கள் சிறப்பாகிறது, அதிக ஊட்டச்சத்து உறிஞ்சப்படுகிறது. ஆனால் முழு தானியத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் சிலருக்கு செரிமான தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம் . அப்படி இருப்பவர்கள் இதனைத் தவிர்க்கலாம்.

பித்தப்பையில் கற்கள்

பித்தப்பையில் கற்கள்

பித்தப்பையில் கற்கள் தோன்றுவதைக் குறைக்க புல்கூர் கோதுமை உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பித்தப்பையில் கற்கள் தோன்றினால், அதனைப் போக்க ஒரே வழி பித்தப்பையை அகற்றுவது தான். ஆனால், புல்கூர் கோதுமை சாப்பிடுவதால் இதன் அபாயம் குறைகிறது.

உங்கள் உடல் உற்பத்தி செய்யும் பித்தத்தின் அளவு குறைவதன் மூலம் உடலில் உணவு இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. பித்தநீரில் உள்ள குறைபாடு பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்புகளை குறைக்கிறது.

கூடுதலாக, இது உங்கள் உடல் இன்சுலின் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பின் எண்ணிக்கையை குறைக்கிறது. இத்தகைய நன்மைகளால் பித்தப்பை கற்கள் உண்டாகும் அபாயம் குறைகிறது.

குழந்தைப் பருவ ஆஸ்துமா

குழந்தைப் பருவ ஆஸ்துமா

உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா என்னும் சுவாச பிரச்சனை பரவலாக இருக்கும் ஒரு நோயாகும். புல்கூர் கோதுமையை குழந்தைகள் தொடர்ந்து உட்கொள்வதால் ஆஸ்துமா தொந்தரவு குறிப்பிட்ட அளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. புல்கூர் கோதுமை ஆஸ்துமாவை குழந்தைகளில் 50% குறைக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். புல்கூர் கோதுமையில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ அதிகம் இருப்பதால், சுவாசக் குழாய்களைப் பாதுகாக்கிறது மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் சுவாச சுழற்சியின் சுருக்கங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கிறது. ஆகவே உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் புல்கூர் கோதுமை உணவை தொடர்ந்து கொடுத்து வாருங்கள். இருந்தாலும் இதனை கொடுப்பதற்கு முன் உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

செரிமானம்

செரிமானம்

பல்குர் கோதுமை நார்ச்சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. உங்கள் வழக்கமான குடல் இயக்கத்தை பராமரிக்கவும் மற்றும் உங்கள் உடலை தீங்கு விளைவிக்கும் நச்சுக்களிலிருந்து தடுக்கவும் இந்த நார்ச்சத்து போதுமானது . மேலும் செரிமான பாதையில் உள்ள நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி வீக்கமடைவதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுகின்றன. கூடுதலாக, அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்வதால் உங்கள் குடல் மற்றும் பெருங்குடல் இயக்கம் மேம்படுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இத்தகைய நன்மைகளால் உங்கள் செரிமான இயக்கம் மேம்படுகிறது.

நீரிழிவு

நீரிழிவு

மற்ற சுத்தீகரிக்கப்பட்ட கோதுமையுடன் ஒப்பிடும்போது, புல்கூர் கோதுமையில் க்ளைகமிக் குறியீடு குறைவாக உள்ளது. உயர் நார்ச்சத்து உள்ளடக்கம் இருப்பதால், இது இரத்த ஓட்டத்தில் இரத்த சர்க்கரை எளிதில் வெளியீட்டிற்கு வழிவகுக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான வீதத்தை மெதுவாக குறைக்கலாம். பல்வேறு முழு தானியங்களில், புல்கூர் கோதுமை மட்டுமே மிகக் குறைந்த அளவு இரத்த சர்க்கரை வளர்ச்சியை காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சுத்தீகரிக்கப்பட்ட மாவு, உடல் பருமனை அதிகரிப்பதோடு இல்லாமல், இன்சுலின் எதிர்ப்பு அளவை அதிகரித்து, நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்குர் கோதுமையை மட்டும் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

நோயெதிர்ப்பு

நோயெதிர்ப்பு

முழு தானியங்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், அன்டி ஆக்சிடென்ட் , தாதுக்கள், முதலியவற்றை வழங்குகின்றன. இந்த குறைவான உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்த நிலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புல்கூர் கோதுமை, உங்கள் உடலை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் வலிமை கொண்டதாக மாற்ற உதவுகிறது. இது புற்றுநோய் ஒரு இயற்கையான சிகிச்சையாக செயல்பட முடியும். மேலும், உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புகளின் முக்கிய செயல்பாட்டை இது பராமரிக்கிறது. இதுவே உயர் நோய் எதிர்ப்பு நிலையின் விளைவாகும். நோய்கள் அல்லது நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்க நீங்கள் புல்கூர் கோதுமையை முறையாக உட்கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

வைட்டமின்கள், மினரல்கள்

வைட்டமின்கள், மினரல்கள்

ஆரோக்கியமான நுண் ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது இந்த புல்கூர் கோதுமை ஆகும். மங்கனீஸ், மெக்னீசியம், நியாசின், தியாமின், இரும்பு, போலேட் , வைட்டமின் பி , வைட்டமின் ஈ போன்றவை அதிகமாக உள்ள ஒரு உணவு பொருள் இந்த கோதுமை. மற்ற சுத்தீகரிக்கப்பட்ட கோதுமை மாவில் இத்தகைய ஊட்டச்சத்துகள் சிலநேரம் இல்லாமல் இருக்கலாம். இந்த ஊட்டச்சத்து குறைபாடால் தோன்றும் நோய்கள் புல்கூர் கோதுமையை உட்கொள்வதால் வராமல் தடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, இரும்பு சத்து இரத்தசோகையை தடுக்கிறது. மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது, இதயத்தை பாதுகாக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, வலிகளைப் போக்குகிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆக, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

புல்கூர் கோதுமை Vs சாதாரண கோதுமை

புல்கூர் கோதுமை Vs சாதாரண கோதுமை

புல்கூர் கோதுமை மாவு மற்றும் பிற கோதுமை மாவுகளுக்கு இடையிலான மிக முக்கியமான வேறுபாடு பேக்கேஜிங் ஆகும். புல்கூர் கோதுமை மாவு அதன் தவிடு மற்றும் முளை நீக்கப்பட்டு சுத்தீகரிக்கப்படுவதில்லை. எல்லா விதமான மாவும், அதன் உமி நீக்கப்பட்ட பின் தான் பேக் செய்யப்படுகிறது. வெளிப்புற தோல் அல்லது தவிடு மிகவும் சத்தானது, முக்கியமாக அனைத்து சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துகளும் இந்த தோலில் தான் உள்ளன. புல்கூர் கோதுமை பாதி வேகவைத்த பார்பாயில்டு முறையில் விற்கப்படுகின்றன. அதாவது இவற்றின் தோலின் ஒரு சிறு பகுதி மட்டுமே நீக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

உணவு தொழிற்சாலைகள் விற்கும் கோதுமை பெரும்பாலும் சுத்தீகரிக்கப்பட்டவை. இந்த சுத்தீகரிக்கபட்ட கோதுமையில் க்ளைகமிக் குறியீடு அதிகமாக இருக்கும் மேலும், இதன் தோல் பகுதி முற்றிலும் நீக்கப்பட்டு இருக்கும். இதனால் இந்த கோதுமையின் ஊட்டச்சத்துகள் முழுவதும் நீக்கப்படுகின்றன. கடையில் வாங்கப்பட்ட பாஸ்தா, நூடுல்ஸ் , பிரட், குக்கி, கேக் போன்றவற்றில் சுத்தீகரிக்கப்பட்ட மாவு பயன்படுத்தப்படுகிறது.

இதனால் இவற்றை உண்பதால் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.

ஆக மொத்தம், புல்கூர் கோதுமையில் 40% தோல் மற்றும் தவிடு நீக்கப்பட்டு, 60% சத்துகள் அப்படியே இருக்கின்றன.

ஆனால் மற்ற கோதுமையில், அவற்றின் இறுதி நிலை பதப்படுத்துதலுக்குப் பிறகு, உயர்ந்த கார்போ ஹைட்ரேட் மற்றும் குறைந்த நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன. அத்தியாவசிய வைட்டமின்கள் நியாசின், வைட்டமின் ஈ, பொட்டசியம், இரும்பு, போலேட், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை இவற்றின் செயலாக்கத்தில் காணமல் போய் விடுகின்றன. ஆயினும்கூட, சில ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட ஒரு செயல்பாட்டில் சேர்க்கப்படுகின்றன, ஆனால் அவை செயற்கை ஊட்டச்சத்துக்கள் ஆகும். இந்த செயற்கை ஊட்டச்சத்துக்களின் தரம் மற்றும் அளவு ஆகியவை பதப்படுத்தப்படாத முழு தானியங்களைவிட குறைவாகவே இருக்கின்றன.

புல்கூர் கோதுமை மற்றும் உடைத்த கோதுமை ஆகியவை சற்று வித்தியாசமாக இருந்தாலும், ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. பார்பாயில் செய்யப்படாத கோதுமையை உடைத்தால் வருவது உடைத்த கோதுமை ஆகும். இவை இரண்டும் முழு தானியங்கள் ஆகும், மற்றும் இதன் ஊட்டச்சத்துகள் மற்றும் நார்ச்சத்து ஒரே போன்ற தன்மையை உடையதாக இருக்கும்.

புல்கூர் கோதுமை மற்றும் பிற கோதுமைக்கு இடையே இன்னொரு மிக முக்கியமான வித்தியாசம் உள்ளது. புல்கூர் கோதுமை க்ளுடன் என்னும் பசையைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் மற்ற கோதுமை இந்த பசையைக் கொண்டுள்ளது.

கோதுமை, பார்லி மற்றும் கம்பு போன்ற அனைத்து தானியங்களிலும் ஒரு புரதம் உள்ளது. இது பல மக்களில் செரிமான அமைப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவ்வாறு, புல்கூர் கோதுமை மற்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் பொருட்கள் விட ஒரு படி உயர்ந்ததாக உள்ளது. இருப்பினும் க்ளுடன் ஒவ்வாமை அல்லது உணர்திறன் இருந்தால், திணை, பழுப்பு அரிசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். குடல் கசிவு மற்றும் பூஞ்சை தொற்று போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் இந்த புல்கூர் கோதுமையை பயன்படுத்துவதால் இந்த நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் இதனை தவிர்க்கவும்.

புல்கூர் கோதுமையை வாங்குவது

புல்கூர் கோதுமையை வாங்குவது

நீங்கள் சிறந்த தரத்துடன் பொருட்களை விற்கும் எந்த ஒரு கடையிலும் இந்த புல்கூர் கோதுமையை நீங்கள் வாங்கலாம். தவிடு மற்றும் முளை உள்ள கோதுமையை பார்த்து வாங்கவும். இவற்றில் தான் அதிக அளவு ஊட்டச்சத்துகள் இருக்கும். செறிவூட்டப்பட்ட கோதுமையை வாங்க வேண்டாம், இவை பதப்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.

புல்கூர் கோதுமை அமெரிக்காவில் பிரதானமாக வெள்ளை கோதுமையில் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இந்த கோதுமை நான்கு நிலைகளில் விற்கப்படுகிறது. அவை, சிறியது, மிதமானது, கொரகொரப்பானது மற்றும் மிகவும் கொரகொரப்பானது ஆகியவை. தானியம் பெரிதாக இருந்தால் சமைக்கும் நேரமும் அதிகமாகும். ஆகவே உங்கள் தேவைக்கு ஏற்ற வகையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பெரும்பாலும், பிலாப் என்னும் உணவு வகை மிதமான மற்றும் கொரகொரப்பான தானியத்தில் இருந்து செய்யப்படுவதாகும். டபுலே செய்வதற்கு நைஸ் கோதுமை தேவைப்படும். ஓரளவிற்கு கொரகொரப்பான கோதுமை எல்லாவிதத்திலும் பயன்படும்.

இதனை சமைக்கும் நேரம் மிகக் குறைவு. இதுவே இதன் சிறந்த நன்மையாகும். சில நிமிடம் கொதிப்பது மட்டுமே போதுமானது. நைசாக இருக்கும் புல்கூர் கோதுமையை கொதிக்கும் நீரில் சில நிமிடம் போட்டு, 15 நிமிடங்கள் அப்படியே விடவும். நன்றாக வெந்து விடும். சாப்பிடும்போது அதிகமாக இருக்கும் நீரை வடிகட்டி எடுத்து விடவும்.

கொரகொரப்பாக இருக்கும் புல்கூர் கோதுமை ஒரு பங்கு மற்றும் நான்கு பங்கு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொத்திதவுடன், 10 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். இடையில் கிளறி விடவும். பிறகு இறக்கி வைக்கவும். இதனால் கொரகொரப்பான கோதுமை சாறு தயாராகிவிடும்.

புல்கூர் கோதுமை உணவு வகைகள்

புல்கூர் கோதுமை உணவு வகைகள்

புல்கூர் கோதுமை பருப்பின் சுவையை ஒத்து இருக்கும். மற்ற சுவையுடன் கலந்துவிடக் கூடிய தன்மை கொண்டிருக்கும். பொதுவாக சிறிதாக காணப்படும் இதனை மென்று சாப்பிடலாம். கீழே சில உணவு ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புல்கூர் கோதுமை உணவுகளை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

புல்கூர் கோதுமை சாலட்

2 கப் வேகவைத்த புல்கூர் கோதுமை (நைஸ் கோதுமை )

2 கப் பாதியாக நறுக்கிய செர்ரி

1 கப் நறுக்கிய பரட்டைக் கீரை

1/2 கப் செலெரி இலைகள்

1/2 கப் முளை விட்ட தானியம்

1/4 கப் உங்களுக்கு பிடித்த நட்ஸ்

உப்பு தேவைகேற்ப

1/4 கப் சுத்தமான ஆலிவ் எண்ணெய்

1/4 கப் ஆப்பிள் சிடர் வினிகர்

1 ஸ்பூன் சிறிதாக நறுக்கிய பூண்டு

செய்முறை:

புல்கூர் கோதுமை மற்றும் அரிசியை தனித்தனியாக வேக வைக்கவும்.

அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கோதுமை, அரிசி, காய்கறி, செர்ரி என்று எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் போடவும்.

அதில் ஆலிவ் எண்ணெய், வினிகர், உப்பு, மிளகுதூள் போன்றவற்றை உங்கள் சுவைக்கு ஏற்ற விதத்தில் கலந்து கொள்ளவும். இதனை பரிமாறவும்.

கோதுமை பாயசம்

கோதுமை பாயசம்

தேவையான பொருட்கள்:

1 கப் கோதுமை மாவு

2 கப் துருவிய வெல்லம்

1 கப் பால்

2 ஸ்பூன் காய்ந்த திராட்சை, பாதாம், முந்திரி

1 ஸ்பூன் நெய்

செய்முறை

கோதுமையை ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 15 நிமிடங்கள் வெந்தபின் தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு அந்த நீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு பெரிய கிண்ணத்தில் வடிகட்டி வைத்த வெல்லத்தை 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது இந்த கிண்ணத்தில் கோதுமையை போடவும்.

கூடுதலாக பால் சேர்த்து அடுத்த 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இப்போது பாயசம் தயார். இதனுடன் நெய் , நட்ஸ், முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.

புல்கூர் கோதுமை பேன் கேக்

புல்கூர் கோதுமை பேன் கேக்

தேவையான பொருட்கள்:

1/2 கப் கோதுமை

2 முட்டை

2 ஸ்பூன் பட்டர்

1/4 கப் சர்க்கரை

உப்பு சிறிதளவு

லவங்கப்பட்டை தூள் சிறிதளவு

செய்முறை

கோதுமையை கொதிக்கும் நீரில் போடவும். 10 நிமிடங்கள் ஊறிய பின், அதிகமாக இருக்கும் நீரை வடிகட்டி விடவும்.

வடிகட்டிய கோதுமையுடன், முட்டை, சர்க்கரை, விதைகள் போன்றவற்றை சேர்க்கவும்.

நன்றாக இந்த கலவையை கலக்கவும்.

இதில் சிறிதளவு உப்பு மற்றும் லவங்க பட்டை தூள் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.

ஒரு பேனை எடுத்து சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை எடுத்து கேக் போன்ற வடிவத்தில் தடவவும்.

வெண்ணெய் சேர்த்து இரண்டு புறமும் திருப்பி போடவும்.

பிறகு எடுத்து பரிமாறவும்.

முடிவுரை

முடிவுரை

புல்கூர் கோதுமை ஒரு ஆரோக்கியமான உணவு பொருள். இதனை தினமும் உங்கள் உணவில் சேர்த்து நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம். சுத்தீகரிப்பு மற்றும் பதப்படுத்துதல் இல்லாத சுத்தமான புல்கூர் கோதுமையை கடையில் வாங்கி பயன்படுத்தவும். இதனை எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு பக்க விளைவும் உண்டாவதில்லை. மிக அதிக அளவு எடுத்துக் கொள்வதால் வாந்தி, வயிற்று போக்கு போன்றவை ஏற்படலாம். மிதமான அளவு எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. கூடுதலாக, க்ளுடன் ஒவ்வாமை அல்லது உணர்திறன் இருந்தால் இதனை உண்பதை தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Bulgur Wheat: Why Should You Replace This With Normal One

    Bulgur wheat is also known as cracked wheat, it’s a lesser-known type of whole wheat.
    Story first published: Thursday, June 14, 2018, 18:50 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more