ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

Posted By:
Subscribe to Boldsky

நம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் கலந்திருக்கும். அதன் அளவு குறையும் போது ஏற்படுகிற பாதிப்பினைத்தான் ஹைபோக்சீமியா என்கிறார்கள். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறன. மூச்சுக்குழாய்,ரத்த திசுக்களில் இப்படி எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்திடும். இதன் அறிகுறிகளாக தலைவலி, மூச்சத்திணறல்,வயிற்று தசை இழுப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

சிலருக்கு அப்படியே தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமாவிற்கும் இழுத்துச் சென்றுவிடும். குறிப்பிட்ட அளவிற்கும் மேல் ஆக்ஸிஜன் அதிகளவு குறைந்தால் அது நுரையிரல் செயல்பாட்டையே சீர் குலைத்து விடும்.

இதைத் தவிர நுரையிரல் பிரச்சனைகள், இரும்புச் சத்து குறைபாடு, சோர்வு,மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் ரத்தம் ஏற்றுவார்கள், அல்லது ஆக்ஸிஜன் தெரபி கொடுக்கப்படும், ஆக்ஸிஜன் அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள சொல்வார்கள். இது தான் உங்களுக்கு சிறந்த வழி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் ஆக்ஸிஜன் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் இது பாதிப்பை தீவிரப்படுத்தாமல் கட்டுப்படுத்தும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை :

எலுமிச்சை :

ரத்தத்தில் ஆக்ஸிஜன் இருப்பதினால் தான் நீங்கள் உற்சாகமாக உங்கள் வேலையை செய்ய உதவிடுகிறது. ஆக்ஸிஜன் அதிகமிருக்கும் உணவுகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது எலுமிச்சை. இதில் அதிகப்படியான எலெக்டோலிடிக் துகள்கள் இருக்கின்றன. எலுமிச்சை சாறு தொடர்ந்து எடுத்து வந்தால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.

அதோடு உடலில் சேர்ந்திருக்கும் பாக்டீரியாக்களையும் இது அழிக்கும்.

கேரட் :

கேரட் :

கேரட் தவிர அவகேடோ, பெர்ரீ,வாழைப்பழம், பேரீட்சை,பூண்டு ஆகியவை ஆக்ஸிஜனை அதிகரிக்கும் உணவாகும். இவற்றில் எல்லாவற்றிலும் ஆண்ட்டி ஆக்ஸிடன் அதிகமாக இருக்கின்றன. இவை ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவிடுகிறது.

கிஸ்மிஸ் :

கிஸ்மிஸ் :

இனிப்பு திராட்சை,பேரிக்காய்,அன்னாசிப்பழம், கிஸ்மிஸ் ஆகியவையும் ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும்.இவற்றில் விட்டமின் சி,ஏ மற்றும் பி ஆகியவை அதிகமாக இருக்கின்றன இது ரத்த அழுத்தத்தை சீர் படுத்தும் அதோடு இதயம் தொடர்பான பிரச்ச்சனைகள் வராமல் தவிர்க்க உதவிடும்.

ஜூஸ் :

ஜூஸ் :

பழச்சாறு அல்லது காய்கறி ஜூஸில் ஆக்ஸிஜனை அதிகரிக்ககூடிய தன்மை நிறையவே இருக்கிறது. இவற்றில் ஃபேலவனாய்டு நிறைய இருக்கும். இவை இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் தான் இருக்கும் மற்றபடி பாக்கெட் உணவுகளில் இருக்காது.

இது நம் உடலில் அல்கலைனை அதிகரிக்கச் செய்வதால் சுறுசுறுப்புடன் இருக்க உதவிடும்.

அஸ்பராகஸ் :

அஸ்பராகஸ் :

இது நம் உடலில் அமிலத்தன்மையை குறைக்க உதவிடும். இவற்றில் அஸ்பரகைன் அதிகமாக இருக்கிறது இவை எடுத்துக் கொள்வதால் உங்கள் நரம்புகளுக்கு வலு கிடைத்திடும்.இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

மாம்பழம் :

மாம்பழம் :

பழங்களில் மாம்பழம் தவிர பப்பாளி, தர்பூசணி ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். இவை கிட்னியை சுத்தம் செய்திடும். மாம்பழம்,தர்பூசணிப்பழம் ஆகியவற்றில் அதிகப்படியான விட்டமின் இருக்கிறது. அதோடு இவை செரிமானத்திற்கும் பெரிதும் உதவிடும். பப்பாளிப்பழம் பெருங்குடலை சுத்தப்படுத்த உதவிடும்.

கேப்சிகம் :

கேப்சிகம் :

இவற்றில் அதிகப்படியான என்சைம் இருக்கின்றன.அதைத் தவிர விட்டமின் ஏ இருக்கிறது. இது உங்களின் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

கடல் உணவுகள் :

கடல் உணவுகள் :

கடல் உணவுகளான மீன், நண்டு,இறால் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவற்றில் ப்ரோட்டீன்,சில பி விட்டமின்ஸ் மற்றும் இரும்புச் சத்து கிடைத்திடும். அதோடு இவற்றில் அமினோ அமிலம் இருக்கின்றன.

இவைத் தவிர மாட்டுக்கறியிலும் இந்தச் சத்து உங்களுக்கு கிடைத்திடும்.

பீன்ஸ் :

பீன்ஸ் :

பட்டாணி,பீன்ஸ் வகைகளை நிறைய உட்கொள்வதால் நம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்திடும். ஒரே வகையை உட்கொள்ளாது பீன்ஸ் வகைகளிலேயே பல கிடைக்கின்றன அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.இவற்றைத் தவிர தானிய வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எடுத்துக் கொள்ளும் போது அளவுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இத பிற உபாதைகளை ஏற்படுத்திடும்.

தானியங்கள் :

தானியங்கள் :

பொதுவாக தானியங்களில் ப்ரோட்டின்,பி விட்டமின் ஆகியவை இருக்கும். இவை உங்களது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கக்கூடியது. முழு கோதுமை,ஓட்ஸ்,அரிசி ஆகியவற்றை உண்பதால் நிறைய ஆக்ஸிஜன் கிடைத்திடும்.

ரத்தம் அதிகரிக்க என்று நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளை எல்லாம் நீங்கள் இதன் போதும் எடுத்துக் கொள்ளலாம்.

தர்பூசணி :

தர்பூசணி :

தர்பூசணியில் ஆல்கலைன் நிறைய இருக்கிறது. இவற்றில் அதிகப்படியான தண்ணீரும் ஃபைபரும் இருக்கின்றன. அதோடு இவற்றைத் தவிர இதில் பீட்டா கரோட்டீன், லைகோபின் மற்றும் விட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. இவற்றை சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடி எனர்ஜி கிடைத்திடும், இது சீசன் பழம் என்பதால் கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை தவர விட்டுவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Foods For Hypoxemia

Best Foods For Hypoxemia
Story first published: Wednesday, April 11, 2018, 15:35 [IST]