For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முள்ளங்கியை வைத்து எப்படி கல்லீரலை சுத்தப்படுத்தலாம்?... யாா் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?

முள்ளங்யின் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் அது கல்லீரலுக்கு எவ்வளவு பயனளிக்கிறது என்பது பற்றியும் இங்கு சில முக்கியமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

வேர்க்கிழங்கு வகை காய்கறிகளில் மிக முக்கியமான ஒரு காய் தான் இந்த முள்ளங்கி. இது ஜூஸ் அதிகம் நிறைந்த ஒரு காய். இது நிறைய நிறங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் தான் பெரும்பான்மையாகக் கிடைக்கிறது. அதைத் தான் நாமும் வாங்கிப் பயன்படுத்துகிறோம்.

benefits of raddish for liver health and detox

ஆனால் வெள்ளை, சிவப்பு, பர்பபிள், கருப்பு ஆகிய நான்கு நிறங்களில் முள்ளங்கி கிடைக்கும். உடம்பில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கின்ற மருத்துவ குணங்களை முள்ளங்கி உள்ளடக்கி இருக்கிறது. குறிப்பாக, கல்லீரல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் மஞ்சள் காமாலை ஆகிய பிரச்சினையைத் தீர்க்க வல்லது தான் இந்த முள்ளங்கி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் செயல்பாடுகள்

கல்லீரல் செயல்பாடுகள்

ஒட்டுமொத்தமாக கல்லீரல் செயல்பாடுகளில் மிகச் சிறப்பாக வேலை செய்வது இந்த முள்ளங்கி. பைலிரோஃபின் என்னும் கல்லீரலில் உண்மாகும் என்சைமை முள்ளங்கி அதிகரிக்கச் செய்கின்றது. கல்லீரலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது. அதோடு மைரோசினாஸ், டயாஸ்டேஸ், அமிலேஸ், எஸ்ட்ரேஸ் ஆகிய என்சைம்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப் படுத்துகிறது. கல்லீரலில் புண் (அல்சர்) ஏற்படாமலும் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு சிறந்த பங்கு உண்டு.

MOST READ: இப்படி இருக்கிற தலையில அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய எண்ணெயில போட்டு தேய்ங்க...

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

பொதுவாக மஞ்சள் காமாலைக்கு மருந்து இல்லை என்று சொல்வார்கள். மஞ்சள் காமாலையை சரிசெய்வதில் மிகத் தீவிரமாகச் செயல்படுவது முள்ளங்கி. கல்லீரலில் இருந்து சுரக்கும் ஒரு வகையான நச்சுப் பொருளான பிலிரூபிலின் என்னும் வேதிப்பொருளை இந்த முள்ளங்கி உடலில் தங்க விடாமல் வெளியேற்றி விடுகிறது. அதேபோல் கல்லீரலில் மட்டுமல்லாது ரத்தத்திலும் ரத்த சிவப்பணுக்களைக் அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக மஞ்சள் காமாலை ஏற்பட்டு ரத்ம சிவப்பணுக்கள் அழிய ஆரம்பிக்கும் ஆபத்தான் தருணத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து உயிரைக் காக்கிறது. குறிப்பாக, மஞ்சள் காமாலைக்கு கருப்பு முள்ளங்கி மிகச் சிறந்தது.

MOST READ: குழந்தைங்க கீழே விழும்போது முதலில் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் என்னென்ன?... தெரிஞ்சிக்கோங்க...

சிறுநீர் பிரிதல்

சிறுநீர் பிரிதல்

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கடுப்பு உண்டாகும். நம்முடை உடலில் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமடைவதற்கு மிக முக்கியமான வேலையை கல்லீரல் செய்கிறது. குறிப்பாக, நாம் சாப்பிடும் உணவு மற்றும் திரவப் பொருள்களில் இருந்து சிறுநீரைப் பிரித்தெடுக்கும் வேலையைச் செய்வது இந்த கல்லீரல் தான். அதனால் உங்களுடைய டயட்டில் நிச்சயம் முள்ளங்கியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீர் கடுப்பு, சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் ஆகியவற்றை சரிசெய்யும்.

MOST READ: எப்போதும் எதற்காகவும் நம்பவே கூடாத ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? ஜாக்கிரதையா இருங்க

புற்றுநோய்

புற்றுநோய்

கல்லீரல் புற்றுநோய் வராமலும் வந்தவர்களுக்கு நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்த முள்ளங்கி பயனளிப்பதை அறிவியல் பூா்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆந்தோ சயனாசிஸ், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை முள்ளங்கியில் நிறைந்திருக்கின்றன. அதனால் இது வயிறு, குடல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டு விளங்குகிறது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

எடை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் கட்டாயமாக தங்களுடைய டயட்டில் முள்ளங்கியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏன் அதை கட்டாய உணவாகக் கூட ஆக்கிக் கொள்ளுங்கள். பொதுவாக எடை கூடுதலாக இருப்பவர்கள் ஒவ்வொரு விஷயத்துக்கும் தங்களுடைய உடல் உறுப்புகளுக்கு அழுத்தத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, கல்லீரலுக்கு. முள்ளங்கி பசியைக் கட்டுப்படுத்தும். கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் நிறைவான உணர்வைக் கொடுக்கும். அதில் மிக்க குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டும் அதிக அளவில் நீர்ச்சத்தும் இருக்கிறது. அதனால் உங்களுடைய எடைக் கட்டுப்பாட்டுக்கு முள்ளங்கி சிறந்த தீர்வாக அமையும் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

benefits of raddish for liver health and detox

here we are giving some importance points about radish and that funtional benefits for liver.
Story first published: Tuesday, November 27, 2018, 18:12 [IST]
Desktop Bottom Promotion