For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீசிங், நுரையீரல் புற்றுநோய் இருக்கிறவங்க பழங்கள் சாப்பிடலாமா?... என்ன பழம் சாப்பிடலாம்?...

நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பழங்கள் எடுத்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. பொதுவாகவே பழங்களில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும்.

|

நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பழங்கள் எடுத்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. பொதுவாகவே பழங்களில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே இத்தகைய சத்து நிறைந்த பழங்களை நுரையீரல் புற்று நோயாளிகள் அவர்களின் உணவு அட்டவனையில் இணைத்து தினமும் எடுத்துக் கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தின் சிக்கல்கள் குறைக்கப்படுகின்றன.

fruits for lungs cancer in tamil

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்மை மற்றும் ஆற்றல் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே நுரையீரல் புற்று நோயாளிகள், பல்வேறு வகையான பழங்களை தங்கள் உணவில் இணைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி உதவுகிறது?

எப்படி உதவுகிறது?

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழங்கள் எந்த வகையில் உதவுகிறது? நுரையீரல் தனது செயல்பாடுகளை, முக்கியமாக சுவாச தொடர்பான செயல்பாடுகளை சரிவர செய்வதற்கு ஏற்ற ஆற்றலை அதிகரித்து தர பழங்கள் பெருமளவில் உதவுகின்றன. சுவாச செயல்பாடுகளில் தடை, அதாவது, ஆக்சிஜன் உட்புகுதல் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுதல் போன்ற செயல்பாடுகளில் தடை ஏற்படுவதால் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் நிலை மோசமாகும்.

தவிர்ப்பது எப்படி?

தவிர்ப்பது எப்படி?

பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளும் உணவு அட்டவணை, பல நாட்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கிறது. வைட்டமின், மினரல், நார்ச்சத்து, அன்டி ஆக்சிடென்ட், உயிரியல் ரீதியாக செயல்படும் பைத்தோ கெமிக்கல்கள் போன்றவை பழங்களில் அதிகம் இருப்பதால் பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களைத் தவிர்க்க முடிகிறது.

எந்த பழம் சாப்பிடலாம்?

எந்த பழம் சாப்பிடலாம்?

தக்காளி மற்றும் ஆப்பிள்கள் அதிகமாக உள்ள உணவு அட்டவணை, சுவாச தொந்தரவுகளுக்கு எதிராக ஒரு கவசமாக உள்ளது என்று அமெரிக்க தொரசிக் சொசைட்டி தெரிவிக்கிறது. வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஆப்பிள்களும் மூன்று முறைகளுக்கு மேல் தக்காளியையும் உங்கள் உணவில் சேர்ப்பதால் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு சிக்கல்கள் குறைவதாக அறியப்படுகிறது.

எந்த அளவு

எந்த அளவு

ஒருவரின் வயது, பாலினம், கலோரி உட்கொள்ளல், மற்றும் செயல்பாட்டளவு போன்றவற்றின் அடிப்படையில் பழங்களை எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, 2000 கலோரி அளவு டயட் உட்கொள்பவர்கள், தினமும் நான்கு முறை அல்லது இரண்டு கப் அளவு பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை சேர்த்த பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு மாற்றாக, நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் முழு பழங்கள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

சாலட்

சாலட்

நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்க வேண்டுமானால் அல்லது சமச்சீரான டயட் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால், பழங்கள் உங்கள் உணவுப் பட்டியலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். தங்கள் உணவு அட்டவணையில் பழங்களை இணைத்துக் கொள்ளும் எவரும் பல நன்மைகளை அடையலாம். பழங்களை முழுதாக, சாலட் அல்லது இனிப்புடன் சேர்த்து அவரவர் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளலாம்.

அன்னாசி

அன்னாசி

ஆப்பிள் மற்றும் தக்களியைத் தவிர, அன்னாசி பழமும் நுரையீரல் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. புற்று நோய்க்கான சர்வதேச பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஒவ்வொரு 100 கிராம் அன்னாசிப்பழம் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை 10 சதவிகிதம் குறைக்கிறது என்பது அறியப்படுகிறது.

பாகிஸ்தானிய ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் பத்திரிகை ஒரு அறிக்கையில், அன்னாசிப்பழத்தில் ப்ரோமிலின் என்னும் தனித்த ஆக்ஸிஜனேற்ற நொதி உள்ளது, இது புற்றுநோயை அதிகரிக்கும் அணுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது என்று கூறுகிறது.

நட்ஸ்

நட்ஸ்

நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள், மினரல்கள், மற்றும் அன்டி ஆக்சிடென்ட்கள் பழங்களில் பொதிந்துள்ளது. நுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் தினசரி பல்வேறு வகையான பழங்களை எடுத்துக் கொள்வதால் அவர்களின் நோயை குணப்படுத்துவதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர முடியும், மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் பெரிய அளவில் குறைகிறது. இது தவிர, உங்கள் தினசரி உணவில் நட்ஸ் சேர்த்துக் கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் கட்டுப்படுகிறது. மருத்துவர்கள் கூறும் வாழ்வியல் மாற்றங்களையும் கைகொள்வதால் விரைவில் நோய் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Eating Fruits for Lung Cancer Patients

Fruits bring a host of health benefits for lung cancer patients. High in nutritional value but low in calories, fresh fruits help reduce the risks of lung cancer.
Story first published: Thursday, July 26, 2018, 16:27 [IST]
Desktop Bottom Promotion