For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்...!

|

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஏராளமான நலன்கள் உள்ளது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எந்த வித நோயாக இருந்தாலும் எளிதாக சரி செய்ய ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. உடலில் சிறு காய்ச்சல் வந்தால் கூட நாம் மருத்துவரை அணுகி கலர் கலரான மாத்திரைகளை வாங்கி போட்டு கொண்டே இருப்போம்.

 உடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்..!

இதனால் ஏற்பட கூடிய தீமைகள் பல. முற்றிலும் பக்க விளைவுகள் அற்ற மருத்துவ முறையானது இந்த ஆயுர்வேத முறைதான். உடல் எடையை குறைப்பதற்கு கூட இதில் எளிமையான வழி முறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழம்பெரும் முறை...

பழம்பெரும் முறை...

நமது முன்னோர்களின் மிகவும் பிரசித்தி பெற்ற முறையாக இதனை காலம் காலமாக மக்கள் போற்றி வருகின்றனர். ஒருவருக்கு எந்த வித பாதிப்பையும் இந்த மருத்துவ முறை தராது. அதனால் தான், நமது முன்னோர்கள் இதனை பல ஆயிரம் வருடமாக பின்பற்றி வந்தனர்.

பாடி ஷேமிங்

பாடி ஷேமிங்"(Body Shaming) தெரியுமா..?

இப்போதெல்லாம் "பாடி ஷேமிங்"(Body Shaming) என்கிற ஒன்று பல இடங்களிலும் நடந்து வருகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒருவரை அவரது உடல் ரீதியாக கேலி அல்லது கிண்டல் செய்வதே. இவ்வாறு செய்வதால் பல வகையான உயிர் இழப்புகள் கூட நடக்கின்றன. பிறர் கேலி செய்கிறார்கள் என்பதற்காக நாம் நமது உடல் எடையை குறைக்க வேண்டியதில்லை. மாறாக நமது ஆரோக்கியத்தின் காரணமாக எடையை சீராக வைத்து கொண்டாலே போதும்.

இஞ்சியும் தேனும்

இஞ்சியும் தேனும்

கோடிக்கணக்கான மருத்துவ புதையல்களை ஒளித்து வைத்துள்ள ஒரு அரிய பெட்டகம் தான் இந்த இஞ்சி. அதே போன்று பல வகையான மருத்துவத்தில் தேன் மிக முக்கிய பங்காக உள்ளது. உடல் பருமனை குறைக்க சிறிதளவு தேனை கலந்த இஞ்சி டீயை குடித்து வந்தாலே போதும்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

"மூலிகைகளின் ராஜா" என்று அழைக்கப்படும் இந்த அஸ்வகந்தாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் 1 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை விரைவிலே குறைய தொடங்கும்.

MOST READ: முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..? அப்படி வைத்தால் என்ன நடக்கும்..?

நெல்லி

நெல்லி

வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெல்லி கனி உடல் எடையை குறைக்க பயன்படும் ஆயுர்வேத உணவு. தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். மேலும், இது உடலில் சேர கூடிய கொழுப்புக்களை முற்றிலுமாக நீக்க கூடியதாகும்.

கிரீன் டீ

கிரீன் டீ

இப்போதெல்லாம் பலருக்கு கிரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. இது பாராட்டுக்குரிய ஒன்றே. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளலாம். மேலும், கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.

இலவங்க பட்டை

இலவங்க பட்டை

உணவின் மணத்தையும் ருசியையும் அதிகரிக்க இந்த இலவங்க பட்டை எவ்வாறு உதவுகிறதோ அதே போன்று செரிமான ஆற்றலையும் இவை அதிகரிக்க பயன்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இவை முற்றிலுமாக வெளியேற்றுகிறது.

நெய்

நெய்

நாம் இன்று பயன்படுத்தும் எண்ணெய்களை காட்டிலும் இந்த நெய் எவ்வளவோ மேலானது. ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் முக்கியத்துவம் இன்றியமையாதது. இவை கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும். மேலும், சருமத்தின் பொலிவையும் நெய் அதிகரிக்கும்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்..!

கீரை வகைகள்

கீரை வகைகள்

நீங்கள் சாப்பிட கூடிய உணவில் கட்டாயம் கீரை வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கீரையிலும் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. எனவே, கீரையை தினமும் உங்களில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

உணவில் இந்த ப்ரோக்கோலியை நாம் சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்களை பெறலாம். இதில் எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, நீங்கள் சாப்பிட கூடிய உணவில் இதனை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியத்தை பெற்று விடலாம்.

மஞ்சள்

மஞ்சள்

இதில் உள்ள curcumin என்ற முக்கிய மூல பொருள் உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டி, எந்த வித நோய்களின் தாக்கத்தையும் ஏற்படும் பாதுகாக்கிறது. அத்துடன் சர்க்கரையின் அளவையும் சீராக வைத்து கொள்வதால், பல்வேறு நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம்.

மேற்சொன்ன ஆயுர்வேத உணவுகளை உங்களின் சாப்பாட்டில் சேர்த்து உண்டாலே உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கலாம் நண்பர்களே. மேலும், இந்த பதிவு உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Foods Can Help You To Lose Weight

Ayurvedic superfoods occupy an important part to lose weight.
Desktop Bottom Promotion