கல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்?...

By Gnaana
Subscribe to Boldsky

கெஃபிர், நம்மில் பலரும் அறியாத வார்த்தை, ஊட்டச்சத்துமிக்க ஒரு பானத்தின் பெயர்தான், அது. தற்காலத்திலுள்ள பாலியோ டயட்டில், புரோபயாடிக் உணவுகளில், கொண்டாடப்படும் ஒரு உணவுவகை, கெஃபிர்.

உடலுக்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்கள், பீட்டா கரோடின் போன்றவற்றை தன்னில் கொண்டு, உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, செரிமான கோளாறுகளை சரிசெய்து, குடல் புண்களை சரியாக்கி, உடல் நச்சுக்களைப் போக்கி, உடலின் ஆற்றலை வலுவாக்கும் ஒரு ஊட்டச்சத்துமிக்க பானம்தான், கெஃபிர்.

health

எல்லாம் சரிதான், கெஃபிர் என்றால் என்ன?, எனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாதே, அது நம்மூர் உணவா? அயல்நாடா? சைவமா? அசைவமா? அது எப்படி உருவாகிறது? அதைச்சொல்லுங்கள், என்கிறீர்களா? நிச்சயம். கெஃபிர் என்றால் என்ன, நம்முடைய உடல்நலனில் அதன் தாக்கம் என்ன? அது எப்படி உடலின் பாதிப்புகளைக் களைந்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்பதை, நாம் இனி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல பாக்டீரியாக்கள்

நல்ல பாக்டீரியாக்கள்

நம் உடலில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பது நமக்குத்தெரியும், அதில் பெருமளவு இருப்பது என்ன தெரியுமா? உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள். ஆமாம். பாக்டீரியா வகைகளில், உடலுக்கு நன்மைதரும் பாக்டீரியாக்கள் நம் உடலில் பரவலாக நிறைந்திருக்கின்றன.

இந்த பாக்டீரியாக்கள் எங்கிருந்து நமக்கு வருகிறது என அறிவீர்களா? நாம் மழலைப் பருவத்தில் தாயிடமிருந்து பருகிய தாய்ப்பால் மூலமே, இந்த பாக்டீரியாக்கள், உடலில் சேர்ந்து, உடலின் இரண்டாவது ஆற்றல் மையமான, பெருங்குடலில் பரவியிருக்கின்றன. இவைதான். உணவு செரிமானம், உடலின் ஆற்றல் மற்றும் வியாதிகளில் இருந்து காத்தல் போன்ற செயல்களுக்குக் காரணமாகின்றன என்றால், எல்லோருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

உடலில் குறைவது எப்படி?

உடலில் குறைவது எப்படி?

இத்தகைய ஆற்றல்மிக்க நன்மைதரும் பாக்டீரியாக்கள் உடலில் இருந்து குறைவதற்குக் காரணம், ஜுரம் மற்றும் தொற்று வியாதிகள் வரும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் ஆண்டிபயாடிக் மேலைமருந்துகள்.

இவை, தொற்றுக்கிருமிகளை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. இதன்காரணமாக, பெருங்குடலில் உள்ள நன்மைதரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைவதால், உடலில் செரிமானக்கோளாறு, சுவாச பாதிப்புகள், இரத்த நச்சுக்கள் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உடலுக்கு நன்மை தரும் பாகடீரியாக்களை, மீண்டும் உடலுக்கு கொண்டு சேர்ப்பது எப்படி?

குழந்தைப்பருவத்தில், தாய்ப்பால்மூலம், குழந்தைகளுக்குக்கிடைத்த பல நன்மைகளில், நன்மைதரும் பாக்டீரியாவும் ஒன்று. நடுத்தர வயதில் நன்மைதரும் பாக்டீரியாக்கள் இன்றி அவதிப்படுபவர்களுக்கு, மீண்டும் உடலில் அவற்றை கொண்டுசேர்க்க, தற்காலத்தில், இயற்கைவழியில் ஒரு வரப்பிரசாதமாக, கெஃபிர் இருக்கிறது.

இழந்த நன்மைதரும் பாக்டீரியாவை திரும்ப அடைந்து, உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை விலக்கும் ஒரு அற்புதமாக, கெஃபிர் விளங்குகிறது.

கெஃபீர் செய்வது எப்படி?

கெஃபீர் செய்வது எப்படி?

கெஃபிர் - நொதித்தலின் மறுபெயர். பால் தயிராவதுபோலத்தான், வெரி சிம்பிள்.

கெஃபிர் என்ற பெயரைக் கேட்டவுடன், எதோ புரியாத வார்த்தை என்று, நம்மில் பலரும் குழம்பியிருப்போம், ஆயினும் அதன்தன்மை மற்றும் செயல்முறை பற்றி அறிந்தால், கலைவாணர்.என்.எஸ்.கிருஷ்ணனிடம், டி.ஏ.மதுரம் சொன்னதுபோல, ப்பூ! இதானா! அதான், எனக்குத்தெரியுமே! என்பீர்கள்.

பாலில் மோரை சிறிது ஊற்றி இரவில் உரை ஊற்றுவதுபோல, பாலில் கெஃபிர் தானியங்களை சேர்த்து, உரை ஊற்றுவதே கெஃபிர். தயிர், பாலாடைக்கட்டி போன்ற வாசனையில் இருக்கும் கெஃபிர், உடலில் இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது. இன்னும் விளக்கமாக சொன்னால், பாலுக்கு பதில், எதிலும் கெஃபிர் செய்யலாம் என்பதே இதன் சிறப்பு.

இளநீரிலும் கெஃபிர் செய்யலாம். அதைத்தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம். அதற்குமுன், கெஃபிர் தானியங்கள் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கெஃபிர் தானியங்கள்

கெஃபிர் தானியங்கள்

வீடுகளில் தினமும் உரை ஊற்ற, காய்ச்சிய பாலில், சிறிதுமோர் கலந்தாலே, காலையில் தயிராகிவிடும். ஆனால், கெஃபிர் செய்ய, மோர்போல, பாலில் கலக்க கெஃபிர் கிரைன்ஸ் எனும் கெஃபிர் தானியங்களை நாம் வாங்கிவைத்துக்கொள்ளவேண்டும்.

கெஃபிர் தானியங்கள் என்பது, கெஃபிரை உருவாக்க உள்ள மூலப்பொருள், அது தானியமல்ல, திரிந்த பாலாடை போல உள்ள பாலின் மூலப்பொருள்தான். அதில் நன்மைதரும் பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் மிகுந்துள்ளன.

கெஃபிர் கிரைன்ஸ் எனும் அவை, காலிஃபிளவர் போன்று வெண்ணிறத்தில் இருக்கும். இரஷ்ய காகசஸ் மலைத்தொடர்ப் பகுதியில் முதலில் பயன்பாட்டில் இருந்தது, கெஃபிர், அதன்பின் இன்று உலகெங்கும் பரவியிருக்கிறது. கெஃபிர் கிரைன்ஸ், பாலில் சிறிது கலந்து, ஒருநாள் முழுதும் வைத்திருந்து, பின் வடிகட்டி தயிரை சாப்பிடலாம். வடிகட்டுதலில் சேர்ந்த கெஃபிர் கிரைனைக் கொண்டு மீண்டும் பாலில் கலந்து கெஃபிர் உருவாக்கலாம்.

இதுபோல, பலமுறை செய்வதன் விளைவாக, கெஃபிர் கிரைன் வளர ஆரம்பிக்கும். அதனை பத்திரப்படுத்தி, நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு அளிக்கலாம். கடைகளில் இந்த கெஃபிர் கிரைன்ஸ் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது மேலும், அவை சுத்தமானவையா என்பதற்கு, உத்திரவாதமும் இல்லை.

கெஃபிர் நன்மைகள்

கெஃபிர் நன்மைகள்

நாம் பொதுவாக சாப்பிடும் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும், எண்ணிக்கை குறைவால், அவை சிறுகுடலைத் தாண்டி பெருங்குடலுக்கு செல்ல,வாய்ப்பில்லை.

ஒரு கப் கெஃபிரிலுள்ள நன்மைதரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை, ஐந்து டிரில்லியன் என்ற மூச்சடைக்கவைக்கும் அளவில், இருக்கிறது. இதன்காரணமாக, எந்தத் தடையையும் தாண்டி, அவை, சிறுஅளவிலாவது, பெருங்குடலுக்கு சென்று விடும். சிறுஅளவில் சென்றாலே, பிறகு பல்கிப் பெருகி, குடலை முழுவீச்சில் இயங்க வைத்து, செரிமானபாதிப்பு, குடல் வியாதிகள் போன்றவற்றைத் தடுத்து, உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை, அதிகரிக்கும்.

கண் பார்வைத்திறனை அதிகரிக்கும், உடலின் தற்காப்பு மண்டலத்தை வலுவாக்குவதன் மூலம், கேன்சர் செல்களின் பாதிப்புகளைத் தடுக்கும்.

மாதவிலக்குக்கு முன் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளான, மனநிலை மாற்றம், முகப்பரு, எரிச்சல், வீக்கம், உடற்சோர்வு போன்ற பாதிப்புகளுக்கு, நிவாரணமளிக்கும். உடலின் நீர்ச்சத்தை, அதிகரிக்கும். செரிமானத்தை அதிகரித்து, பசியைத் தூண்டும்.

இயற்கையான சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற இயற்கை தாதுக்கள் நிரம்பியதாகும். நடுத்தர வயதுடையோருக்கு ஏற்ற சத்துபானம்.

உடலின் ஆற்றலை மேம்படுத்தி, நச்சுக்களை விலக்கி, இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. லாக்டோஸ் எனும் பாலின் வேதி அலர்ஜி உள்ளவர்கள்கூட, கெஃபிர் சாப்பிடலாம்.

இளநீர் கெஃபிர் செய்முறை.

இளநீர் கெஃபிர் செய்முறை.

இளநீறை ஒருஜாரில் எடுத்துக்கொண்டு, அதில் இலவங்கப்பட்டையை போட்டு, இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் கெஃபிர் கிரைன்களை அதிலிட்டு, ஜாரின் வாயை இலேசாக துணியால் சுற்றி, ஒருநாள் முழுதும் வைத்திருக்கவும்.

இளநீர், கெஃபிராக மாறுவதை, நாம் நீரின் நிறம், இளம் பழுப்பு நிறமாக மாறுவதைக் கொண்டு அறியலாம். மேலும், நன்கு புளித்த நிலையில், கெஃபிர் கிரைன்கள், நீரின் மேற்புறம் வந்துவிடும். நாம் இந்த கெஃபிர் கிரைன்களை செகரித்துவைத்துக்கொண்டு, மறுமுறை, கெஃபிர் தயாரிப்பில் பயன்படுத்தலாம். இதுபோல, எத்தனை முறை வேண்டுமானாலும், பயன்படுத்தலாம்.

ஆரோக்கியம் பெருகும்

ஆரோக்கியம் பெருகும்

இப்போது, இளநீரைப் பருக, புதுவித சுவையுடன், உடலுக்கு அளவுகடந்த நன்மைகள் தரும் ஆற்றல் நிரம்பியிருக்கும். வாரமிருமுறை, பருகிவர, உடலில் பலகாலம் இருந்த பாதிப்புகள், செரிமான கோளாறுகள், மாதவிலக்கு பாதிப்புகள் போன்றவை மறைவதைக் காணமுடியும்.

இளநீர் கெஃபிரில், வைட்டமின் A, C, E, K, B6 வகைகளும், தாதுக்கள், எலெக்ட்ரோலைட்கள், பீட்டா கரோடின், ஃபாலேட்கள், தையாமின், நியாசின், ரிபோஃபுளோவின் மற்றும் வேதிஅமிலங்கள் நிறைந்துள்ளன.

லாக்டோஸ் இல்லாததால், பால் பொருட்களில் ஒவ்வாமை உள்ளவர்கள்கூட, ஊட்டச்சத்துமிக்க கெஃபிரை, தைரியமாகக்குடிக்கலாம். இதன்மூலம்,. உடலில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் பல மடங்கு பெருகி, உடல்நலம் வலுவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    amazing health benefits of coconut water kefir

    appears to cleanse the liver. In Chinese medicine the liver rules the skin, eyes, and joints. Coconut water kefir eases aches and joint pains
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more