ஒரு நாளைக்கு எவ்வளவு லெமன் ஜூஸ் குடிக்கலாம்?... அதுக்கு மேல குடிச்சா இந்த பிரச்னை வரும்...

Posted By: Kripa Saravanan
Subscribe to Boldsky

எலுமிச்சை பழம் மனித உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைச் செய்யும் ஒரு பழம். இது சமயலறையில் சுவை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமான ஒன்று. ஆனால் பல நன்மைகளைக் கொண்டிருக்கும் எலுமிச்சை பழத்தில் பக்க விளைவுகளும் உண்டு.

health

இதுவரையிலும் எல்லா பிரச்னைகளுக்கும் எலுமிச்சை நல்லது என்றதானே கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது அதனால் பிரச்னை உண்டாகும் என்று சொல்வதை உங்களால் நம்ப முடியவில்லைதானே! இதைப் படியுங்கள். பிறகு நம்பித்தான் ஆகவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சையின் பக்க விளைவுகள்

எலுமிச்சையின் பக்க விளைவுகள்

பல் எனாமல் கெட்டு போவது,

வாய் புண் மேலும் மோசமாவது,

நெஞ்செரிச்சல் மற்றும் அல்சரை அதிகப்படுத்துவது,

குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்குவது,

அடிக்கடி சிறுநீர் கழிப்பது,

இரத்தத்தில் அதிக இரும்பு சத்து இருப்பது,

ஒற்றைத்தலைவலி ஏற்படுவது,

வேனிற் கட்டி ஏற்படுவது,

ஆகியவற்றை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி இங்கே விரிவாக்க காணலாம்.

பல் எனாமல் கெட்டு போவது

பல் எனாமல் கெட்டு போவது

இந்த பிரச்சனை பெரும்பாலும் பரவலாகப் பார்க்கப்படுவது. இதில் சிறிதளவு உண்மையும் உள்ளது. எலுமிச்சை சாறு பருகுவதால் பற்கள் அழுகும் வாய்ப்பு உள்ளது என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை சாறு பல நன்மைகளைக் கொண்டது. ஆனால், வெண்மையான பற்கள் உள்ளவர்கள் அதிகமான எலுமிச்சை சாறை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் பற்கள் அழுகும் நிலை உண்டாகிறது.

உணவில் அதிகமான எலுமிச்சை பழச்சாறு எடுத்துக் கொள்வது உங்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பல் மற்றும் பிராணியியல் ஆராய்ச்சி தேசிய நிறுவனம் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு கூறுகிறது. எலுமிச்சை அமிலத்தன்மை வாய்ந்த ஒரு பொருள். அதிகமான எலுமிச்சை பயன்பாட்டால் உங்கள் பற்கள் அழுகலாம்.

பிரேசிலின் மற்றொரு ஆய்வும் இதனை நிரூபித்திருக்கிறது. உண்மையில், எலுமிச்சை சாறு மென்மையான குளிர் பானங்கள் போலவே பற்கள் மீது அரிக்கும் விளைவுகளை உண்டாக்குகின்றது. சிலருக்கு காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு பருகும் பழக்கம் இருக்கும். அப்படி செய்பவர்கள் இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம். பழச்சாறு அருந்திவிட்டு உடனடியாக பல் துலக்கி விடலாம். மேலும் ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்குவதால் இந்த பாதிப்பு குறைக்கப்படுகிறது.

வாய்ப்புண்

வாய்ப்புண்

வாய்ப்புண் என்பது வாய்ப் பகுதியின் உள்ளே அல்லது ஈறுகளில் உண்டாகும் புண் ஆகும். இது மிகவும் வலி நிறைந்தது. இதில் எலுமிச்சையை பயன்படுத்துவது, இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இந்த புண்ணை மேலும் அதிகப்படுத்தி வலியை அதிகரிக்கும். ஆகவே வாய்ப் புண் உள்ளவர்கள் எலுமிச்சை அல்லது சிட்ரிக் அமிலம் உள்ள பொருட்களைத் தவிர்க்கலாம். வாய்ப்புண் முற்றிலும் ஆறியவுடன் இவற்றைப் பயன்படுத்தலாம்.

நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர்

நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர்

பெப்சின் என்ற என்சைம் வயிற்றில் புரதங்களை உடைக்க பயன்படுகிறது. இந்த நொதியை ஊக்குவித்து நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும் வேலையை எலுமிச்சை செய்வதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. வயிற்றில் செரிமான சாறுகளின் மறு சுழற்சி, உணவுக்குழாய் மற்றும் தொண்டையில் செயலிழந்து உள்ள பெப்சின் கூறுகளை ஊக்குவித்து நெஞ்செரிச்சலை உண்டாக்குகிறது.

எலுமிச்சை, நெஞ்செரிச்சலை உண்டாக்கவும் செய்யலாம் , அதே சமயம் அதனைப் போக்கவும் செய்யலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆகவே இதன் முடிவுகள் கலவையாக உள்ளன. ஆனால் பெரும்பாலும் முடிவுகள் எலுமிச்சை நெஞ்செரிச்சலை உண்டாக்கும் என்றே கூறுகின்றன. உணவுக்குழாயில் உள்ள சுருங்கு தசையின் தன்மையை எலுமிச்சை குறைத்து, வயிற்றில் உள்ள அமிலத்தை தெறிக்க வைப்பதால் இந்த நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

அமிலத்தன்மை

அமிலத்தன்மை

அதிகப்படியான அமிலத்தன்மை கொண்ட செரிமான சாறுகள் மூலமாக அல்சர் உருவாகின்றது. பெப்டிக் அல்சர் என்று சொல்லக்கூடிய குடற்புண் அல்லது வாய்ப்புண் , எலுமிச்சை பயன்பாட்டால் மேலும் மோசமடைகிறது. எலுமிச்சை சாறு அல்லது அமிலத் தன்மைக் கொண்ட வேறு சாறுகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது. எலுமிச்சை சாறு, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) என்ற நோயை ஊக்குவிப்பதாக சில ஆய்வுகள் கூறுகிறது. இதற்கான குறைந்த பட்ச தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆகவே இத்தகைய கோளாறு உங்களுக்கு இருந்தால் , நீங்கள் எலுமிச்சையை விட்டு ஒதுங்கி இருப்பது நலம்.

குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தி

எலுமிச்சை, வைட்டமின் சியின் ஆதாரமாக விளங்குகிறது. இந்த சத்து அதிகமாக இருந்தால், சில நேரங்களில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். இரண்டு எலுமிச்சைக்கு மேல் அல்லது மூன்று கிளாஸ் எலுமிச்சை சாறுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால், வைட்டமின் சி தேவைக்கு அதிகமாகிறது. இதனால் எந்த ஒரு அபாயகரமான பாதிப்பும் உடலுக்கு ஏற்படாது. ஆனால் அதிகரித்த வைட்டமின் சியை , உடல் வாந்தி மூலமாக வெளியேற்றும். அதிகமான எலுமிச்சை சாறு, குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்குகின்றது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவதால் சிறுநீர் பிரிப்பு உண்டாகிறது. இந்த சாறு, சிறுநீர் வெளியேறுவதை அதிகப்படுத்துகிறது. அதிகமான அளவு எலுமிச்சை சாறு பருகுவதால் , அடிக்கடி சிறுநீர் வெளியேறி, நீர்சத்து குறைபாடும் ஏற்படலாம். எலுமிச்சையில் உள்ள சாறு, உங்கள் உடலின் அதிகரித்த நீரை வெளியேற்றுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த செயல்பாட்டில், இது சிறுநீரில் இருந்து எலக்ட்ரோலைட்கள் மற்றும் சோடியம் போன்றவற்றை அதிக அளவில் வெளியேற்றும் - மற்றும் சில நேரங்களில், அவை மேலும் அதிக அளவில் வெளியேறுவதால் நீரிழப்பு ஏற்படலாம்.

அதிகரித்த எலுமிச்சை சாறு பயன்பாடு, பொட்டசியம் குறைபாட்டை தோற்றுவிக்கிறது. எலுமிச்சை போன்ற அமில பழங்களால் கூட சிறுநீர்ப்பை எரிச்சலடையலாம். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உண்டாகலாம். இத்தகைய அறிகுறிகள் இருக்கும்போது, ஒரு வாரம் எலுமிச்சை அல்லது மற்ற அமிலப் பழங்களின் பயன்பாட்டை குறைத்து,சோதனை செய்து பாருங்கள். உங்கள் பிரச்சனையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

இரும்புச்சத்து அளவு

இரும்புச்சத்து அளவு

வைட்டமின் சி உடலில் இரும்பு உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது என்று நமக்குத் தெரியும். இது, இரத்தத்தில் இரும்பின் அளவு அதிகரிக்க வழி வகுக்கும். உடலின் இரும்பின் அளவு அதிகரித்து காணப்படுவது ஆபத்தாகும். அதிகரித்த இரும்பு சத்து, உடல் உள்ளுறுப்புகளை சேதப்படுத்தும்.

ஒற்றைத்தலைவலி

ஒற்றைத்தலைவலி

குறைந்த ஆராய்ச்சி இருப்பினும், சில நிபுணர்கள் சிட்ரஸ் பழங்கள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம் என்று நம்புகிறார்கள். உண்மையில், டெலவேர் பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட் மேற்கொண்ட ஆய்வில் ஒற்றைத் தலைவலியால் பாதிகக்ப்பட்டவர்கள் அடிக்கடி எலுமிச்சை சாறை குடிப்பது தெரியவந்துள்ளது.

வேனல் கட்டிகள்

வேனல் கட்டிகள்

எலுமிச்சை சாறு தடவிய பின், நீங்கள் வெயிலில் வெளியே சென்றால், கொப்பளங்கள் மற்றும் கரும்புள்ளிகள் உருவாகும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. பைட்டோபோடோடெர்மாடிடிஸ் என்று அழைக்கப்படுவது, இந்த வேனிற் கட்டியின் ஒரு மோசமான வடிவமாகும். எலுமிச்சை சாறில் உள்ள சொரலேன் என்னும் இரசாயனம், சூரிய ஒளியுடன் தொடர்பு கொள்வதால், இந்த நோய் உருவாகிறது. பிரவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து மற்றொரு அறிக்கை, எலுமிச்சை சாறு மற்றும் பிற சிட்ரஸ் சாறுகளை அதிகமாக உட்கொண்ட நபர்கள் கருங்கட்டி அல்லது தோல் புற்றுநோயை உருவாக்கும் சற்று அதிக அபாயத்தைக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறது.

எலுமிச்சையும் மருந்துகளும்

எலுமிச்சையும் மருந்துகளும்

எலுமிச்சை எந்த மருந்துகளிலும் கடுமையாக தொடர்பு கொள்ளாத போதிலும், சில ஆய்வுகள் கால்சியம் எதிரினிகளுடன் (கால்சியம் சேனல்கள் மூலம் கால்சியம் இயக்கத்தை சீர்குலைக்கும் மருந்துகள், உயர் இரத்த அழுத்தம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன) தொடர்பு கொள்வதாகக் கூறுகின்றன.

மருந்துகள் பயன்படுத்தும் நோயாளிகள் எந்த ஒரு சிட்ரஸ் சாறுகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று ஜப்பானிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அப்படி சிட்ரஸ் சாறு உட்கொள்வதால் பல உடல் உபாதைகள் சாத்தியப்படலாம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

எவ்வளவு குடிக்கலாம்?

எவ்வளவு குடிக்கலாம்?

ஒரு நாளைக்கு 120 மி லி அளவு அல்லது 5.9 கிராம் அளவு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது. எலுமிச்சை சாறில் தண்ணீர் சேர்த்து மட்டுமே பருக வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோருக்கும் மேலே குறிப்பிட்ட அளவு பொருந்தும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் எலுமிச்சை சாற்றை எடுத்துக் கொள்வதால் மேலே கூறிய பலன்களை அனுபவிக்க நேரலாம்.

தீர்வு

தீர்வு

எந்த ஒரு பொருளையும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுத்துக் கொள்வதால் எதிர்மறை விளைவுகள் நிச்சயம் உண்டு. ஆகவே சரியான அளவு உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Serious Side Effects Of Lemons

Lemons could be replete with all the great stuff you can think of. And they might prevent most ailments one can imagine. But lemons do have side effects.
Story first published: Wednesday, April 11, 2018, 13:20 [IST]