For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலம் வந்துட்டா ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா? இன்னைக்கே சாப்பிட ஆரம்பிங்க...

Winter. குளிர்காலம் வந்துவிட்டால் நாம் ஏன் கட்டாயமாக பட்டாணியை சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கு விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

|

காய்கறிகள் என்றாலே நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடியது. அதிலும் பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது.

Reasons Why You Must Eat Green Peas This Winter

இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டாணி

பட்டாணி

இது பார்ப்பதற்கு வடிவில் சிறியதாக இருந்தாலும் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இது பருப்பு வகையை சார்ந்தது. இந்த பச்சை பட்டாணியை பாடம் பண்ணி உலர வைத்தோ அல்லது ப்ரஷ்ஷாகக் கூட வழங்குகின்றனர். மேலும் இதில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

MOST READ: ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்? அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்?

பசியை தீர்க்கும்

பசியை தீர்க்கும்

இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நமக்கு வயிறு நிறைந்த திருப்தியை கொடுக்கிறது. பசி மற்றும் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. சீரணத்தை மெதுவாக்கி பசியை போக்குகிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இது இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதன் நார்ச்சத்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

சீரண சக்திக்கு உதவுதல்

சீரண சக்திக்கு உதவுதல்

பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.

MOST READ: உங்க கண் எதாவது இப்படி இருக்கா?... உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

ரத்த சர்க்கரை

ரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தல் இதனுடைய முக்கியப் பண்பாக இருக்கிறது. பச்சை பட்டாணி குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் கொண்டு இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதிலுள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் இதே வேலையை செய்கிறது. இதன் நார்ச்சத்துகள் உணவிலுள்ள கார்போஹைட்ரேட் உறிஞ்சுவதை குறைத்து இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை சேராமல் இருக்க உதவுகிறது.

MOST READ: தோள்பட்டையில வலி பின்னி எடுக்குதா? இந்த பயிற்சிய ஐஞ்சு நிமிஷம் மட்டும் பண்ணுங்க போதும்...

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது என்பது கண்டிப்பாக நீரிழிவு நோயாளிக்கு உதவக் கூடிய ஒன்றாகும். இதிலுள்ள விட்டமின் ஏ, கே மற்றும் சி போன்றவை டயாபெட்டீஸ்யை குறைக்கிறது. மேலும் இந்த பச்சை பட்டாணியில் பைடிக் அமிலம் மற்றும் லெக்டின்ஸ் போன்றவைகள் உள்ளன. லெக்டின்ஸ் நிறைய நன்மைகள் தந்தாலும் வாயு மற்றும் வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே இதை வெவ்வேறு விதமாக சமைத்து உங்கள் உடல் நல நன்மைகளை பெறவதோடு சேர்த்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Reasons Why You Must Eat Green Peas This Winter

here we are talking about the Reasons Why You Must Eat Green Peas This Winter.
Story first published: Friday, December 14, 2018, 10:30 [IST]
Desktop Bottom Promotion