For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண் செக்ஸ் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

பல நாட்களாக ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸ், மனநிலையில் ஏற்ற இறக்கம், விதைப்பையில் சுருக்கம் அல்லது தொற்றுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

|

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன். இது ஆண்களின் உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. அதில் அவர்களின் விந்தணு உற்பத்தி, தசை அடர்த்தி மற்றும் வலிமை, எலும்புகளின் அடர்த்தி, கொழுப்பு பரிமாற்றம் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை. எப்போது ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறதோ, அப்போது அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவால் கருத்தரிக்க உதவ முடியாமல் போகும்.

20 Foods that Can Boost Testosterone Levels Naturally

பொதுவாக ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு ஒரு ஆணின் உடலில் குறைவாக இருந்தால், அவர்களால் பாலியல் உறவில் சிறப்பாக ஈடுபட முடியாமல் போகும். அதாவது விறைப்புத்தன்மை பிரச்சனை, விந்தணு குறைபாடு, மார்பக திசுக்கள் வீங்கி காணப்படும். சில நேரங்களில் இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து உடல் முடி உதிர்வது, தசைகளின் அளவு குறைவது, வலிமை இழந்திருப்பது, உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரிக்கும்.

MOST READ: ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா?

பல நாட்களாக ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸ், மனநிலையில் ஏற்ற இறக்கம், விதைப்பையில் சுருக்கம் அல்லது தொற்றுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு ஆணுக்கு 40 வயதிற்கு மேல் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பது சாதாரணம். ஆனால் இளம் வயதிலேயே இந்த குறைபாடு ஏற்பட்டால், அதை மருந்து மாத்திரைகளின் மூலம் சரிசெய்வதற்கு பதிலாக, உணவுகளின் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம்.

இக்கட்டுரையில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உணவுப் பொருட்களைப் படித்து தெரிந்து, அவற்றை அன்றாட உணவில் சேர்த்து பலன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகள்

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு கார்போஹைட்ரேட் மிகவும் முக்கியமானது. இத்தகைய கார்போஹைட்ரேட் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றில் அதிகளவில் உள்ளது. அதிலும் உருளைக்கிழங்கில் க்ளுட்டன் இல்லை, மாறாக கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளதால், இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

மெகடாமியா நட்ஸ்

மெகடாமியா நட்ஸ்

டயட்டரி கொழுப்புக்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு அவசியமானது. இத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் உள்ளது. அதற்காக அனைத்து நட்ஸ்களிலுமே இந்த கொழுப்பு உள்ளது என்று நினைக்க வேண்டாம். கொழுப்புக்களில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தான் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவும்.

ஆனால் பெரும்பாலான நட்ஸ்களில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் தான் உள்ளது. இவை டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கும். ஆனால் 100 கிராம் மெகடாமியா நட்ஸ்களில் 60 கிராம் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

காபி

காபி

காபியில் உள்ள காப்ஃபைன் நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டு, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகளவில் நிறைந்துள்ளதால், காபியைக் குடிக்க தவிர்க்க வேண்டாம். நினைக்கும் போதெல்லாம் ஒரு கப் காபியை குடியுங்கள்.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மெகடாமியா நட்ஸை விட அதிகம் இல்லாவிட்டாலும், 100 கிராமில் 25 கிராம் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அதோடு, இதில் செலினியம் அதிகம் உள்ளது. இந்த செலினியமானது க்ளுட்டாதியோனைனை தூண்டும் பண்புகளைக் கொண்டது. இதனால் நேரடியாக டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகரிக்கும். எனவே தினமும் ஒரு கையளவு பிரேசில் நட்ஸ் சாப்பிடுங்கள்.

விர்ஜின் ஆலிவ் ஆயில்

விர்ஜின் ஆலிவ் ஆயில்

ஆண்கள் தங்களது சமையலில் விர்ஜின் ஆலிவ் ஆயிலை சேர்த்க் கொள்வதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். ஆகவே தவறாமல் சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

உலர் திராட்சை

உலர் திராட்சை

உலர் திராட்சை டெஸ்ரோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இதற்கு அதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, ஈஸ்ட்ரோஜென் அளவைக் குறைக்கும்.

பார்ஸ்லி

பார்ஸ்லி

ஆண்கள் பார்ஸ்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம், அதில் உள்ள அத்தியாவசிய புரோட்டீன் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். வேண்டுமானால் பார்ஸ்லியின் உலர்ந்த இலைகளை சூப்பில் சேர்த்துக் குடித்து வாருங்கள்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் சக்தி வாய்ந்த ஆன்ரோஜெனிக் ஏஜென்ட் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை தூண்டும். எனவே விலைக் குறைவில் கிடைக்கும் இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள்.

கொக்கோ பொருட்கள்

கொக்கோ பொருட்கள்

கொக்கோ பொருட்களான டார்க் சாக்லேட்டை ஆண்கள் அடிக்கடி சாப்பிட்டு வநதால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மக்னீசியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் போன்றவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

முட்டை

முட்டை

முட்டை மிகச்சிறப்பான உணவுப் பொருள். இதற்கு அதில் உள்ள புரோட்டீன் மட்டுமின்றி, அமினோ அமிலங்களும் தான் காரணம். அதுவும் இந்த அமினோ அமிலங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். குறிப்பாக இதன் மஞ்சள் கருவில் தான் இந்த அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, அதன் அளவைக் குறைக்கும் கொழுப்பு அமிலங்களும் உள்ளது. அதோடு இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானவையாகும்.

பட்டன் காளான்

பட்டன் காளான்

பட்டன் காளானில் பாலிசாக்கரைடுகள் ஏராளமாக உள்ளது. பல ஆய்வுகளில் இந்த பாலிசாக்கரைடுகள் டெஸ்டோஸ்டிரோனை ஈஸ்ட்ரோஜெனாக மாற்றுவதைத் தடுப்பதாக கூறுகின்றன. எனவே டெஸ்டோஸ்டிரோன் அளவு சிறப்பாக இருக்க, பட்டன் காளானை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

தயிர்

தயிர்

தயிரில் உள்ள ப்ரீபயோடிக்ஸ், புரோபயோடிக்ஸ், நொதிகள் மற்றும் இதர நல்ல பாக்டீரியாக்கள், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஆண்கள் அன்றாட உணவில் தயிரை சேர்த்து கொள்வது, ஆண் செக்ஸ் ஹார்மோனின் அளவு குறையாமல் தடுக்கும்.

கொத்துக்கறி

கொத்துக்கறி

கொத்துக்கறியில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்ரோடிரோன் அளவை அதிகரிக்க உதவும் நல்ல கொழுப்புக்கள் மட்டுமின்றி, புரோட்டீன்களும் நிறைந்துள்ளது. எனவே டெஸ்ரோஸ்டிரோன் குறைபாட்டைத் தவிர்க்க கொத்துக்கறியை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாதுளை

மாதுளை

2 வாரம் தொடர்ந்து மாதுளை ஜூஸை குடித்து வந்ததில், இரத்த அழுத்த பிரச்சனை குறைந்திருப்பதோடு, டெஸ்டோஸ்டிரோன் அளவும் அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இந்த சுவையான மாதுளை ஜூஸை தினமும் குடிக்க மறக்காதீர்கள் ஆண்களே!

ப்ளூ சீஸ்

ப்ளூ சீஸ்

தயிரைப் போன்றே ப்ளு சீஸிலும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் நல்ல பாக்டீரியாக்கள், நொதிகள் நிறைந்துள்ளது. அதோடு இதில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே உணவின் மீது இதை தூவி உட்கொள்ள மறவாதீர்கள்.

ப்ளுபெர்ரி, ப்ளாக்பெர்ரி

ப்ளுபெர்ரி, ப்ளாக்பெர்ரி

இந்த பெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவாக உள்ளது. இந்த பழங்களை அதிகம் சாப்பிட்டு வரும் ஆண்களின் உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் எதையும் சந்திக்க வேண்டியிருக்காது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

ஆண்கள் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து வந்தால், அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, விந்தணுக்களின் அளவை அதிகரிக்கும். மேலும் தேங்காய் எண்ணெய் இதயத்திற்கும் மிகவும் நல்லது.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இதை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வருவதன் மூலம், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகரித்து, பாலியல் வாழ்க்கை சிறக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டுகளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். எனவே உறவில் சிறப்பாக ஈடுபட வேண்டுமானால், பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Foods that Can Boost Testosterone Levels Naturally

Here we listed some of the foods that can boost testosterone levels naturally. Read on to know more....
Desktop Bottom Promotion