For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மலையாளிகள் ஏன் தினமும் கப்பக்கிழங்கு சாப்பிடறாங்கன்ற ரகசியம் தெரியுமா?...

  |

  மரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஒரு உணவுப் பொருள். சருமத்தை மிருதுவாக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், எடை குறைப்பிலும் , சீரான செரிமானத்திலும், தலைவலியைப் போக்கவும், வயிற்றுப்போக்கு சிகிச்சையிலும் மரவள்ளிக் கிழங்கு நல்ல பலன் தருகிறது.

  Cassava health benefits in tamil

  கண் ஆரோக்கியம், காய்ச்சலை குணப்படுத்துவது, காயங்களை ஆற்றுவது, பூச்சிகளை அகற்றுவது, கர்ப்பகாலத்தில் உதவுவது, நல்ல பசியைத் தூண்டுவது போன்றவை மரவள்ளிக் கிழங்கின் மற்ற நன்மைகள் ஆகும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மரவள்ளிக் கிழங்கு

  மரவள்ளிக் கிழங்கு

  பல உணவுப்பொருட்கள் உடலைத் தொற்று , ஜீரண பிரச்சனை , இன்னும் பல வகையான நோய் போன்றவற்றிலிருந்து குணப்படுத்துகிறது, ஆனால் அந்த உணவுப்பொருட்களே தொடக்கத்தில் இத்தகைய பாதிப்புகள் உண்டாகக் காரணமாகவும் இருக்கலாம். அதாவது, ஒரு உணவுப் பொருள் சரியான பதத்தில் வேக வைக்காதபோது அது விஷமாக மாறுகிறது, அதனால் உடலுக்கு தீங்கு விளைகிறது. ஆனால், அதே உணவை சரியாக வேக வைத்து சமைப்பதால், வேறு எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு அவை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது

  குணங்கள்

  குணங்கள்

  இந்த பிரிவின் கீழ் மிகக் கச்சிதமாக பொருந்தும் ஒரு உணவுப் பொருள் மரவள்ளிக் கிழங்கு. மரவள்ளிக் கிழங்கு என்பது ஒரு வேர் காய்கறி ஆகும். இதன் சுவை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளுக்காக இது ஒரு புகழ் பெற்ற உணவுப்பொருளாக விளங்குகிறது. மரவள்ளிக் கிழங்கு மாவும் பல உணவுத் தயாரிப்புகளில் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதனை பதப்படுத்துவது என்பது மியாவும் கடினம். மரவள்ளிக் கிழங்கு பறித்தவுடன் வேக வைக்கப்பட வேண்டும். இல்லையேல் அது விரைவில் அழுகி விடும் வாய்ப்பு உண்டு. ஆகவே மரவள்ளிக் கிழங்கை வாங்கிய இரண்டு தினங்களுக்குள் அதனை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

  மரவள்ளிக் கிழங்கை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சருமத்திற்கு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த பதிவில் மரவள்ளிக் கிழங்கை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு கிடைக்கும் 13 நன்மைகளைப் பற்றிக் காணலாம்.

  MOST READ: இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?

  சருமம் மிருதுவாக

  சருமம் மிருதுவாக

  மரவள்ளிக் கிழங்கின் தோல் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு ஒரு அருமையான தீர்வாகிறது. உங்கள் சருமத்தில் உள்ள தழும்புகள் பற்றி இனி கவலைப்படாமல் இருக்க இது ஒரு சிறந்த தீர்வாகும். மரவள்ளிக் கிழங்கின் தோலை சீவி ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து அந்த இடத்தைக் கழுவுவதால் அதிகபட்ச பலனை அடையலாம். இதனை ஒரு ஸ்க்ரப் போல் பயன்படுத்துவதால் , முகத்தில் உள்ள அதிக எண்ணெய்யை வெளியேற்றுகிறது மற்றும் துளைகளை மூடுகிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சி அடைந்து , சருமத்திற்கு தேவையான பொலிவும் உண்டாகிறது.

  முடி வேகமாக வளர

  முடி வேகமாக வளர

  இந்த காலகட்டத்தில், வளி மண்டல நிலையாலும், நாம் எடுத்துக் கொள்ளும் குறைந்த அளவு ஊட்டச்சத்துகளாலும் , தலை முடி உதிர்ந்து இளம் வயதிலேயே வழுக்கை உண்டாகும் நிலை உள்ளது. இதனை போக்க ஒரு எளிமையான வழி மரவள்ளிக் கிழங்கு பேஸ்ட். இந்த பேஸ்டை தலையில் தடவி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விட்டு பிறகு தலையை அலசவும். தலையை அலசி முடித்த பின் உங்களால் ஒரு மிகச் சிறந்த மாற்றத்தை உணர முடியும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனை பின்பற்றவும். முடிவு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஒரு மாதம் இதனை தொடர்ந்து செய்வதால், உங்கள் முடி முன்பை விட விரைந்து வளருவதை உங்களால் பார்க்க முடியும்.

  முடி உதிர்வை தடுக்க

  முடி உதிர்வை தடுக்க

  பெண்களின் அழகுப் பிரச்சனைகளில் மிக முக்கியமானது முடி உதிர்வு. மோசமான சுற்றுசூழல் மற்றும் உணவு பழக்கம் காரணமாக இந்த பிரச்சனை உண்டாகலாம். முடி உதிர்வைப் போக்க பெண்கள் பல்வேறு தீர்வுகளை முயற்சித்தாலும் இவற்றில் மிகச் சில தீர்வுகளே நன்மை பயக்கும். அத்தகைய மிகச் சிறந்த தீர்வுகளில் ஒன்று மரவள்ளிக் கிழங்கு. இது முடியின் நுனியை புத்துணர்ச்சி அடையச் செய்து கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. இதனால் முடி உதிர்வு குறைகிறது.

  எடை குறைப்பு

  எடை குறைப்பு

  மரவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எடை குறைப்பிற்கு மிகவும் தேவையான ஒரு சத்து இந்த நார்ச்சத்து. தினமும் உங்கள் உணவில் மரவள்ளிக் கிழங்கை சேர்ப்பதால் உங்கள் எடை எளிதில் குறைகிறது. மரவள்ளிக் கிழங்கு உங்கள் வயிற்றை எளிதில் நிரப்பி பசியை குறைப்பதால் இந்த பலன் உண்டாகிறது.

  செரிமானம்

  செரிமானம்

  மேலே கூறிய அதே நார்ச்சத்தின் விளைவாக உங்கள் செரிமான மண்டலம் சீராக இயங்குகிறது. குடலில் இருந்து வெளிப்படும் எல்லா நச்சுகளையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது, மற்றும் அழற்சியைக் குறைக்க அனுமதிக்கிறது. இதனால் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், இரைப்பை பிரச்சனைகளில் இருந்து தள்ளியும் வைக்க உதவுகிறது.

  MOST READ: வெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..! செய்முறை உள்ளே...

  தலைவலி

  தலைவலி

  ஒற்றைத்தலைவலி மற்றும் தலைவலி ஒரு மனிதனின் உணர்சிகளை பல நேரங்களில் மூழ்கடிக்கும். அவை மிகவும் வலி நிறைந்தவை. இதற்கான சரியான சிகிச்சை எடுப்பதால் மட்டுமே இதனை குணப்படுத்த முடியும். சிகிச்சை எடுக்காமல் இருக்கும் வரை இவை எந்த நேரத்திலும் நம்மை விட்டுப் போகாது. இந்த பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வு மருத்துவ குணங்கள் கொண்ட மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் இலைகள். இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது கழுவி, அரைத்து சாறு எடுத்தும் பருகலாம். தினமும் இரண்டு வேளை மரவள்ளிக் கிழங்கு சாறு பருகுவதால் வருங்காலத்தில் தலைவலி வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

  வயிற்றுப்போக்கு

  வயிற்றுப்போக்கு

  மரவள்ளிக் கிழங்கின் மருத்துவ சிகிச்சை பயன்பாட்டை பார்க்கும்போது, இவற்றில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட் வயிற்றுப்போக்கை தடுக்க உதவுகிறது. மரவள்ளிக் கிழங்கை ஒரு மணி நேரம் தண்ணீரில் வேக வைத்து உண்பதால், வயிற்றில் படிந்த பாக்டீரியாக்கள் அழிந்து வயிறு சுத்தமாகிறது. இதனால் வயிற்றுப்போக்கு அறிகுறி குறைந்து உடல் செயல்பாடுகள் வழக்கமாகிறது.

  கண்கள்

  கண்கள்

  ஒரு மருத்துவ செடியாகவும், உணவுப் பொருளாகவும் விளங்கும் மரவள்ளிக்கிழங்கின் வேறுபாட்டை அறிந்து கொள்வது முக்கியம். மரவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், உடலுக்கு தினசரி தேவையான வைட்டமின் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. இதில் கண்பார்வை மேம்பட தேவையான ஊட்டச்சத்து வைடமின் ஏ. இந்த ஊட்டச்சத்து மரவள்ளிக் கிழங்கில் அதிகமாக உள்ளது.

  காய்ச்சல்

  காய்ச்சல்

  மரவள்ளிக் கிழங்கு காய்ச்சலை போக்க உதவுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு நன்மையாகும். காய்ச்சல் ஏற்படும் தருணங்களில் மரவள்ளிக் கிழங்கின் இலைகள் கொண்டு கொதிக்க வைத்த ஒரு கசாயம் பருகுவதால் காய்ச்சல் கட்டுப்படும். உங்கள் உடலின் சோர்வைப் போக்க உதவுகிறது. மற்றும் பக்டீரியா தாக்குதலால் உடலில் நீங்கள் உணரும் வலியைக் குறைக்க உதவுகிறது. மரவள்ளிக் கிழங்கு இலையை ஒரு மணி நேரம் கொதிக்க வைத்து பின் அதனையும் உண்ணலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

  காயங்களை குணப்படுத்த

  காயங்களை குணப்படுத்த

  இந்த இலைகள் கற்றாழை இலைகளைப் போல் காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது. புதிய இலை அல்லது காய்ந்த இலை, எதுவாக இருந்தாலும் மரவள்ளிக் கிழங்கு இலைகள் காயங்களில் மந்திரம் செய்கிறது. இந்த இலைகளில் உள்ள ஊடச்ச்சதுகள் தொற்றை தடுத்து, குணப்படுத்தும் செயல்பாட்டை வேகப்படுத்துகிறது. மரவள்ளிக் கிழங்கு இலையில் உள்ள பசையை பிழிந்து வெளியில் எடுத்து காயங்கள் மேல் தடவுவதால் பல வழிகளில் நிவாரணம் கிடைக்கிறது.

  MOST READ: நெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலா? கவலைய விடுங்க, இதப்படிங்க!

  வயிற்றுப் பூச்சி

  வயிற்றுப் பூச்சி

  குடல் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பூச்சிகள் உற்பத்தியாவதால் நேமடோட் தொற்று உண்டாகிறது. இந்த செயல்பாட்டைத் தடுக்க, ஆராய்ச்சியாளர்கள், சில நோயாளிகளுக்கு மரவள்ளிக் கிழங்கை சாப்பிடக் கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு, நோயாளிகளின் வயிற்றில் இருந்த புழுக்கள் காணாமல் போய்விட்டதாக அறிவித்தனர்.

  பசியை தூண்டுதல்

  பசியை தூண்டுதல்

  காலையில் எழுந்தவுடன் எதுவும் சாப்பிடத் தோன்றாது. காலையில் உண்டாகும் மனச்சோர்வு அல்லது பதட்டம் காரணமாகவும் காலை உணவை தவிர்க்க வேண்டிய சூழல் உண்டாகலாம். மரவள்ளிக் கிழங்கு அந்த சூழ்நிலையை மாற்ற உதவுகிறது. உங்கள் பசியின்மையை மீட்டுக்க உதவுகிறது. இதனால் ஊட்டச்சத்து இழப்பு பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம்.

  கர்ப்பிணிகள்

  கர்ப்பிணிகள்

  கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து போலேட். மற்றும் வைட்டமின் சி. மரவள்ளிக் கிழங்கில் இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் அதிகமாக உள்ளன. அதனால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் கிடைக்கின்றன. இதன் சுவை மிகவும் சாதுவாக இருந்தாலும் இதன் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  13 Surprising Health Benefits of Cassava

  Cassava health benefits includes smoothening skin, supporting hair growth, supporting weight loss, aiding digestion, overcoming headaches and treating diarrhea.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more