For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரட் சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க... அதுல இவ்ளோ பக்கவிளைவு இருக்கு...

|

கேரட் - பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது. கேரட் பொறியல், கேரட் அல்வா, கேரட் ஜூஸ் என்று பலவிதங்களில் கேரட்டை உணவில் சேர்க்கிறோம். பலர், 'கேரட்டா, அப்படியே சாப்பிடுவேனே!' ரகத்தை சேர்ந்தவர்கள். நாம் அன்றாடம் பார்க்கும் ஆரஞ்சு வண்ணம் தவிர, சிவப்பு கலந்த ஊதாவான பர்ப்பிள், சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணங்களிலும் கேரட் காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின்கள் ஏ, கே, சி மற்றும் மாங்கனீசு, பொட்டாசியம் ஆகிய கனிம சத்துகள் கேரட்டில் அதிக அளவு உள்ளன. ஒரு மனிதனுக்கு தேவையானதாக பரிந்துரைக்கப்படும் வைட்டமின் ஏ-யின் அளவு இரண்டு கேரட்களில் 300 விழுக்காடு உள்ளதாம். இது தவிர வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை குறைந்த அளவில் உள்ளன. ஒரு கப் கேரட் ஜூஸ் 80 கலோரி ஆற்றல் அடங்கியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது கேரட் ஜூஸ்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

கேரட்டிலுள்ள பீட்டா கேரோட்டின் நமது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. ஆனால், அதிகமாக கேரட் சாப்பிடுவது பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பார்களே, அதுபோன்று நல்ல சத்துகள் நிரம்பிய கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும்.

கேரட், அதிகமான சத்துகள் அடங்கியது. உணவில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. ஆனால், அதுவே தேவையான அளவை விட கூடும்போது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு வேண்டாம்

குழந்தைகளுக்கு வேண்டாம்

இரண்டு வயதுக்கு குறைவான இன்ஃபேண்ட் என்ற வயது பச்சிளங்குழந்தைகளுக்கு கேரட் பாதுகாப்பற்றது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு சிறிதளவே கேரட் கொடுக்கலாம்.

அலர்ஜி

அலர்ஜி

சிலருக்கு கேரட் ஒவ்வாமையை ஏற்படுத்தும். கேரட் ஒத்துக்கொள்ளாததால் தோல் அழற்சி, படை மற்றும் வீக்கம், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படக் கூடும். ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, நட்ஸ் என்னும் கொட்டை வகை உணவுகள், கடுகு ஆகியவற்றில் உள்ள ஒவ்வாமையை ஏற்படும். குணநலன்கள் கேரட்டிலும் உள்ளன. ஆகவே, முன்பு கூறப்பட்டவை ஒத்துக்கொள்ளாதவர்கள், கேரட் எடுத்துக்கொள்வதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள்

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள், கேரட் உணவினை தவிர்ப்பது நல்லது. சர்க்கரையின் அளவினை காட்டுவது கினைகமிக் குறியீடு. கேரட்டுக்கு இந்தக் குறியீடு 97. கேரட்டிலுள்ள சர்க்கரைப்பொருள் குளூக்கோஸாக மாற்றப்பட்டு உடலில் சர்க்கரையின் அளவினை விரைவாக அதிகமாக்கும். சர்க்கரை நோயாளிகள், கேரட்டை அவித்து சிறிதளவு உண்ணலாம்.

திடீரென நிறுத்தினால்...

திடீரென நிறுத்தினால்...

சிலர், கேரட் சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருப்பர். தினசரி குறிப்பிட்ட அளவு கேரட்டை சாப்பிட்டு வருபவர்கள், அதை உடனடியாக நிறுத்துவதும் சில பக்கவிளைவுகளை உருவாக்கும். மன எரிச்சல், தூக்கமின்மை, பதற்றம், புளித்த ஏப்பம் ஆகியவை, கேரட் உண்பதை திடீரென நிறுத்தினால் ஏற்படக்கூடும்.

பாலூட்டும் தாய்மார்

பாலூட்டும் தாய்மார்

கேரட்டில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துகள் உள்ளன.ஆனால், பாலூட்டும் தாய்மார், கேரட்டை அதிக அளவு எடுத்துக்கொள்வது, தாய்ப்பாலின் சுவையை மாற்றுகிறது என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆகவே, பாலூட்டும் தாய்மார், அதிக அளவில் கேரட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவேண்டும்.

ஹார்மோன்

ஹார்மோன்

கேரட், உடல்நலத்திற்குத் தேவையானது. ஆனால், சில உடல்நலக்குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கேரட் பாதிப்பை கொடுக்கும். நீரிழிவு என்னும் சர்க்கரைநோய், குடல் பிரச்னைகள், சர்க்கரை குறைவு பாதிப்பு மற்றும் ஹார்மோன் பிரச்னை உள்ளவர்கள், மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் கேரட்டை உண்ணக்கூடாது. இவ்வகை உடல்நலக்குறைபாடுகளின் பாதிப்பை தீவிரமாக்கும்.

வாய்வு தொல்லை

வாய்வு தொல்லை

பொதுவாக, கேரட்டில் 12 கிராம் கார்போஹைடிரேட்டும் 4 கிராம் நார்ச்சத்தும் இருக்கும். இவை இரண்டும் சிறுகுடலில் சரியாக செரிக்காவிட்டால், பெருங்குடலில் புளிப்புத்தன்மையை உருவாக்கும். அதனை தொடர்ந்து சிறுகுடலில் வாய்வு உருவாகி, வயிற்றுப் பிடிப்பு, வாய்வு பிடிப்பு, வீக்கம் போன்ற பிரச்னைகளை கொண்டு வரும்.

ஊட்டச்சத்துக்களை தடுக்கும்

ஊட்டச்சத்துக்களை தடுக்கும்

பொதுவாக நார்ச்சத்து, துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் போன்ற மற்ற சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்வதை தடுக்கும். கேரட்டினை அதிக அளவில் உண்பது, உடலுக்குத் தேவையான இந்தச் சத்துக்குறைவு ஏற்பட வழிவகுக்கும். உடலுக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரத சத்து இழப்பும் ஏற்படக்கூடும்.

பூச்சிக்கொல்லிகள்

பூச்சிக்கொல்லிகள்

கேரட்டில் 26 வகையான பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த 26 பூச்சிக்கொல்லிகளில் புற்றுநோயை உருவாக்கக் கூடியவை எட்டு ஆகும். ஹார்மோன் செயல்பாட்டை தடுக்கக்கூடியவை 16 ஆகும். 3 பூச்சிக்கொல்லிகள் நரம்பு கோளாறை ஏற்படுத்தக்கூடியவை. வளர்ச்சி பிரச்னையை ஏற்படுத்தக்கூடியவை 7. இந்த ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் உடலில் சேர்வதை தவிர்க்க நீங்கள் கேரட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

உங்களை பயமுறுத்துவதற்காக இந்த தகவல்கள் கொடுக்கப்படவில்லை. கேரட், உண்மையிலேயே முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கியது. ஆகவே, போதுமான அளவு கேரட்டை உண்ணுங்கள்; ஆரோக்கியத்தை பேணிக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Side Effects Of Carrots You Should Be Aware Of

red, purple, yellow and white carrots are also available. Carrots contain high levels of beta carotene, which gets converted into Vitamin A in the body. But, do you know about side effects of carrots?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more