அடிக்கடி பிரட் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்னாகும்?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

சாப்டாச்சா..?, வீட்லே லேட் ஆயிடுச்சு, வரும் வழியிலே ப்ரெட் ஆம்லேட் சாப்பிட்டு வந்தேன். அம்மா! டிபன் என்ன?! கேட்கும் குழந்தைகளுக்கு உடனே மன மகிழ்ச்சி தரும், தாய் கொண்டு வந்து வைக்கும் சூடான பிரெட் மசாலா.

இப்படி எத்தனையோ ஃபாஸ்ட்ஃபுட் ஐட்டங்கள் வீட்டிலேயே செய்ய வாய்ப்பாக, ப்ரெட் போன்ற உணவுகள் வந்துவிட்டது.

தங்கள் கைகளால் குழந்தைகளுக்கு சுவையான சிற்றுண்டிகள் செய்துகொடுப்பதில் மகிழும் தாய்மார்கள், அதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த சிற்றுண்டிகளில் சேர்க்கப்படும் பொருட்களைப் பற்றியும் அவை எதிலிருந்து தயாராகிறது.

அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது போன்ற தகவல்களையும் அறிய வேண்டிய அவசியம், தற்காலங்களில் ஏற்பட்டு விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில ஆண்டுகளுக்கு முன்னர் :

சில ஆண்டுகளுக்கு முன்னர் :

வீடுகளில் பாட்டிமார்கள் காலையில் சூடான பொங்கல் அதற்கு சுவையான தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் செய்துவிட்டு, குழந்தைகளை சாப்பிட வாருங்கள் என்று அழைக்கவே வேண்டாம்.

பொங்கலில் மிதக்கும் நெய்யின் வாசனையிலும் முந்திரிப்பருப்பின் மணத்திலும், ஏற்கெனவே, குழந்தைகள் சமையலறையைச் சுற்றி நின்றுகொண்டு, எப்படா, சாப்பிடக் கூப்பிடுவார்கள் என்று ஆர்வத்துடன் நின்று கொண்டுதான், இருப்பார்கள்.

பெற்றோரும் குழந்தைகளின் ஆர்வத்தை அறிந்து, அவர்களை அதிக நேரம் காக்க விடாமல், வாழை இலைகளில் சூடாகப் பரிமாறும்போது, சுவையான உணவு, அவர்கள் வாயில் மணமுடன் கரையும்.

ஆரோக்கிய உணவுகள்:

ஆரோக்கிய உணவுகள்:

இதுபோலத்தான், கார அடை, இடியாப்பம் மற்றும் ஆப்பம் போன்ற பலகாரங்கள் செய்யும் நேரங்களிலும், பிள்ளைகள் நாக்கில் எச்சிலூறும்.

அப்போதெல்லாம், செய்யும் உணவுகளில் என்ன சேர்க்கிறோம் என்று வீடுகளில் உள்ள அன்னையருக்கு நன்கு தெரியும், மேலும், கலப்படம் போன்ற பாதிப்புகள் அக்காலங்களில் வெகு அரிதே.

கொள்முதல் பொருட்கள் :

கொள்முதல் பொருட்கள் :

வீட்டிலே கடையும் வெண்ணைய், தங்கள் வயலில் விளைந்த அரிசி மற்றும் உளுந்து பயிறு போன்ற தானியங்கள், வருடம் ஒரு முறை சந்தைகளில் மொத்தமாக வாங்கும், புளி, மிளகு, கடுகு, மிளகாய் மல்லி மற்றும் இன்னபிற சமையல் பொருட்கள்.

காய்கறிகள் எல்லாம் தோட்டத்திலேயே விளையும், கறி வேப்பிலை, இஞ்சி மஞ்சள் போன்றவையும். எனவே, அவர்களை மீறி, அவர்களுக்கு தெரியாத ஒரு சமையல் பொருள், சமையலில் இடம்பெற்றதே இல்லை எனலாம்.

 இன்று அப்படியா?

இன்று அப்படியா?

டிவியில் வரும் விளம்பரங்கள்:உடனடி மிக்ஸ், தண்ணீர் விட்டு அப்படியே, கொட்டினால்.., ஒரு நிமிடத்தில், டிபன் ரெடி!

பாக்கெட்டை பிரித்து சூடு பண்ணி, முட்டையை மேலே வைத்தால் போதும்! முட்டை தானாகவே, ஆம்லேட் ஆகிவிடும் என்று விளம்பரங்கள் வராததுதான், பாக்கி!

தொடர்ந்து ஒளிபரப்பாகும் கவர்ச்சி விளம்பரங்கள்! படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதங்கள் இன்றி, எல்லோரும் கார்ப்பரேட் விளம்பர வலைகளில் சிக்கிக் கிடக்கிறார்கள், சிந்தித்து செயல்படும் ஆற்றலை இழந்து, விளம்பரங்களின் உண்மைத் தன்மைகளை ஆராயாமல், பெரிய கம்பெனி தயாரிப்பு நன்றாகத் தான் இருக்கும், என்ற சுய தீர்ப்பில், விட்டில்களாக விழுகிறார்கள்.

எங்கும் அவசரம், காலை உணவுக்கு நேரமில்லை, சமைப்பதற்கும், சாப்பிடுவதற்

விளைவு, என்னவாகும்?

விளைவு, என்னவாகும்?

புதுப்புது துரித உணவுகள்! அவற்றில், வீட்டில் அன்று பாட்டி சமைத்து பரிமாறிய பொங்கல், இடியாப்பம் போன்றவற்றின் சத்தான சுவை இருக்குமா?

உணவை பிள்ளைகளின் விருப்பம் அறிந்து, யாருக்கு எது பிடிக்கும் என்று அதைச் செய்யும் அன்னையின் அன்பு, அந்த இயந்திர உணவுகளில் இருக்குமா?

பாக்கெட் உணவுகளில் என்ன பொருள் இருக்கிறது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் கெமிக்கல்கள் என்னென்ன? எல்லோருக்கும் தெரியுமா??

பாக்கெட்களில் வரும் எந்த உணவும் இரசாயனக் கலப்பில்லாமல் வருவதில்லை, எதுவும் சேர்க்கவில்லை என்றால், அந்த உணவு கெட்டுப்போய், ஒரே நாளில் குப்பைக்குப் போய்விடும் என்று ஆய்வாளர்கள் சொல்லிதான் நாம் அறிந்துகொள்ள வேண்டுமா, என்ன?

பிரெட்களில் என்ன இருக்கிறது :

பிரெட்களில் என்ன இருக்கிறது :

ப்ரெட் ஜாம், ப்ரெட் ஆம்லேட், ப்ரெட் மசாலா போன்ற மிக விரைவான காலை சிற்றுண்டிகள் தயாரிப்பில் பயன்படும் ப்ரெட் என்பது, சிறிது மாவை ஈஸ்ட், சர்க்கரை, உப்பு மற்றும் கெமிக்கல் சேர்த்து, ஓவனில் வைத்து, மாவு உப்பிய பின் எடுக்கப்படும் ஒரு தின்பண்டம்.

அதிக உப்பு :

அதிக உப்பு :

இதில் சர்க்கரையுடன் அதிகமாக சேர்க்கப்படும் ஒரு பொருள் உப்பு, தினசரி தேவையின் அளவை விட, மிக அதிக அளவு உப்பு இதன் மூலம் உடலில் சேர்கிறது.

சேர்ந்த உப்பு இரத்தத்தில் கலந்து, உப்பின் அளவு கூடுகிறது. அளவு கூடும் உப்பு, அழையா விருந்தாளியாக இரத்த அழுத்தத்தையும் கொண்டு வருகிறது.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

சிறுவயது முதல் குழந்தைகளுக்கு பிரெட்டைப் பழக்கப்படுத்திய பின், அவர்களின் இளம் வயதில் உப்பின் தன்மை உடலில் அதிகரித்து, இரத்தத்தில் கலந்த உப்பின் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே, மிகக் கடுமையான இதய பாதிப்புகளும் ஏற்படக் காரணமாகி விடுகிறது.

இதய நோய்கள்:

இதய நோய்கள்:

இதுவே, மிகக் கடுமையான இதய பாதிப்புகளும் ஏற்படக் காரணமாகி விடுகிறது. உடலில் அதிகமாக சேர்ந்த உப்பினால்தானே. இதோடு கூட வீடுகளில் செய்யும் ப்ரெட் ஆம்லேட்களில் இன்னும் கொஞ்சம் உப்பைச் சேர்ப்பார்கள், ஏற்கெனவே ப்ரெட்டில் மிகையாக உள்ள உப்புடன் கூடுதல் உப்பும் கலந்து, உடலில் சேரும்போது, என்னவாகும்?

 எல்லா பிரட்டும் அப்படித்தான் :

எல்லா பிரட்டும் அப்படித்தான் :

சிலர், வெள்ளை பிரெட் கெடுதல் அது முற்றிலும் மைதா என்று கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட பழுப்பு வண்ண பிரெட்டை பயன்படுத்துகின்றனர். அவற்றில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் இருக்கலாம், ஆயினும், கெமிக்கல் மற்றும் ஈஸ்ட் சேரும்போது, அவற்றின் ஆற்றல் பாதித்து, இரசாயன உப்புக்களின் தன்மையே அதிகரித்து விடுகிறது.

துரித உணவுகள் தரும் பாதிப்புகளைப் போக்க...

துரித உணவுகள் தரும் பாதிப்புகளைப் போக்க...

தினமும் பிரெட் சாப்பிடுவதில்லை, ஆனாலும், அவ்வபோது சாப்பிட வேண்டிய நிலை, வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் உணவைத் தானே சாப்பிட வேண்டி இருக்கிறது, இந்த பாதிப்புகளை தவிர்க்க ஏதேனும் வழிகள் உள்ளனவா என்று சிலர் கேட்கக்கூடும்.

ப்ரெட் இல்லை எந்த துரித உணவாக இருந்தாலும், அவற்றை உண்ட பின்னர், சிறிது, பழங்கள், வெள்ளரி அல்லது மோர் இவற்றைப் பருகி வர, பாதிப்புகள் உடலில் சேராமல், வெளியேறி விடும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

ஆயினும், உடலில் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, மிக அவசியம். நிற்கக்கூட நேரமில்லாமல், ஓடியாடி உழைப்பது எதற்காக? காரணங்கள் பலவாக இருந்தாலும், ஒரு வாய் சாப்பாடு நிம்மதியாக உண்ண வேண்டும் என்பது தானே, அதன் முடிவாக இருக்க முடியும்?

ஒரு வேளை சாப்பாட்டைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல், கிடைத்ததைத் தின்று, பசியை விரட்டாமல், உணவிலும், தரமான சாப்பாட்டிலும் அக்கறை செலுத்த, உடல் நலமாகும், மனமும் வளமாகும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What happens when you eat bread often

What happens when you eat bread often
Story first published: Thursday, December 28, 2017, 13:40 [IST]